Followers

Friday, July 6, 2012

நான் பேச நினைப்பதெல்லாம்



வணக்கம் நண்பர்களே! நோய் பதிவுவாக பார்த்து வருவதால் சில பேர்க்கு கொஞ்சம் போரடிக்கலாம். அதற்காக கொஞ்சம் மாற்று கருத்துடன் இப்பதிவு.

என்னிடம் இப்பதிவுலகம் மூலமாக பேசுபவர்கள் ஒரு கருத்தை தான் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள் ஐயா எனக்கு சோதிட தொழில் நன்றாக அமையுமா அல்லது சோதிடம் எனக்கு வருமா என்று தான் கேட்கிறார்கள். ஒரு சிலர்  எனக்கு ஒரு நல்ல குரு அமையுமா என்று கேட்கிறார்கள்.

இதற்கு நான் பலமுறை பதில் தந்துவிட்டேன். மறுபடியும் உங்களுக்காக தான். எல்லா துறைகளும் போலவே சோதிட துறையிலும் ஈடுபடலாம். அதற்கு என்று சில தகுதிகள் உள்ளன அந்த தகுதிகளை வைத்துக்கொண்டு இதில் ஈடுபடுங்கள்.

இந்த தொழிலில் நன்றாக வருவதற்க்கு கொஞ்சம் காலங்கள் தேவைப்படும் அதுவரை பொறுமை காக்க வேண்டும். பல இடங்களில் அவமானபட வேண்டும். பல அவமானங்களை சந்திக்க வேண்டும். அந்த அவமானங்கள் உங்களை செதுக்க வேண்டிய உளிகள் தான் அவை.

நாம் ஜாதகங்களை கையில் எடுத்தவுடன் பலனை கூற தொடங்கிவிடுவோம் வந்தவர் கேட்கமாலே நாம் உங்களுக்கு இப்பொழுது திருமணம் நடைபெறாது இன்னும் கொஞ்ச காலம் சென்ற பிறகு தான் உங்களுக்கு திருமணம் நடைபெறும் என்று சொல்வோம் ஆனால் அவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தையும் இருக்கும். அவரிடம் நாம் அப்பொழுது அவமானம் பட வேண்டியது தான் .

அப்பொழுது நாம் அந்த ஏரியாவில் இன்னும் படிக்க வேண்டியது நிறைய உள்ளது என்று நினைத்துக்கொண்டு படிக்க வேண்டியது தான்.இந்த மாதிரி நிறைய விஷயங்கள் உள்ளன ஒவ்வொரு முறையும் சோதிடம் உங்களை செதுக்கும். உங்களுக்கு அப்பொழுது தான் இந்த தொழில் அமையும்.

சில பேர் கேட்டார்கள் நான் இத்துடன் சோதிடத்தை படிப்பதை நிறுத்திவிடுகிறேன் என்று நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை என்று கேட்டார்கள் அவர்களுக்கு நான் சொல்லுவதும் பல பேர் சொன்னதும் இது தான். சோதிடத்தை படிக்க ஆரம்பித்துவிட்டால் அதை விட்டு போகமுடியாது. சோதிடம் ஒரு பைத்தியம் அது உங்களை பிடித்துவிட்டால் அது விடாது. நீங்கள் தாராளமாக படிக்கலாம் ஒன்றும் தப்பில்லை.உங்களை சோதிடத்தை விரும்பி படிக்க வைப்பது உங்கள் கிரக நிலைகள் தான். அதனால் தாராளமாக படியுங்கள்.

குரு அமைவதைப் பற்றி பல பேர் கேட்டார்கள்.

உங்களுக்கு குரு அமையவேண்டும் என்றால் நீங்கள் தான் அவரை தேடவேண்டும். உங்களுக்கு உகந்தவராக நீங்கள் தேர்வு செய்யவேண்டும். சோதிடத்தை புத்தங்களில் படித்துவிட்டு தொழில் செய்வது என்பது சாத்தியம் தான் இருந்தாலும் நீங்கள் ஒரு குருவை வைத்துக்கொண்டு சோதிடத்தை பார்ப்பது நல்லது. அந்த குரு எல்லாவிதத்திலும் உங்களுக்கு உதவியாக இருப்பார்.

என்னுடைய அனுபவத்தை சொல்லுகிறேன். எனக்கு மந்திர வித்தைக்கு மட்டும் குரு இருக்கிறார் அவரின் ஆலோசனைப்படி தான் பல விஷயங்களை நான் செய்வேன். 

மந்திரங்கள் எல்லாம் எதற்கு சும்மா சோதிடம் மட்டும் சொன்ன போதாத என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு விடை சோதிடம் மட்டும் பார்த்தால் ஒரு பயலும் உங்களை தேடி வரமாட்டான்.

அவனுக்கு பரிகாரம் மூலம் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே உங்களை தேடி வருவார்கள். இப்பொழுது எல்லாம் மக்கள் உடனடியாக பிரச்சினை தீர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு தகுந்த பரிகாரம் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மந்திர வித்தை அவசியம்.

நீங்கள் தொழில்முறை சோதிடராக வரும்போது பலவிதமான பேர் உங்களை சந்திப்பார்கள் அப்பொழுது நல்லவர் யார் கெட்டவர் யார் என்று உங்களுக்கு தெரியாது.இரண்டாம் நம்பர் வியாபாரம் செய்பவர்கள் எல்லாம் உங்களை நாடி வரலாம். அப்பொழுது நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு இஷ்டதெய்வத்தை வைத்துக்கொண்டால் அந்த தெய்வம் வந்தது யார் என்று உங்களுக்கு காட்டி கொடுத்துவிடும். அதற்கு தக்கவாறு நீங்கள் உங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.

பல தொழில் அதிபர்களுக்கு சோதிடர்கள் இல்லை என்றால் அவர்களால் ஒரு வியாபாரத்தையும் ஒழுங்காக செய்ய முடியாது. அனைத்து வித பிரச்சினைகளையும் சோதிடர்கள் மூலம் தான் தீர்ப்பார்கள். 

நான் சோதிடம் கற்கும் போது அப்பொழுதே மாத சம்பளத்தில் ஒருவருக்கு சோதிடராக வேலை பார்த்தேன். இப்பொழுது அந்த வேலையை விட்டு விட்டேன் ஆனால் அவர் அடிக்கடி தொடர்பு கொண்டு கேட்பார் அதற்கு மட்டும் பதில் அளிக்கிறேன்.

ஒரு சிலர் கேட்கிறார்கள் எனக்கு இந்த கிரகம் இந்த கட்டத்தில் இப்படி உள்ளது அந்த கட்டத்தில் அப்படி உள்ளது என்று கேட்கிறார்கள். இருக்கின்ற கட்டங்களில் கிரகங்கள் அமரும் சக்தியை கடவுள் கொடுத்துள்ளார் அவைகளை மாற்றி அமருங்கள் என்று சொன்னால் அமராது இருக்கின்றவற்றை வைத்து சமாளியுங்கள். இல்லாதைப்பற்றி வருத்தம் கொள்ள வேண்டாம். கடவுள் கொடுத்தது அது தான் என்று நினைத்துக்கொள்ளுங்கள்

குருவை பற்றி கேட்டார்கள் அவர்களுக்கு நான் தரும் பதில் குரு ஒருவருக்கு எப்படி அமைவார் என்று தனியாக பதிவு தருகிறேன்.குரு எப்படி அமைந்தாலும். அவர் நமக்கு அமைந்த பிறகு அவரை நாம் சோதிப்பது தவறு. அவரை வைத்து உங்களை வளர்ப்பதில் மட்டும் கண்ணாக இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: