Followers

Saturday, June 26, 2010

நட்சத்திரங்களின் பொதுகருத்து தொடர்ச்சி



ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரம் வானத்தில் பாம்பு போல் காட்சி அளிக்கும். இந்த நட்சத்திரம் ஆதிசேசனின் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தை பற்றி சொல்லிகொள்ள அவ்வளவு விசேஷம் இல்லை என்று கருத்து உள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வஞ்சிப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியாருக்கு ஆகாது என்ற கருத்து உள்ளது. இது தவறான கருத்து ஆகும். இது வானத்தில் கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 16.00 மணி முடிவு 17.36 மணி.இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில்
இருந்து எடுக்கப்பட்டது.


மகம்

மகம் நட்சத்திரத்திம் பித்ரு தேவதைகளுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்துடன் செல்வத்துடனும் இருப்பர். சுயநலம் அதிகமாக இருக்கும். இந்த நட்சத்திரம் வானத்தில் வீடு போல் காட்சி அளிக்கிறது. இது வானத்தில் தென்கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 8.00 மணி முடிவு 9.36 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.




பூரம்


பூரம்
நட்சத்திரம் வானத்தில் ஒரு கட்டில் கால் போல் காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் இனிமையாக பேசுவார்கள். எல்லோராலும் பாராட்டப்பெறுவார்கள். எல்லோரையும் நேசிப்பார்கள். இது வானத்தில் தெற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 12.00 மணி முடிவு 13.36 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.





உத்திரம்

உத்திரம் நட்சத்திரம் வானத்தில் கட்டில் கால் போல் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசபோக வாழ்க்கை நடத்துவார்கள். உயர்ந்த கல்வி கற்பார்கள் புகழ் பெறுவார்கள். இவாகள் கலைகளை விரும்பி ரசிப்பார்கள். இது வானத்தில் தென்மேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 13.12 மணி முடிவு 14.48 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


பார்க்கலாம் ...

No comments: