Followers

Tuesday, February 7, 2012

கிருஷ்ணமூர்த்தி பத்ததி




அனைவருக்கும் வணக்கம் இன்று தை பூசம் முருகனுக்கு உகந்த நாள். எப்பொழுதும் செவ்வாய் எதிரி சனிதான் ஆனால் சனியின் வீட்டில் தான் செவ்வாய் உச்சம் பெறுகிறார். சனியின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் அனைத்து முருகன் கோவிலிலும் விஷேசம். நாம் பார்த்துக்கொண்டு இருப்பது சனி பகவானை தான் அதனால் இந்த நன்னாளில் உங்களுக்கு ஒரு இனிய செய்தி.

நானும் ஒரு புதிய தலைப்பில் பாடம் நடத்தலாம் என்று முடிவெடுத்து K.P.Systems என்று சொல்லக்கூடிய கிருஷ்ணமூர்த்தி பத்ததி யை இனி தொடர் பதிவாக எழுத போகிறேன்.

பழைய பாடங்கள் இருக்கும் போது புதிய பாடங்கள் தேவையா?

சோதிடம் பாடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடல். ஒரே கடலே பார்த்துக்கொண்டிருந்தால் அலுத்துப்போய்விடும் அதனால் உங்களுக்கு அடுத்த கடலையும் சுற்றி காட்டலாம் என்று ஆரம்பிக்கிறேன். பழைய தலைப்புகளிலும் பாடங்களும் வரும். இதுவும் வரும். இதன் தலைப்பு கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்று வரும்.



கிருஷ்ணமூர்த்தி யார்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி என்னும் அருகில் இருக்கும் கூத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் ஒருமுறையை உருவாக்கியுள்ளார். அந்த முறை நட்சத்திரங்களை கொண்டு உருவாக்கியுள்ளார். அனைத்து பலன்களும் நட்சத்திரம் கொண்டுதான் முடிவு செய்யப்படும்.

இதன் சிறப்பு என்ன?

இது நட்சத்திர சோதிடம் அனைத்து பலன்களும் துல்லியமாக நடைபெறும். பரிகாரம் கிடையாது. துல்லியமாக நடைபெறும் என்றால் ஏன் சோதிடம் பார்க்கவேண்டும் என்று நினைக்க தோன்றுகிறதா அவர்கள் சொல்லும் காரணம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நல்லதோ கெட்டதோ நடைபெறும் பொழுது நல்லது நடந்தால் அந்த மனிதன் ஏற்றுக்கொள்கிறான்.

கெட்டது நடந்தால் அவனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. கெட்டது நடைபெறும் போது இவ்வாறு நடக்கும் என்று தெரிந்தால் அவனால் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடும் அதனால் தான் இந்த சோதிடம். 100 சதவீதம் சோதிடத்தை நிருபணம் செய்யவேண்டும் என்று வேட்கையுடன் கிருஷ்ணமூர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்ட முறை தான் கிருஷ்ணமூர்த்தி பத்ததி.

நீங்களே உங்கள் வாழ்வில் பார்த்து இருப்பீர்கள் கெட்டது நடக்கும் போது அந்த சோதிடன் சொன்னன் ஐயா இந்த மாதிரி நடக்கும் என்று அந்தமாதிரியே நடந்துவிட்டது என்று சொல்லுவார்கள் அப்பொழுது மனது ஏற்றக்கொள்ளும் நடக்கும் பலன் கண்டிப்பாக நடக்கும் என்று கருத்தில் கொண்டுவரப்பட்டது தான் இந்த கிருஷ்ணமூர்த்தி பத்ததி.

இந்த தொடர் எப்படி எழுதலாம் என்று உங்கள் விருப்பங்களை தெரியபடுத்துங்கள் நான் முதன் முதலில் வலைபதிவில் எழுதும்போது எனக்கு வழிகாட்டி கிடையாது. எப்படி எழுதினால் படிப்பவருக்கு பிடிக்கும் என்று தெரியாது ஆனால் இன்று நானும் எழுதுவேன் என்று வருகிறார்கள் .அனைவரும் சோதிடத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் வருகிறார்கள்.உங்கள் சோதிட ஆர்வத்தின் மேல் உள்ள ஈர்ப்பால் இந்த புதிய முறையும் கற்று தருகிறேன்.

உங்களுக்கு அந்த பழையமுறை இருக்கும் போது இதனை கற்றால் ஏதும் குழப்பம் வரலாம் என்று நினைக்கலாம் நான் போதுமான அளவு மிக தெளிவாக கற்று தருகிறேன். நீங்கள் பயப்பட தேவையில்லை.

இந்த புதிய பாடத்தைப் பற்றி உங்கள் கருத்துக்களை கூறலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

12 comments:

gvsivam said...

மிகவும் நல்ல செய்தி.
பதிவை படிக்க ஆர்வமாக உள்ளேன்.தொடருங்கள்

rajeshsubbu said...

//* venkatesa gurukkal said...
மிகவும் நல்ல செய்தி.
பதிவை படிக்க ஆர்வமாக உள்ளேன்.தொடருங்கள் *//

வாருங்கள் உங்கள் வருகைக்கு நன்றி.

daran said...

மிகவும் நன்றி.
தங்களின் பதிவை படிக்க ஆர்வமா உள்ளேன்.

தமோதரன்

rajeshsubbu said...

//* daran said...
மிகவும் நன்றி.
தங்களின் பதிவை படிக்க ஆர்வமா உள்ளேன்.

தமோதரன் *//
வாருங்கள் தங்கள் வருகைக்கு நன்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரியபடுத்துங்கள்

Trading Options said...

Sir, all the best; eagerly waiting for your posts. - siva

R.Ravichandran said...

I am eagarly waiting for this. continue this. Best wishes

R.Ravichandran said...

I am waiting eagarly for this. Please continue this. Best wishes

perumal shivan said...

mikka nanri ! thodarungal

MANI said...

பதிவு எப்போது வரும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். எனக்கும் அதில் நிறைய சந்தேகங்கள், விளக்கங்கள் பெற வேண்டியிருக்கிறது.

krishnakumarr said...

i am waitng for this subjuct sir.

Unknown said...

Very much interested to learn KP . Not many write in KP in Tamil. I see mostly north indian astrologists use KP system.
Eagerly waiting ...
Thanks in advance sir,

Mani

rajeshsubbu said...

//*Mani astro said...
Very much interested to learn KP . Not many write in KP in Tamil. I see mostly north indian astrologists use KP system.
Eagerly waiting ...
Thanks in advance sir,

Mani*??

வணக்கம் நண்பரே பல வேலைகளால் அதனை விட்டுவிட்டேன். பார்க்கலாம் எதிர்காலத்தில் எழுதப்படலாம்