Followers

Thursday, January 19, 2012

குரு





குருவை பற்றி பார்க்கலாம் நவகிரங்களில் முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் தான். இவர் ஒருவர் நல்ல நிலைமையில் இருந்தாலோ போதும் எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நிலை கிடைக்கும். இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்கியம் திருமணம் நல்ல முறையில் பணவரவுகள் ஆகியவை ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.

1 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.

2 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

3 ஆம் வீட்டில் குரு இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.

4 ஆம் வீட்டில் குரு இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.

5 ஆம் வீட்டில் குரு இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.

6 ஆம் வீட்டில் குரு இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

5 comments:

Astro வெங்கடேஷ் said...

ஒருவருக்கு குரு லக்னம் மற்றும் ராசி அதிபதியாக இருக்கார்.ஆனா இரண்டாமிடமான மகரத்தில் நீசமாக உள்ளார்.லக்னாதிபதியே நீசமாக உள்ளார்.இதன் பலன் மற்றும் பரிகாரம் என்ன?

Astro வெங்கடேஷ் said...

சரி...நீங்கள் பதிவு எழுதியிருப்பதோ நவகிரகங்களில் ஒருவரும் தேவகுருவுமான ப்ருஹஸ்பதி எனும் வியாழனை பற்றி.

...ஆனால் சம்மந்தமே இல்லாமல் சிவாம்சமான ஞான குரு தட்சிணாமூர்த்தி படம் போட்டுள்ளீர்களே?

யானை வாகனத்தோடு உள்ள குருவின் படத்தை தானே போடவேண்டும். "குரு"விலேயே குழப்பமா?

rajeshsubbu said...

//ஆகமக்கடல் said...
ஒருவருக்கு குரு லக்னம் மற்றும் ராசி அதிபதியாக இருக்கார்.ஆனா இரண்டாமிடமான மகரத்தில் நீசமாக உள்ளார்.லக்னாதிபதியே நீசமாக உள்ளார்.இதன் பலன் மற்றும் பரிகாரம் என்ன?//

வாருங்கள் வணக்கம் தங்கள் கேள்விக்கு பதிவில் பதில் எழுதுகிறேன்.

rajeshsubbu said...

// ஆகமக்கடல் said...
சரி...நீங்கள் பதிவு எழுதியிருப்பதோ நவகிரகங்களில் ஒருவரும் தேவகுருவுமான ப்ருஹஸ்பதி எனும் வியாழனை பற்றி.

...ஆனால் சம்மந்தமே இல்லாமல் சிவாம்சமான ஞான குரு தட்சிணாமூர்த்தி படம் போட்டுள்ளீர்களே?

யானை வாகனத்தோடு உள்ள குருவின் படத்தை தானே போடவேண்டும். "குரு"விலேயே குழப்பமா? //

படத்தை மாற்றிவிட்டேன்.

Astro வெங்கடேஷ் said...

சார் திரும்பவும் நீங்க தட்சிணாமூர்த்தி படத்தைதான் போட்டுருக்கிங்க