Followers

Tuesday, June 22, 2010


நட்சத்திரங்களின் பொதுகருத்து தொடர்ச்சி



மிருகசீரிஷம்


மிருகசீரிஷம் வானத்தில் மானின் தலைபோல் காட்சி அளிக்கும். இது சந்திரன் பிறந்த நட்சத்திரம். மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்பமான வாழ்க்கை நடத்துபவராகவும் வாழ்க்கையை ரசிப்பவராகவும் இருப்பவராகவும். பேச்சில் கண்டிப்பும் இருக்கும். அதுபோல் இவர்களிடம் பணமும் தாராளமாக வரும். இவர்கள் எடுக்கிற காரியங்களில் திறமையாக செய்வார்கள். இந்த நட்சத்திரம் உடலற்ற நட்சத்திரம் ஆகும். இது உடலற்ற நட்சத்திரம் ஆகுதலால் சுபகாரியங்கள் எதும் செய்தல் கூடாது. இது வானத்தில் மேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 12.00 மணி முடிவு 13.36 மணி.

திருவாதிரை

திருவாதிரை இது வானத்தில் பவளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் தான் சிவன் தோன்றினார். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடபடுகிறது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சு ஆற்றல் உடைவராக இருப்பார்கள். சிலபேர் செய்நன்றி மறந்தவராகவும் இருப்பார்கள் தாய் தந்தையரை கவனிக்கமாட்டார்கள். இது வானத்தில் வடமேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 16.00 மணி முடிவு 17.36 மணி.

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரம் வானத்தில் வில்போல் காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரம் சுபம்அற்ற நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்க்கை நடத்துவார்கள். இந்த நட்சத்திரத்தில் தான் இராமபிரான் அவதரிதார். அவர் பட்ட பாடு அனைவரும் அறிந்ததே. நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் பயப்பட வேண்டியதில்லை ஏன் என்றால் அனைத்தும் பொது விதிதான். ஒன்று இல்லை என்றால் இன்னொன்று உங்களுக்கு கிடைக்கும். சொல்லியவைகள் அனைத்தும் பொதுபலன். இந்த நட்சத்திரம் தலையற்ற நட்சத்திரம் ஆகும். இது தலையற்ற நட்சத்திரம் ஆகுதலால் சுபகாரியங்கள் எதும் செய்தல் கூடாது. இது வானத்தில் வடக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 5.36 மணி முடிவு 7.12 மணி.

பூசம்

பூசம் நட்சத்திரம் வானத்தில் பூ போல தோற்றமளிக்கும். இது குருவின் நட்சத்திரம் ஆகும். பூசத்தில் பிறந்தவர்கள் நன்றாக கற்றவராக இருப்பார்கள். தாராளமான மனசு இவர்களுக்கு இருக்கும். நல்ல பழக்கவழக்கங்கள் இவர்களுக்கு இருக்கும். இது வானத்தில் வடகிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 6.24 மணி முடிவு 8.00 மணி

பார்க்கலாம் ...

No comments: