Followers

Saturday, June 26, 2010

நட்சத்திரங்களின் பொதுகருத்து தொடர்ச்சி




ஸ்தம்
இது
வானத்தில் பலகை போன்று காட்சி அளிக்கும். அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணங்கள் அவ்வளவாக நன்றாக இருக்காது. பிறர் பொருள்களை கவருபவராகவும் இருப்பார்கள். நல்ல செல்வாக்குடன் வாழ்வார்கள். எடுக்கிற காரியங்களில் முயற்சியுடன் இருந்து வெல்வார்கள். இது வானத்தில் மேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 2.48 மணி முடிவு 4.24 மணி.இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு சாதாரணமான வாழ்க்கை வாழ்பவராகவும் இனிமையாக பேசகூடியவராகவும் இருப்பார்கள். இவர்கள் அழகிய கண்கள் உடைவராகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரம் வானத்தில் முத்துப்போல் காட்சி அளிக்கும். இது வானத்தில் வடமேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 6.24 மணி முடிவு 8.00 மணி.இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

சுவாதி
சுவாதி நட்சத்திரம் பிரகாசமாக வானத்தில் மின்னிக் கொண்டிருக்கிறது. சுவாதி நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்தால் மிகவும் கொடுத்துவைத்தவர் ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வேலையை எடுத்தார்கள் என்றால் அதனை முடித்துவிட்டுதான் அமருவார்கள். அந்தளவுக்கு உழைப்பாளிகள். இது வானத்தில் வடக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 8.48 மணி முடிவு 10.24 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.










விசாகம்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் தான் முருக பெருமான் அவதரித்தார். எதையும் செய்து முடிப்பார்கள் பேசும் திறன் உடைபவர்களாகவும் இருப்பார்கள். சண்டைகள் போடுபவர்களாகவும் இருப்பார்கள். இது வானத்தில் வடகிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 8.00 மணி முடிவு 9.36 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


1 comment:

தமிழ்மணி said...

சிறப்பான வலை பதிவு......
தொடருங்கள்....
இன்னும் சிறப்பாக வாழ்த்துக்கள்