Followers

Friday, August 3, 2012

சோதிட பயணம்


விநாயகனே வெவ்வினையை கேறுக்க வல்லவன்
விநாயகனே வேட்கைதனி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்க்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து.


வணக்கம் நண்பர்களே நான் பதிவு உலகத்திற்க்கே வந்ததே பல பதிவுகளை படித்துதான். என்னுடைய கருத்துகளை வெளியிடுவதற்க்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. எழுதுவதற்க்கு முன்பு நான் எந்த தலைப்பை தேர்ந்தெடுக்கலாம் என்று பல யோசனை தோன்றியது.

கடைசியில் சோதிடத்தையை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்தேன். நான் அதிகம் விரும்பிய சோதிடத்தை தேர்ந்தெடுத்தன் காரணம் இதன் மூலம் பல பேர்களுக்கு சோதிடத்தை சொல்லிக்கொடுக்கலாம் மற்றும் இந்த தளம் மூலம் பல பேர்களின் வாழ்க்கையை மேம்படுத்தலாம் என்ற எண்ணம் தான்.

நான் சோதிடத்திற்க்கு வந்ததை எழுத வேண்டும் என்று நினைத்தால் அதனைப் பற்றியே பல பதிவுகள் போடலாம். வாழ்க்கை என்கிற புதிர் விளையாட்டில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் இந்த தளம்.

நான் சொல்லுகின்ற கருத்துகளை உங்கள் மனதில் வாங்கி உங்கள் எண்ணங்களை சரியான திசையில் சென்றால் அது தான் எனக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்.

நான் முதலில் எழுத ஆரம்பித்த நேரத்தில் எனக்கு ஒழுங்காக எழுதகூட தெரியாது. இப்பொழுது படிப்படியாக கற்றுக்கொண்டுவிட்டேன். பதிவுகளை எப்படி எழுதவேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது எனக்கு தெரிந்ததை எழுத ஆரம்பித்தேன். சோதிடத்தை பற்றி எனக்கு தெரிந்தாலும் அதனை எப்படி சொன்னால் பதிவுக்கு வருபவர்களுக்கு புரியவேண்டும் என்ற குழப்பம் இருந்தது.  படிப்படியாக அதனை கற்றுகொண்டேன் இன்று ஒரளவுக்கு மக்களுக்கும் பயன் அளிக்கிறது.

உங்களை மேம்படுத்த வழிகள்

குளக்கரையிலும் மரத்தடியிலும் விநாயகரை அதிகம் காணலாம். இதனால் அவர் எழுந்தருளிக்கும் இடங்களுக்கு ஏற்ப எளிமையாகவே இருப்பார் இப்படிப்பட்ட பிள்ளையாரை நாமும் நமக்கு கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு தரிசித்தால் பெரிய பலனை பெறலாம்.

அரசமர பிள்ளையார் இவர் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு அன்னாபிஷேகம் செய்தால் எதிர்பார்த்த உதவி உடனே கிட்டும். பயிர்விளைச்சல் பெருகும். பணக்கஷ்டம் தீரும்.

ஏழு ஜென்ம வினைகள் தீர வேண்டுமென்றால் ஏழு மலை ஏறிச் செல்ல வேண்டுமென்பார்கள். ஏழு மலைக்கு அப்பால் இருப்பவர் தான் திருப்பதி வெங்கடேசப்பெருமாள் அவரை பரிபூரண நம்பிக்கையுடன் வணங்கினால் உங்கள் ஜென்ம வினைகள் தீரும்.

லிங்க வழிபாட்டின் தத்துவம்

கண்ணால் காண இயலாத பேரொளி தன் ஆற்றலைச் சுருக்கிக் கொண்டு அன்பரின் ஒர் அடையாளச் சின்னமாய்க் காட்சியளிப்பதே லிங்க தத்துவம். அருவத்திற்கும் உருவத்திற்க்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் மனதைச் சிவத்திடம் ஒருமுகப்படுத்துவது லிங்கத்தின் அமைப்புமுறை.

சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதைவிட லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது.

சிவபெருமானை தரிசிக்கும் நேரத்திற்க்கு ஏற்ப அவரை வழிபடுவோருக்கு பலன்கள் கிடைக்கின்றன. காலையில் சிவனை தரிசித்தால் நோய்கள் நீங்கும். நாம் தரிசிக்கும் நேரம் நண்பகல் என்றால் செல்வம் பெருகும். மாலை நேரத்தில் தரிசித்தால் பாவம் விலகும். தரிசிக்கும் நேரம் அர்த்த ஜாமம் என்றால் பக்தி கிடைக்கும்.

சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கந்தசஷ்டி கவசத்தினை படித்தால் மக்கட்செல்வமும் பொருட்செல்வமும் பெறலாம். மற்றவர்களால் செய்யப்பட்ட தீய செய்வினைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளலாம்.

அம்மனை ஞாயிறு அன்று விரதம் இருந்து தரிசித்தால் நீங்கள் கேட்கும் வரங்களை தருவாள். நமது ஊரில் மாரியம்மன் வழிபாடு  செய்வது உண்டு அவளுக்கு உகந்த நாள் ஞாயிறு. அன்று நீங்கள் இந்த விரதத்தை செய்யலாம். மாரியம்மனுக்கு ஆவணி ஞாயிறு சிறப்பான நாள் .

நான் கொடுக்கின்ற பரிகாரங்களை நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் செய்தால் தான் உங்களுக்கு பலன் கிடைக்கும். நிராசையுடன் செய்தால் உங்களுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது. 

சோதிடத்தில் எனக்கு இந்த தோஷம் இருக்கிறது அந்த தோஷம் இருக்கிறது என்று முடங்கிபோகாமல் இருக்கின்ற நல்ல கிரகங்களின் துணையோடு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த என்ன வழி என்று பாருங்கள். அப்பொழுது தான் உங்களால் முன்னேற்றத்திற்க்கு செல்ல முடியும். 

இன்று தான் பிறந்தது போல் இருக்கும் பார்த்தீர்கள் என்றால் திடிர் என்று வயது ஏறிக்கொண்டே செல்லும் அப்பாடா என்று திரும்பி பார்க்கையில் நீங்கள் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் நிற்ப்பீர்கள் அதனால் சோர்வு தராமல் எவ்வளவு வேகத்துடன் செயல்படமுடியுமோ அவ்வளவு வேகத்தில் செயல்பட்டு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டு அடுத்தவரையும் மேம்படுத்துங்கள்.

இது எனது  200 ஆவது பதிவு எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்த வாசகர்கள் மற்றும் தமிழ்வெளி,தேன்கூடு போன்ற தளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து எனது தளத்திற்க்கு வாருங்கள் கடவுள் அருளால் உங்களை மேம்படுத்துகிறேன்.

 நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: