Followers

Thursday, June 28, 2012

யாருக்காக கடன் ? பகுதி 1



வணக்கம் நண்பர்களே! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை பயணத்தை நடத்துவதற்க்கு பணம் தேவைபடுகிறது. இன்றைக்கு இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் இல்லை என்றால் அவனால் உயிருடன் வாழ்வது என்பது மிக அரிது. இந்தியாவே கடன் வாங்குகிறது. 

பணத்தை ஈட்டுவதில் பல வழிமுறைகள் உள்ளன. வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள் அல்லது தொழில் செய்து சம்பாதிக்கிறார்கள். பல வழிகளிலும் பணத்தை சம்பாதிப்பதில் தான் ஒவ்வொரு வரும் ஈடுபடுகிறார்கள்.

ஒரு வேலைக்கு போனாலும் அதில் சம்பாதிக்கும் பணம் சில பேருக்கு போதவில்லை அதனால் கடன் வாங்குகிறார்கள். சில பேர் கடன் வாங்கி தொழில் ஆரம்பிக்கிறார்கள். இதில் வங்கி மூலம் வாங்கும் பணத்திற்க்கு வட்டி குறைவாக இருந்தால் வங்கியில் கடன் வாங்கிறார்கள். சில பேர் கந்துவட்டிக்கு வாங்கி மாட்டிக்கொள்கிறார்கள். 

இன்றைக்கு இருக்கும் பொருளாதார நிலைக்கு கடன் வாங்காமல் காலத்தை தள்ளுவது என்பது மிகவும் அரிது.

நாம் பார்த்துக்கொண்டு இருப்பது ஆறாம் வீட்டின் தசாவை பற்றி தான் அந்த தசா தான் ஒருவருக்கு கடனை ஏற்படுத்துவதில் கில்லாடி. அது சம்பந்தப்படமால் யாரும் கடன் வாங்க முடியாது. 

இப்பதில் நாம் வாங்கும் கடன் யாருக்காக இருக்கும் என்பதை ஆறாம் வீட்டு தசா மூலம் உங்களுக்கு விளக்கபோகிறேன் வாங்க பார்க்கலாமா.

ஆறாம் அதிபதி லக்கினத்தில் சம்பந்தபட்டு தசா நடந்தால் அவரின் உடல்நிலைக்காக கடன் வாங்குவார். அவர் உடல் நிலை கோளாறு காரணமாக கூட கடன் பெறும் நிலை ஏற்படும். 

ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அவரின் குடும்ப செலவுக்காக கடன் வாங்குவார் அல்லது அவரின் கை செலவுக்காக கூட கடன் வாங்கலாம்.

ஆறாம் அதிபதி மூன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டால் தன்னுடைய இளைய சகோதர சகோதரிகளுக்காக கடன் வாங்குவார் அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்காக கடன் வாங்குவார். சில பேர் இசை பிரியராக இருந்தால் ஏதாவது இசை கருவிகள் வாங்குவதற்க்காக கடன் வாங்குவார்.

ஆறாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் தன்னுடைய தாயாரின் நலனுக்காக கடன் வாங்குவார். வீடு கட்டுவதற்க்காவும் கடன் வாங்குவார். சில பேர் வாகனத்திற்க்காக கடன் வாங்குவார்கள். 

இன்றைக்கு இருக்கும் நகரத்து வாழ்க்கையில் அதிக பேர் ஆசைபடுவது வீடு கட்டுவதற்க்கு அல்லது ஒரு கார் வாங்குவதற்க்கு இதில் வீடாக இருந்தால் பரவாயில்லை. சில பேர் வாகனம் வாங்கி அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள். 

பல வாகனங்கள் வாங்கி அதை ஒழுங்காக ஒட்டுவதற்க்கு டிரைவர் அமையமாட்டார்கள். அதனாலேயே கடனில் வண்டி மூழ்கிவிடும். சென்னை போன்ற நகரங்களில் பல பேர் இன்றைக்கு இந்த நிலையில் இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். 

கடனை வாங்குவதற்க்கு ஆறாம் அதிபதி துணை வேண்டும். அது போல நமக்கு அமையும் வேலை ஆட்கள் ஆறாம் அதிபதி துணையோடு தான் அமைய முடியும். ஆறாம் அதிபதி ஒரு வேலையில் உங்களை காப்பாற்றினால் அடுத்த காரணத்தில் கைவிட்டுவிடுவார். 

கடன் வாங்கி மோட்டார் தொழில் நடத்துவதில் உள்ள சிக்கல் கடனை வாங்காமல் வண்டி வாங்கினால் ஆறாம் அதிபதி நல்ல டிரைவரை வேலைக்கு அமர்த்துவார். 

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

நண்பர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் இந்த Blog யை பற்றி உங்களின் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். அவர்கள் பயன்பெறுவார்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கையில் மிக பெரிய உதவி செய்தார் போல் இருக்கும். எனக்கும் நிறைய சிந்திக்க தோன்றும் அந்த சிந்தனை உங்களின் சோதிட அறிவுக்கு நல்ல தீனியாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



6 comments:

அமுதா கிருஷ்ணா said...

என் கணவருக்கு ஆறாம் அதிபதி சனி 4-ல் இருக்கிறார். இப்போது நடப்பது சனி தசா.போன வருடம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி உள்ளார். மிக கரெக்டாக பொருந்தி உள்ளது.

அமுதா கிருஷ்ணா said...

ஆறாம் வீட்டு தசா பற்றி வரும் அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன். முதல் பதிவில் உங்களுக்கு குரு தசை என்று சொல்லி உள்ளீர்கள். குரு ஆறாம் வீட்டில் இருக்கிறாரா அல்லது அவரே ஆறாம் வீட்டு அதிபதியா?

ஆறாம் திசை என்பது அந்த வீட்டில் அமர்ந்து இருப்பவர்கள் நடத்தும் தசையா அல்லது ஆறாம் வீட்டு அதிபதி நடத்தும் தசையா??

rajeshsubbu said...

/*அமுதா கிருஷ்ணா said...
என் கணவருக்கு ஆறாம் அதிபதி சனி 4-ல் இருக்கிறார். இப்போது நடப்பது சனி தசா.போன வருடம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி உள்ளார். மிக கரெக்டாக பொருந்தி உள்ளது. */

வருக வணக்கம். சொல்லியது நடந்தது என்றால் சரிதான். நன்றி

rajeshsubbu said...

/*
அமுதா கிருஷ்ணா said...
ஆறாம் வீட்டு தசா பற்றி வரும் அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன். முதல் பதிவில் உங்களுக்கு குரு தசை என்று சொல்லி உள்ளீர்கள். குரு ஆறாம் வீட்டில் இருக்கிறாரா அல்லது அவரே ஆறாம் வீட்டு அதிபதியா?

ஆறாம் திசை என்பது அந்த வீட்டில் அமர்ந்து இருப்பவர்கள் நடத்தும் தசையா அல்லது ஆறாம் வீட்டு அதிபதி நடத்தும் தசையா?? */

வருக வணக்கம். என்னுடைய தசாவை பற்றி கேட்டதற்க்கு நன்றி எனக்கு குரு மூன்றாம் வீடு மற்றும் பன்னிரெண்டாம் வீட்டிற்க்கு சொந்தகாரர். அவர் ஆறாம் வீடான மிதுன ராசியில் அமர்ந்துள்ளார். நாம் முதலில் எடுத்துக்கொள்வது ஆறாவது வீட்டு அதிபரின் தசாவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பவரும் அந்த வீட்டின் குணத்தை காட்டுவார். இதைப் பற்றி பதிவில் எழுதுகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள்

Ananthamurugan said...

Good post mr.Rajesh

rajeshsubbu said...

//* Ananthamurugan said...
Good post mr.Rajesh *//

வருக வணக்கம் தங்கள் கருத்துக்கு நன்றி.