Followers

Friday, June 29, 2012

கனவு கானும் வாழ்க்கை யாவும்



"கனவு கானும் வாழ்க்கை யாவும், கலைந்து போகும் கோலங்கள்
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்... வாலிபம் என்பது பொய் வேஷம்..
தூக்கத்தில் பாதி , ஏக்கத்தில் பாதி, போனது போக எது மீதி...
உடம்பு என்பது உன்மையில் என்ன.. கனவுகள் வாங்கும் பை தானே..”

நீங்கள் கேட்டவை படத்தில் இடம் பெற்ற வைரமுத்து அவர்களின் பாடல் வரிகள்...

நாமும் பிறந்தலிருந்து நமது எண்ணங்கள் என்னவாக இருக்கின்றன. ஒரு நல்ல கல்வி படிப்பது அந்த படிப்பை வைத்து நல்ல கம்பெனியில் நல்ல சம்பாதிக்க வேண்டும். நல்ல சம்பாதித்தால் நல்ல குடும்பத்தில் பிறந்த அழகான படித்த மனைவி அமையவேண்டும். அதற்கு நல்ல குழந்தைகள் பிறந்து அதை நல்ல முறையில் ஆளாக வேண்டும். வசிக்க நல்ல வீடு ஒரு கார் இருந்தால் போதும் என்று ஒரு சராசரி மனிதனின் எண்ணமாக இருக்கிறது. இதை செய்வது என்பது சாதாரணமான காரியமாக இருக்காது. அவ்வளவு கஷ்டங்கள் நிறைந்த ஒன்று.

எந்த கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால் நோய் வந்து விட்டால்  அதுவும் தீராத நோய் என்றால் என்ன செய்வது அவ்வளவு தான். கடைசியில் பார்த்தால் வாழ்க்கையின் இறுதிகாலம் அவனை மிரட்டுகிறது. மரணம் என்ற விருந்தாளி அவன் கூப்பிடாமல் அழையா விருந்தாளியாக வந்துவிடுகிறார். கண்ட கனவு யாவும் கலைந்த கோலங்களாகவே போய்விடுகிறது.

அதுவும் மருத்துவதுறையால் கண்டுபிடிக்க முடியாத மற்றும் தீர்வு இல்லாத அதாவது குணபடுத்த முடியாத நோயாக இருந்தால் கஷ்டம் தான். ஆத்மா தங்கி இருக்கும் உடம்பு நோய் இல்லை என்றால் அந்த ஆத்மாவிற்க்கு உங்கள் உடம்பு கோவில் போன்றது.

உடம்பு நன்றாக இருந்தால் நீங்கள் நினைத்ததை அனைத்தையும் போராடி வெற்றி பெற்றுவிடலாம். உங்கள் உடம்பு உங்களுக்கு பிரச்சினை என்றால் அனைத்திலும் தோல்வி.

இன்றைக்கு இருக்கும் இயந்திர தனமான மனித வாழ்க்கையில் ஒருவன் நல்ல முறையில் இருந்தாலே அவனை இந்த உலகம் கண்டுகொள்வதற்க்கு அவன் போராட வேண்டிருக்கும். அவன் உடம்பு படுத்துவிட்டால் அவனை யார் தான் கண்டுக்கொள்வார்கள். 

கட்டிய மனைவி பெற்ற குழந்தை கூட பார்ப்பது என்பது அரிதான ஒன்றாக தான் இருக்கும். உடம்பு நோய் வந்து படுத்துவிட்டால் உங்களை பார்க்க உங்களுக்கே பிடிக்காமல் போய்விடும்.

நாம் இனி பார்க்க போவது ஆறாம் வீட்டு தசாவை பற்றி தான் நான் தசாவை பற்றி எழுதலாம் என்று நினைத்தவுடன் ஒரு சில எண்ணங்கள் வேற தசாவைப் பற்றி வந்தாலும் உடனே எனக்கு வந்தது ஆறாம் வீட்டு தசா தான் ஏன் என்றால் ஒருவனை அடித்து வீழ்த்தி அவனை சாயவைப்பதில் முதலிடத்தில் ஆறாம் வீட்டு தசாதான் செய்யும்.

ஒருவருக்கு வரும் கெடுதலை நான் கொடுத்துவிட்டால் அவன் தன்னை தற்காத்துக் கொள்வான். அதன் பிறகு அவனுக்கு வரும் கஷ்டங்களை நாம் ஒவ்வொன்றாக பார்த்துக்கொள்ளலாம். அதனால் தான் உங்களுக்கு முதல் தசாவாக எழுத இந்த தசாவை தேர்ந்தெடுத்தேன்.

நான் இதனை எழுதவே பல நாட்கள் ஆகிவிட்டது இதை தவிர்த்து முதல் வீட்டு தசாவில் இருந்து எழுதி இருந்தால் இதனை ஆரம்பிக்க ஒரு வருடத்திற்க்கு மேல் ஆகி இருக்கும். அதனால் தான் இதனை முதல் தசாவாக எழுதினேன். இனி வரும் பதிவுகளில் மனிதனுக்கு வரும் நோய்கள் என்ன என்று ஆறாம் வீட்டு தசாவுடன் உங்களுக்கு தர போகிறேன். 

"வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் 
  நோய் வரும் முன் காக்க வேண்டும்"  

 என்பது முன்னோர்கள் கருத்து.

நான் உங்களுக்கு என்ன நோய் வரும் என்பதை சொல்லிவிடுகிறேன் அதற்கு தகுந்தார் போல அணையை கட்டிக்கொள்வது உங்கள் பொறுப்பு. உங்கள் நண்பர்களுக்கும் நமது ப்ளாக்கை பற்றி சொல்லுங்கள். மிகப்பெரிய பரிகாரமாக இருக்கும்.

அடுத்த பதிவில் 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: