Followers

Wednesday, July 4, 2012

அனுபவம்

என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் கடந்த 15 நாள்களுக்கு முன்பு என்னிடம் ஒருவரை அழைத்து வந்தார். அவர் தொழில் அதிபர். அவர் பார்ப்பதற்க்கு கொஞ்சம் சோர்வாக இருந்தார். எனது வாடிக்கையாளர் சொன்னார் இவர் ஒரு தொழில் செய்கிறார். அந்த தொழிலில் இவருக்கு சிறிய காலமாக பிரச்சினை. 

பிரச்சினை மிகப்பெரிய சண்டையாக உருவாகி இருக்கிறது. இவரை தாக்க கூட அவர்கள் திட்டம் போட்டு இருந்திருக்கிறார்கள்.இவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பின்பு இருக்காதா கஷ்டபட்டு ஆரம்பித்து அந்த தொழில் வளர்ந்து அந்த தொழிலை நம்பி எதிர்காலம் இருக்கும் போது அந்த தொழிலில் பிரச்சினை என்றால் எப்படி நிம்மதி ஆக இருக்கும் முடியும். 

அந்த பிரச்சினை உருவாகியது இவரின் தொழிலில் வேலை செய்யும் ஆட்களை இவர் எதிர் ஒருவர் கைக்குள் வைத்துக்கொண்டு பிரச்சினை செய்கிறார். 

அந்த பிரச்சினையை இவரால் சமாளிக்க முடியவில்லை. நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும் என்று கேட்டார். 

நான் அவரின் ஜாதகத்தை எடுத்து பார்த்தேன். அவருக்கு பிரச்சினை ஆறாவது வீட்டின் மூலம் தான் வந்திருக்கிறது. இவரின் ராசி கன்னி, லக்கினம் மிதுனம் ஆறாவது வீட்டு அதிபதி செவ்வாய் அவர் பத்தாவது வீட்டில் இருக்கிறார். நான் அவரிடம் கேட்டேன் உங்கள் எதிரி நல்ல வாட்டசாட்டமான ஆளாக இருக்கிறாற என்று கேட்டேன் அவரும் ஆமாம் என்று சொன்னார். செவ்வாய் மூலம் வரும் வில்லன் நல்ல உயர்ந்த ஆளாக தான் இருப்பார்கள். 

உடனே நான் ஒரு பரிகாரத்தை அவருக்கு சொல்லி அவ்வாறு செய்யுங்கள் என்று சொல்லி விட்டு நான் சொன்னமாதிரி நீங்கள் செய்து விட்டு தினமும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அனுப்பிவிட்டேன். அவரும் அந்த பரிகாரத்தை செய்துவிட்டு என்னை தினமும் தொடர்பு கொண்டார். 

அவருக்கு படிப்படியாக பிரச்சினை ஒரு வார காலத்தில் குறைந்தது இப்பொழுது நிம்மதியாக வாழ்க்கை வாழ்கிறார். என்னிடம் அவர் தினமும் போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார். அவரின் தொழில் இன்றைக்கு நல்ல முறையில் இயங்குகிறது. 


நமது வாசகர்கள் அனுப்பிய விடை:

அமுதா கிருஷ்ணா


முருகன் வழிபாடு அல்லது செவ்வாய் கிழமை இராகு காலத்தில் துர்க்கை வழிபாடு 

நான் கேட்ட கேள்விக்கு ஒருவரை தவிர வேறு யாரும் பதில் அளிக்கவில்லை அவருக்கு நன்றிகள்.பொதுவாக ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அந்த பிரச்சினை நன்றாக உற்று நோக்க தெரிந்திருக்க வேண்டும். இவரின் எதிர்கள் தாக்க வந்து இருக்கிறார்கள்.

அப்பொழுது இதை ஒரு போர்களம் போல் தான் நாம் எண்ண வேண்டும். நாம் அவர்களை எதிர்க்க வேண்டுமா அல்லது அவர்கள் இவரை தாக்காமல் விலகி போக வேண்டுமா என்று முடிவு எடுக்க வேண்டும்.

இவரின் முடிவு அவர்கள் இவரை விட்டு விலக வேண்டும் என்று கூறினார். அப்பொழுது நான் முருகனின் காவல் தெய்வமான இடும்பனுக்கு ஒரு பரிகாரத்தை செய்ய சொல்லி இருந்தேன். இவரின் வேண்டுதலை ஏற்று அவரை காப்பாற்றினார்.

நான் சொன்ன பரிகாரம் இடும்பனுக்கு உகந்த காவடியை வைத்து ஒரு செவ்வாய்கிழமை வீட்டில் பூஜை செய்து குறைந்தது 9 பேர்க்காவது அன்னதானம் செய்ய சொல்லி இருந்தேன். அவரும் செய்தார் அதன் நன்மையை ஒரு வாரத்தில் கண்டார். பல ஊர்களில் இதனை காவடி பூஜை என்று செய்வார்கள்.

முருகன் இடும்பனை வேல்களால் தாக்கும் போது இடும்பன் முருகனிடம் நான் உங்களுக்கு பணிவிடை செய்ய வந்த அடியன் என்று சரணாகதி அடைந்தவன். முருகன் அவனுக்கு அருள் ஆசி செய்து காவல் தெய்வமாக வைத்திருக்கிறார். அவரை நாம் வணங்கினால் முருகன் மூலம் வரும் எதிர்ப்பை சமாளித்துவிடலாம்.

பலவற்றை அலசி ஆராய்ந்தால் மட்டுமே சரியான பரிகாரத்தை பாதிக்கபட்டவர்களுக்கு நாம் தரமுடியும். அதைப்போல் பரிகாரம் செய்யும் முறையிலும் பலவிதம் முறைகள் உள்ளன. எப்படி வணங்கினால் எளிதில் தீர்வு கிடைக்கும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஓ, புது பரிகாரமாக தெரிகிறது.நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.

rajeshsubbu said...

//* அமுதா கிருஷ்ணா said...
ஓ, புது பரிகாரமாக தெரிகிறது.நினைவில் வைத்து கொள்ளவேண்டும். *//

வாங்க மேடம் ஏகாபட்ட எளிய பரிகாரங்கள் உள்ளன. அது எல்லாம் தெரியாமல் தான் ஒவ்வொரு பிரச்சினையிலும் சிக்கி தவிக்கிறார்கள் மக்கள்.