Followers

Sunday, May 27, 2012

அடிப்படை தகவல்கள்



வணக்கம் நண்பர்களே ! 
 கட்டண சோதிடம் ஆரம்பித்தவுடன் ஒரு சிலர் மட்டும் தொடர்பு கொண்டுள்ளார்கள் அவர்களுக்கு விரைவில் ஆலோசனை தருகிறேன். இலவச சோதிட ஆலோசனையில் வந்தவர்கள் தான் கட்டண சோதிடத்திற்க்கு வந்துள்ளார்கள். அவர்களை வரவேற்கிறேன். 

இந்த பதிவில் சோதிடத்திற்க்கு தேவையான சில அடிப்படை தகவல்களை பார்க்கலாம்.இதனைப் பற்றி நான் முன்பே பதிவில் எழுது இருக்கவேண்டும் இருந்தாலும் பரவாயில்லை இப்பொழுது தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு ஜாதகத்தில் கிரக அமைப்பில் கேந்திரம், மூலத்திரிகோணம், பணபரம் ஆகியவை முக்கியமானவை. இவற்றில் தங்கி இருக்கும் கிரகங்கள் நல்ல பலனை ஒருவருக்கு தரும்.

 நாம கடந்த பதிவில் தசாபலன்களைப் பற்றி பார்த்தோம் அல்லவா. ஒருவருக்கு மிக கெடுதலான தசாபலன் நடந்தாலும் கேந்திரம், மூலத்திரிகோணம், பணபரம் ஆகியவை நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் கவலைபட தேவையில்லை கெட்ட நேரத்திலும் தப்பித்துவிடுவார்.  

உங்களுக்கு எந்த நல்ல பலனையும் தருவது லக்கனம் தான் மிக முக்கியம்.  லக்கினாதிபதி நன்றாக இருந்தால் அனைத்தையும் பெற்றுவிடலாம்.  எந்த சோதிட கணக்கையும் லக்கனத்தை வைத்துதான் மதிப்பிட முடியும். 

கேந்திரம்

லக்கினமே முதல் கேந்திரம் ஆகும். அதற்கு நான்காவது வீடு இரண்டாவது கேந்திரம். ஏழாவது வீடு மூன்றாவது கேந்திரம். பத்தாவது வீடு நான்காவது கேந்திரம் இந்த நான்கு வீடுகளே கேந்திரம் ஆகும். இந்த நான்கு வீட்டிலும் கிரகங்கள் தங்கினால் நல்லது ஒருவருக்கு நான்கு வீட்டிலும் கிரகங்கள் தங்குவது என்பது மிக அரிது. நான்கு வீட்டிற்க்கு இரண்டு வீட்டில் தங்கினாலும் நல்லது தான் பரவாயில்லை.

மூலத்திரிகோணம்

லக்கினமே முதல் திரிகோணம் ஆகும். ஐந்தாவது வீடு இரண்டாவது திரிகோணம் ஆகும். ஒன்பதாவது வீடு மூன்றாவது திரிகோணம் ஆகும்.

பணபரம்

இரண்டாவது வீடு முதல் பணபரம். ஐந்தாவது வீடு இரண்டாவது பணபரம், எட்டாவது வீடு மூன்றாவது பணபரம் ஆகும். பதினோன்றாவது வீடு நான்காவது பணபரம் ஆகும்.  இந்த வீட்டில் தீயகிரகங்கள் தங்கினால் நல்லது என்று சோதிட சாஸ்திரம் கூறுகிறது. 


கேந்திரம், பணபரம் ஆகிய இரண்டு இடங்களிலும் தீய கிரகங்கள் தங்கி திரிகோணத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் முதல் தரம் என சொல்லலாம். 

கேந்திரம், பணபரம் ஆகிய இரண்டிலும் நல்ல கிரகங்கள் தங்கி திரிகோணத்தில் தீயகிரகங்கள் இருந்தால் ஐம்பது சதவீதம் நல்ல பலன் நடக்கும் என சொல்லலாம். 

கேந்திரம்,திரிகோணம்,பணபரம் ஆகியவற்றில் எந்த கிரகமும் தங்காமல் இருந்தால் மிக குறைந்த நற்பலன் மடடுமே நடைபெறும் என சொல்லலாம்.

இவை அனைத்தும் பொதுபலனே சில நேரங்களில் இவை அனைத்தும் பொய்யாக்கி நல்ல பலனை கொடுக்கும். அதுதான் சோதிடத்தின் ரகசியம். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: