Followers

Tuesday, January 3, 2012

புதன் தொடர்ச்சி 1





கடந்த பதிவில் புதனைப் பற்றி பார்த்தோம். இப்பதிவிலும் புதனைப் பற்றி பார்க்கலாம். புதன் மிதுனம் ராசிக்கும் கன்னி ராசிக்கும் அதிபதி. புதன் ஒரு இரட்டை கிரகம் இந்த ராசியில் பிறந்தவர்களைப் பற்றி பார்த்தீர்கள் ஆனால் இவர்கள் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி பேசுவார்கள். இரட்டை வேஷம் மிகுதியாக இருக்கும்.

நீங்கள் இவர்களிடம் போய் எதனை கேட்டாலும் உங்களிடம் ஒன்று பேசிவிட்டு உங்கள் நண்பர்களிடம் உங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொள்வார்கள். புதனின் இயல்பு இது. மிதுனம் கன்னி ராசிகாரர்கள் காமத்தில் மிகுதியான ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது தாமதமாகிறது.

முறையற்ற தொடர்பு கர்மத்தை விலை கொடுத்து வாங்குவது போல் தான் இதனை இவர்கள் தவிர்க்க வேண்டும். நான் பார்த்த இந்த ராசிகாரர்களின் ஜாதகங்களில் மிகுதியான நபர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடைபெறுவது தாமதமாகிறது.

4 ஆம் வீட்டில் புதன் இருந்தால் நல்ல கல்வியாற்றலைத் தருவார். தாய்வழி மாமன் வகையில் உதவி கிடைக்கும். வாகனம் வகையில் நல்ல வருமானம் வரும். ஒரு வாகனம் வாங்கினால் உடனே அடுத்த வாகனம் வாங்குவார். நான்காம் வீடு வீட்டை குறிப்பதால் வீடு வாங்கும் யோகம் புதனால் கிடைக்கும். ஒரு வீட்டை வாங்க ஏற்பாடு செய்தால் இரண்டு வீடு வாங்குவார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

5 ஆம் வீட்டில் புதன் இருந்தால் நல்ல கவிதை எழுதுவார். நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மூலம் நல்ல பதவிகள் வரும். பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். நல்ல தந்திர வேலைகள் தெரியும்.

6 ஆம் வீட்டில் புதன் இருந்தால் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மாமனின் உதவி கிடைக்கும். ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் விரோதிகள் வராமல் இருக்க வைப்பார். ஆனால் சச்சரவு இருக்கும். பேச்சு சில நேரங்களில் கலவரத்தை உண்டாக்குவது போல் இருக்கும்.

7 ஆம் வீட்டில் புதன் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும். அவர் மூலம் வருமானம் வரும். வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் கிடைக்கும். மாமன் மகள் கூட மனைவியாக வர வாய்ப்பு இருக்கிறது. அல்லது திருமண விஷயங்களில் மாமன் உதவி கொண்டு திருமணம் வரும். மாமனே பெண் பார்க்கலாம்.

மேலை சொன்ன அனைத்தும் பொதுபலன்கள் தான் எனக்கு மிதுன ராசி கன்னி ராசி நீங்கள் சொன்னது போல் நடக்கவில்லை என்று சொல்லாதீர்கள் ஜாதகங்களில் உள்ள கிரக நிலைகளை பொருத்து அமையும்.

புதனைப்பற்றிய பல தகவல்களுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

2 comments:

MANI said...

வணக்கம் ராஜேஷ்சுப்பு உங்களின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். பொதுப்பலன்களாக எழுதுவதை விட சிறப்பு பலன்கள் அனுபவத்தில் பலிதமான ஜாதக பலன்களாக எழுதினால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

rajeshsubbu said...

/*
MANI said...
வணக்கம் ராஜேஷ்சுப்பு உங்களின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். பொதுப்பலன்களாக எழுதுவதை விட சிறப்பு பலன்கள் அனுபவத்தில் பலிதமான ஜாதக பலன்களாக எழுதினால் இன்னமும் சிறப்பாக இருக்கும். */

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி