Followers

Sunday, June 20, 2010


நட்சத்திரங்களின் பொதுகருத்து


அசுவினி

அசுவம் என்றால் குதிரை, அசுவினி நட்சத்திரம் ஒரு குதிரை போல வானத்தில் காணப்படும். இந்த நட்சத்திரத்தின் குணம் சத்துவ குணம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகாகவும்.திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். பிறர்பொருளுக்கு ஆசைபடமாட்டார்கள்.வானத்தில் கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 8.24 மணி முடிவு 10.00 மணி

பரணி

பரணியில் பிறந்தவர்கள் செல்வந்தராகவும். திறமை மிக்கவராகவும் எதையும் செய்யும் ஆற்றல் படைத்தவராகவும் பலராலும் போற்றக்கூடியவராகம் காணப்படுவார். தாய் தந்தையரை மதிப்பார்கள்.பரணி நட்சத்திரம் அடுப்பு உருவம் போல் காட்சி அளிக்கும். பரணி நட்சத்திரம் எமனின் நட்சத்திரம் அதனால் இந்த நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது. இந்த நட்சத்திரத்தில் வீட்டில் அடுப்பு வைக்கலாம்.தென்கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 12.00 மணி முடிவு 13.36 மணி

கிருத்திகை

கிருத்திகையில் பிறந்தவர்கள் நல்ல மனமுடையவர்களாகவும் திகழ்வார்கள். இரக்க மனம் இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள்.கார்த்திகை நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களை உளளடங்கியது. இது அக்னி பகவானின் நட்சத்திரம் ஆகும்.அதனால் இந்த நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது. தெற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 20.00 மணி முடிவு 21.36 மணி.

ரோகிணி

ரோகிணியில் பிறந்தவர்கள் நேர்மையானவராக இருப்பார். அன்போடு பழகுவார்கள் மனைவியிடம் அல்லது கணவர்களிடம் அன்போடு ஆதரவுடன் பழகுவார்கள். அடுத்தவர்களிடம் இனிமையாகவும் பாசத்துடன் பேசுவார்கள். இந்த நட்சத்திரம் பிரம்மனின் நட்சத்திரமாகும். ரோகினி நட்சத்திரம் வானத்தில் வண்டிச்சக்கரம் போலத் தோற்றமளிக்கிறது. தென் மேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 5.36 மணி முடிவு 7.12 மணி.

இன்னும் வரும் ...

No comments: