Followers

Thursday, August 16, 2012

சோதிட அனுபவம் 1



வணக்கம் நண்பர்களே சோதிட அனுபவம் மூலம் ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதற்கு பலனை பார்த்து வருகிறோம். கடைசி பதிவில் ஒரு ஜாதகத்தை எடுத்து பலன் சொல்லி வந்தேன் மூன்று வீடுகளுக்கு மட்டும் சொன்னேன். அதன் தொடர்ச்சி இப்பதிவில்

நான்காவது வீடாக மிதுன ராசி வருகிறது அதன் அதிபதி ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளார்.நான்காம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். அதன் பலன் குழந்தைகளால் சந்தோஷத்தை பெற்றவனாகவும் வண்டி வாகனங்களை பெற்றவனாகவும் அதனால் லாபங்களை அடைந்தவனாகவும் இருப்பான். சுக்கிரன் நான்காம் வீட்டில் இருக்கிறார். அவர் அங்கு அமர்வது வாகன யோகம் இருக்கும். நல்ல அழகான மாடி வீடு அமையும். இவருக்கு வாகன யோகம் அமைந்தது. நல்ல வீடும் இருக்கிறது.  நான்காம் வீட்டிற்க்கு ஏழாம் வீட்டில் இருந்து குருவின் பார்வை விழுகிறது. நல்ல சுகவாசியாகவும் இருக்கிறார். 

திருமணம் முடிந்தால் குழந்தைபாக்கியத்தை பற்றி சொல்லலாம் திருமணம் இன்னும் நடைபெறவில்லை இப்பொழுது தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.

ஐந்தாம் வீடு அதில் நான்கு கிரகங்கள் இருக்கின்றன. அதன் அதிபதி பனிரெண்டாம் வீட்டில் விரையமாக இருக்கிறார். ஐந்தாம் வீட்டில் நான்கு கிரகம் வேறு இருக்கிறது இவருக்கு குழந்தை பாக்கியம் இருக்குமா அல்லது இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள்.

நண்பர்களே நான் பதிவில் சொல்லிருந்தேன் சாமியார்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்று பல நண்பர்கள் அவர்களின் வாழ்க்கையில் சந்தித்த சாமியார்களின் தொடர்பை பற்றி சொல்லிருந்தார்கள் அதில் முக்கால் வாசி போலி என்று அதனால் இதனை பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்று இதனை தருகிறேன்.

நீங்கள் சோதிட தொழில் செய்தால் இந்த மாதிரி பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம் மற்ற அனைவரும் இந்த மாதிரி சாமியார் தொடர்பு என்று பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். சோதிடத்தை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் அதனை வைத்து உங்களின் குடும்பத்தாருக்கு பார்த்துக்கொள்ளுங்கள். அது போதும்.

நேற்று பதிவு போடமுடியவில்லை நான் நேற்று ஆந்திராவிற்க்கு சென்று ஒரு காட்டில் தங்கி இருந்தேன் நேற்று பிரதோஷம் அதனால் அந்த காட்டில் இருக்கும் சிவனை தரிசித்தேன். மலையை விட்டு கீழே இறங்க இரவு பத்து மணி ஆகிவிட்டது. நல்ல தரிசனம் அங்கு என்னுடன் சேர்த்து ஐந்து பேர் தான் இருந்தோம். காட்டில் இரவில் பயணம் செய்வது கொஞ்சம் திரில்லாக இருக்கும் இருந்தாலும் நான் ஏற்கனவே பல காடுகளை பார்த்ததால் எளிதாக இருந்தது.

அந்த சிவன் இருக்கும் இடத்தை சொன்னாலும் தெரியபோதில்லை அதனால் அதன் இடத்தை நான் சொல்லவில்லை அந்த இடத்தை சொன்னாலும் போய்வருவது கடினமான ஒன்று. காரில் தான் போய் வந்தோம். சென்னையை நான் வந்து சேர விடியற்காலை மூன்று மணி ஆனது அது தான் பதிவு போடுவதற்க்கு தாமதம்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.  

No comments: