Followers

Friday, June 15, 2012

வில்லாதி வில்லன் 3



வணக்கம் நண்பர்களே! கடந்த பதிவில் ஆறாம் வீட்டு தசாவை பற்றி நல்ல சிந்திப்போம் என்று சொல்லிருந்தேன் ஏதாவது உங்கள் சிந்தனைக்கு எட்டியதா என்று தெரியவில்லை நீங்கள் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருக்கலாம்.

நான் சிந்தித்தேன் அதில் ஒரு பகுதி ஆறாம் வீட்டு தசா நடக்கும் போது அதன் அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால் தொலைதொடர்பு சிக்கலைப்பற்றி சொல்லிருந்தேன். எப்படி அந்த சிக்கல் உருவாகிறது என்று பார்க்கலாம்.

எனது நண்பருக்கு நடந்த ஒரு அனுபவத்தைப் பற்றி உங்களிடம் சொல்லுகிறேன். எனது நண்பருக்கு ஆறாம் அதிபதி குரு அவர் மூன்றாம் வீட்டில் சனியுடன் சேர்ந்து இருந்தார். அவருக்கு ஆறாம் வீட்டு அதிபதியின் தசா ஆரம்பித்தது.

அவருக்கு போன் மூலம் நண்பர்களிடம் பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் எல்லாரிடமும் பேசிக்கொண்டே இருப்பார். இந்த தசா ஆரம்பம் ஆனவுடன் அவருக்கு வரும் எந்த காலும் ஒழங்காக கேட்காது.அவர் யாரிடம் பேச வேண்டும் என்றாலும் ஒழுங்காக லைன் போகாது.

அவருக்கு தலை வெடித்துவிடுவது போல் ஆகிவிட்டார் இருக்காதா என்ன மணிக்கணக்கில் போன் பேசியவர் திடீர் என்று போன் வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது. போனை மாற்றி பார்த்தார் வேலை நடக்கவில்லை சரி என்று போன் அலைவரிசை தரும் கம்பெனியை மாற்றி பார்த்தார் அதுவும் சரிபடவில்லை.

அவர் இருந்த ஊர் ஒரு கிராமம் அங்கு செல்போன் சிக்னல் ஒரு பிரச்சினை என்றாலும் தசா ஆரம்பத்திற்க்கு முன்பு வரை நன்றாக பேசி கொண்டு இருந்தவர் தசா ஆரம்பம் ஆனாவுடன் அவருக்கு தசாவின் வீரியத்தை காட்ட தொடங்கியது நீங்கள் ஏன் இப்படி பொய் சொல்லுகிறீர்கள் என்று நினைக்க தோன்றும் இது உண்மை சம்பவம் தான்.

அவருக்கு நான் தொடர்பு கொள்ளும் போதும் அவருக்கு இரண்டு தடவை போன் செய்தால் தான் கிடைக்கும் அவருக்கு போன் மேல் இருந்த ஆசை அனைத்தும் போனது ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் தசா எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று அனுபவத்தில் பார்க்கும் போது 100 சதவீதம் சோதிடம் உண்மை என்று தெரியவரும்.

அடுத்து இந்த மூன்றாம் வீடு பக்கத்து வீட்டுகாரரை காட்டும் இடம். ஆறாம் வீட்டு தசா நடந்து அது மூன்றாம் வீட்டில் நன்றாக இருக்கும் போது பக்கத்து வீட்டுகாரர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். தீமை தரும் நிலையில் இருந்தால் பக்கத்து வீட்டுகாரன் சண்டை போட ஆரம்பித்துவிடுவான்.

நீங்களே பார்த்து இருக்கலாம் நமது நாட்டில் நிறைய கிராமங்கள் இருக்கின்றன நகரத்தில் தான் வீட்டை சுற்றி சுவர் எழுப்பி வைத்து இருப்பார்கள். ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்து கொள்ள மாட்டார்கள். கொலை நடந்தாலும் கூட அடுத்த வீட்டுகாரருக்கு தெரியாது.

கிராமத்தில் சுவர் எல்லாம் இருக்காது ஒரு சிலர் வேலி அமைத்து இருப்பார்கள். பாதிபேர் வீடுகளில் ஒன்றும் இருக்காது அவர்கள் அனைவரும் ஒவ்வொரு வீட்டிற்க்கும் ஒரு எல்லை வைத்துக்கொண்டு நிலத்தை சுத்தம் செய்து கொள்ளுவார்கள் அதாவது பெருக்கி கொள்வார்கள் .

இந்த தசாவில் சுத்தம் செய்யும் போது ஒரு எல்லையை தாண்டி சுத்தம் செய்து விட்டால் அவ்வளவு தான் பக்கத்து வீட்டுக்காரன் உடனே சண்டை போட ஆரம்பித்துவிடுவான் அது மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டுவிடும். சில இடங்களில் இந்த பிரச்சினை கொலையில் கூட கொண்டு விட்டுவிடும்.

நீங்கள் கூட தினசரி நாளிதழில் பார்த்து இருக்கலாம். கடந்த மாதம் திண்டிவனத்தில் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது ஒரு வீட்டு கோழி அடுத்த வீட்டுக்கு சென்றதால் பிரச்சினை ஏற்பட்டு வீட்டில் தொட்டியில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டாள் ஒரு பெண். இதை நான் தினசரில் தான் பார்த்தேன் இந்த மாதிரி நடப்பது எல்லாம் இந்த ஆறாம் வீடும் மூன்றாம் வீடும் சம்பந்தம் பட்டு தசா நடக்கும்போதுதான் நடக்கும்.

இசையை தெரிவிக்கும் இடம் மூன்றாம் வீடு என்பதால் ஆறாம் வீட்டு தசா நடந்து மூன்றாம் இடத்தில் சம்பந்தம் பெற்றால் நல்ல இசையை கேட்க தோன்றும் அல்லது இசையா அது எதற்கு என்று கேட்பார்கள். வீட்டில் இசைகருவி மூலம் கேட்ககூட மனம் விரும்பாது .

அனைவருக்கும் சோதிடம் மூலம் ஒரு முக்கிய அறிவிப்பு:

ஆறாம் வீட்டு தசா ஆரம்பித்து அவர் மூன்றாம் வீட்டுடன் சம்பந்தம் ஏற்பட்டால் நீங்கள் எங்கேயாவது வெளியில் விடுதியில் தங்கி இருந்தால் அதாவது ஒரு பெண்னுடன் (மனைவியாக கூட இருக்கலாம் )இருந்தால் உங்கள் படம் நெட்டில் வெளியிடப்படும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி உங்களின் நலம் விரும்பியாக இதை வெளியிடுகிறேன். நீங்கள் கேமரா வைத்தீர்களா என்று கேட்க வேண்டாம் யாராவது வைத்துவிடுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Balamurugan Jaganathan said...

nice info...

rajeshsubbu said...

/* Balamurugan Jaganathan said...
nice info... */

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி