Followers

Wednesday, January 4, 2012

சோதிட அனுபவ தொடர் 1



திரு. மணி அவர்கள் எனக்கு பின்னோட்டம் இட்டார் உங்கள் சோதிட அனுபவத்தை எழுதுங்கள் என்று அவர்களின் சோதிட ஆர்வத்தை நிறைவேற்றவும் அத்துடன் நீங்களும் தெரிந்துகொள்ளலாம் என்று ஒரு ஜாதகத்தை தருகிறேன்.

என்னிடம் சில தினங்களுக்கு முன்பு வந்த ஜாதகத்தை தருகிறேன்.


பிறந்த தேதி: 03-03-1973
பிறந்த நேரம் 5 :30 மாலை
பிறந்த ஊர்: விழுப்புரம்.


வாழ்க்கையை வெறுத்து இருப்பவரின் ஜாதகம் கிரகங்கள் இவரின் வாழ்க்கையில் விளையாடிய தாண்டவத்தை பாருங்கள்.

இவரின் ஜாதகம் கீழே



லக்னம் சிம்மம். சிங்கம் போன்ற சிம்ம லக்கினத்தை பெற்றவர் எதற்கும் அஞ்சா நெஞ்சம் வீரமும் இவரிடம் இருக்கிறது. எந்த மாதிரியான பிரச்சினை என்றாலும் யாரையும் பொருட்படுத்தாமல் செயலில் இறங்கி வெற்றியை காண்பவர். லக்கினாதிபதி களத்திரஸ்தானம் ஆன ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ளார்.

லக்கினாதிபதி சூரியன் இவர் சனியின் வீடாகியா கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்பவராக இருப்பார்கள் ஆனால் லக்கினாதிபதி சூரியன் 7 ஆம் வீட்டில் இருப்பதால் இவருக்கு திருமணமே நடைபெறுவில்லை.

லக்கினாதிபதி சூரியன் இவர் சனியின் வீடாகியா கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்பவராக இருப்பார்கள் ஆனால் லக்கினாதிபதி சூரியன் 7 ஆம் வீட்டில் இருப்பதால் இவருக்கு திருமணமே நடைபெறுவில்லை.

பொதுவாக 7 ஆம் வீட்டில் லக்கினாதிபதி இருந்தால் வாழ்க்கையில் பிற்பகுதியில் ஆசாபாசங்களில் விடுபட்டு சன்யாசி வாழ்க்கை நேரிடும் இது விதி. எத்தனை நாள் தான் மனைவியின சம்பாத்தில் வாழ்வது. மனைவி பணம் கொடுத்து விட்டு கணவனை உண்டு இல்லை என்று வார்த்தையாலே அபிஷேகம் செய்து விடுவார்கள். இந்த வாழ்க்கையை வேண்டாம் என்று சன்யாசியாகவே போய்விட வேண்டும் என்று சொல்வார்கள்.

என்னிடமே இந்த மாதிரி நபர்கள் சொல்லியுள்ளார்கள். சில பேர் என்னுடைய பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் இந்த ஜாதகருக்கு திருமணமே ஆகவில்லை.

சூரியன் ஏழில் இருந்து லக்கினத்தை பார்ப்பதால் ஒன்று தலை வழுக்கை ஆக வேண்டும் அல்லது தலையில் அடிபடும். இவருக்கு தலையில் அடிப்பட்டு தலை மயிர் வெளியில் வராதிருக்க மொட்டை அடித்துக்கொண்டுள்ளார்.

பொதுவாக லக்கினாதிபதி ஏழில் அமர்ந்தாள் ஏழாம் பார்வையாக லக்கினத்தை பார்த்து நன்றாக வைத்துக்கொள்வார் என்று பொருள். ஆனால் இவரின் ஜாதகத்தில் சூரியன் ஏழில் சனியின் வீட்டில் அமர்ந்ததால் தலையில் அடிப்பட்டது. இவருக்கு எப்பொழுது அடிப்பட்டது என்று பின்பு பார்க்கலாம்.

அடுத்தது குடும்ப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் வீடு. அதன் அதிபதி புதன் இவர் மறைவிடம் என்று சொல்லக்கூடிய 8 ஆம் வீட்டில் மாந்தியுடன் இருக்கிறார். புதன் கெட்ட கிரகத்துடன் சேர்ந்தால் புதன் கெட்டுவிடும். அதுவும் மறைவு ஸ்தானத்தில்.

பொதுவாகவே இரண்டாம் வீடு கெட்டால் குடும்பம் அமையாது. இவருக்கும் திருமணமும் ஆகவில்லை வீட்டிலும் இல்லை. தனியாக வாழ்ந்து வந்தார் இப்பொழுது இளைய சகோதரிடம் இருக்கிறார்.

இரண்டாம் வீட்டிற்க்கு குருவின் 9 ஆம் பார்வை விழுகிறது. அதனால் ஒரளவு பொருளாதாரத்தில் நன்றாக இருக்கிறது. இரண்டாம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் மறைந்ததால் அதிகம் பேசுவதும் கிடையாது அப்படியே பேசினாலும் வார்த்தை தடிமனதாகத்தான் வருகிறது. பொதுவாக 2 ஆம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் அவர்கள் பேசுவது இறப்பு சம்பந்தமாகதான் இருக்கும்.

ஞானிகளின் ஜாதகங்களில் இரண்டாம் வீடு 8 ஆம் வீட்டுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் ஒருவன் இறப்பை பற்றி சிந்தித்தால் மட்டுமே ஞானியாக முடியும். இறப்பை பற்றி பேசாத ஞானிகள் உண்டா.

சில பேருக்கு இரண்டாம் வீடு கெட்டும் குடும்ப வாழ்க்கை அமையும் அது எப்படி ?

சில பேர் ஜாதங்கள் அப்படி இருக்கும். ஆனால் அவர்கள் குடும்பத்திற்க்கு வெளியில் எங்கே ஆவது வேலை செய்வார்கள் அல்லது வெளிநாடுகளில் இருப்பார்கள் வேடந்தாங்களுக்கு பறவைகளில் வருவது போல் குடும்பத்திற்க்கு வந்து செல்வார்கள்.

சில பேர் திருமணம் முடிந்து 10 அல்லது 15 நாட்கள் மட்டும் தான் மனைவியுடன் இருப்பார்கள். வேலைக்காக வெளிநாடு சென்றுவிடுவார்கள். என்னடா இந்த மாதிரி எல்லாம் இருக்க என்று நினைக்க தோன்றும் இந்தமாதிரி நபர்கள் நிறைய பேர் உண்டு.

ஒருவருக்கு திருமணம் நடைபெற வைப்பது ஏழாம் வீடு. குழந்தை பாக்கியத்தை தருவது ஐந்தாம் வீடு ஆனால் இவை இரண்டு வீடுகளும் நல்ல பலன் தர வேண்டும் என்றால் இரண்டாம் வீடு நன்றாக இருக்க வேண்டும் பொதுவாக இரண்டாம் வீடு கெட்டால் திருமண வாழ்க்கை குழந்தை பாக்கியம் தடைபடுகிறது.

இவருக்கு இரண்டாம் வீட்டு காரத்துவும் நடக்க வேண்டும் என்றால் குரு பார்வையால் தான் முடியும். இரண்டாம் வீட்டிற்க்கு குருவின் பார்வை இருக்கிறது நல்லவன் ஒருவன் இருந்தாலே போதும் அனைத்திலும் வெற்றி கண்டுவிடலாம். ஆனால் இவருடைய துரதிஷ்டம் குரு மகரத்தில் நீசமாக அமர்ந்து உள்ளது. நீசம் ஆகி அமர்ந்ததால் சரியான காலத்தில் நடைபெறவேண்டியது காலம் தாழ்ந்துவிட்டது இதுவரை நடைபெறவில்லை.

குரு இவருக்கு 6 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். 6 ஆம் வீடு என்பது மிக மோசமான வீடு அந்த வீட்டில் சுபகிரகம் அமர்ந்தாள் மிக மோசம் குரு இவருக்கு 6 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார்.

பொதுவாக கெட்ட கிரகங்கள் ஒருவனுக்கு தீங்கு செய்கிறது என்றால் போனால் போகட்டும் சாப்பிட சாப்பாடுனாலும் கிடைக்கும் ஆனால் குரு கெடுதல் செய்ய ஆரம்பித்தால் சாப்பிட சாப்பாடு கூட கிடைக்காது. அதுதான் குருவின் தன்மை.

அடுத்தது மூன்றாம் வீடு மூன்றாம் வீடு துலாம் ராசியாக இருக்கிறது அதன் அதிபதி சுக்கிரன் மூன்றாம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருக்கிறார்.

ஒரு இளைய சகோதரர் ஒருவர் நல்ல நிலைமையில் இருக்கிறார். இவர் சுயதொழில் செய்வதை விட ஏதாவது ஒரு வேலையில் சேருவது நல்லது. இவர் ஒரு பிரவேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மூன்றாம் வீடு தைரிய ஸ்தானம் ஆகியால் எதிலும் தைரியமாக செயல்பட்டு வந்தார் மூன்றாம் வீட்டு அதிபதி சுக்கிரன் சில நேரங்களில் பெரிய ஆபத்துகளில் சிக்க நேரிடும். அப்படி தான் இவரும் ஒரு சிக்கலில் மாட்டினார்.இளைய சகோதரிடம் சுமுகமான உறவு உண்டு.

அடுத்தது நான்காம் வீடு விருட்சக ராசியாக அமைகிறது அதன் அதிபதி செவ்வாய். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். நான்காம் வீடு தாய் பற்றிய வீடாக இருப்பதால் இவரின் தாயார் நலமாக உள்ளார். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் தாயாரின் தம்பி ஒருவர் நல்ல செல்வாக்காக இருக்கிறார். நான்காம் வீடு வாகனங்களை குறிப்பதால் வாகன யோகம் இருக்கிறது.

செவ்வாய் ஐந்தாம் வீட்டில் ராகுகூட இருக்கிறது. செவ்வாய் பாதிக்கபட்டு இருக்கிறது சொத்துகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொந்த வீடு இடிக்கப்பட்டு வாடகை வீட்டில் இருக்கிறார். பொதுவாக நான்காம் வீடு செவ்வாய் வந்தால் நல்ல வீடு அமையும். ஆனால் செவ்வாய் பாதிக்கப்பட்டதால் இவருக்கு நிலையான வீடு அமையவில்லை.

ஜாதகம் என்பதே சென்ற பிறவியில் என்ன தவறு செய்து இந்த பிறவியை எடுத்து இருக்கிறது என்று பார்க்கதானே. சென்ற பிறவியில் நல்லது செய்தால் இந்த பிறவியில் நல்ல யோகத்துடன் பிறக்கலாம். சென்ற பிறவியில் தீமை அதிகம் இருந்தால் அவயோகத்துடன் பிறக்கும்.

சென்ற பிறவியை பற்றி எப்படி தெரிந்துகொள்வது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

6 comments:

velu said...

அய்யா
இந்த ஜாதகத்தில் அணைத்து ராசியும் ராகு கேதுவிற்கு இடையில் உள்ளது. அது கால சர்ப்ப தோஷம். மேலும் இது இவருக்கு தடங்கள் கொடுகிறது.
கோவை வேலு

Trading Options said...

Excellent analysis, very helpful for students like me.

Jupiter is the 5th and 8th house lord. Any benefit from 8th house lord in 6th house (viparita raja yoga)?

Saturn is seeing the 4th house. I guess it is also a minus point?

rajeshsubbu said...

/* velu said...
அய்யா
இந்த ஜாதகத்தில் அணைத்து ராசியும் ராகு கேதுவிற்கு இடையில் உள்ளது. அது கால சர்ப்ப தோஷம். மேலும் இது இவருக்கு தடங்கள் கொடுகிறது.
கோவை வேலு */

வேலு தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி . நீங்கள் சொல்வது போல இருக்கலாம் பாதி தான் பார்த்திருக்கிறோம். அடுத்த பதிவில் பார்க்கலாம்.

rajeshsubbu said...

/ *Trading Options said...
Excellent analysis, very helpful for students like me.

Jupiter is the 5th and 8th house lord. Any benefit from 8th house lord in 6th house (viparita raja yoga)?

Saturn is seeing the 4th house. I guess it is also a minus point?
*/
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி . ஜாதங்கம் பார்க்கும் போது லக்கினத்தை பார்த்துதான் பலன் சொல்லவேண்டும். ராசி கோசரபலன்களுக்கு ஒத்து வரும். ஜாதகத்தை முழுமையாக பார்த்திருவோம். அடுத்த பதிவில் பார்க்கலாம்.

MANI said...

வணக்கம் திரு. ராஜேஷ்சுப்பு, உங்கள் ஜோதிட அனுபவத்தை எழுத முன்வந்தமைக்கு மிக்க நன்றி. தொடர் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது. தொடர்ந்நு எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

rajeshsubbu said...

/* MANI said...
வணக்கம் திரு. ராஜேஷ்சுப்பு, உங்கள் ஜோதிட அனுபவத்தை எழுத முன்வந்தமைக்கு மிக்க நன்றி. தொடர் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது. தொடர்ந்நு எழுதுங்கள். வாழ்த்துக்கள். */

வாருங்கள் தங்கள் வருகைக்கு நன்றி.