Followers

Thursday, October 18, 2012

ஆன்மீக அனுபவங்கள் 2


வணக்கம் நண்பர்களே கடைசி வரை காப்பாற்ற ஒரு ஆள் தேவை என்ற காரணத்தால் அதனை அடைந்தது எப்படி என்று ஏற்கனவே உங்களுக்கு சொல்லிவிட்டேன்.ஒரு சக்தியை எடுத்தது எப்படி என்று ஏற்கனவே உங்களுக்கு தெரியும்.

நாம் சாகும் வரை அது நம்மிடம் இருக்கும். நாம் இறக்கும் போது அதனை அடுத்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு நாம் இறக்க வேண்டும். அப்பொழுது சாவு என்பது நம் கையில் வந்துவிடுகிறது. நீங்கள் அந்த சக்தியை ஒப்படைத்தால் தான் சாவு உங்களை தொடமுடியும் அப்படி என்றால் அதற்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்று பாருங்கள். 

ஒரு மனிதன் இறுதி நாட்களில் அவன் செத்தான் என்று பெயர் வரக்கூடாது. ஆடு,மாடு,பறவை செத்துவிட்டது என்று பெயர் வரலாம் ஆனால் மனிதன் செத்தான் என்று பெயர் வந்தது என்றால் அவன் வாழ்ந்த வாழ்க்கை வீண். மனிதனுக்கும் ஐந்தறிவுள்ள ஜீவனுக்கும் உள்ள வித்தியாசம் அது தான். 

இந்த சக்தியை கடைசியில் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு இறக்க வேண்டும் என்று சொன்னேன் அல்லவா சில பேர் இந்த சக்தியை கோவில்களில் ஒப்படைத்துவிட்டு செல்வார்கள். சரியான சிஷ்யன் கிடைக்கவில்லை என்றால் கோவில்களில் ஒப்படைத்துவிட்டு செல்வார்கள் அந்த மாதிரி ஒப்படைத்துவிட்டு சென்ற கோவில்கள் இன்றும் உள்ளது. அது தகுந்த நேரம் வரும் போது வெளிப்படும் அது வரை அங்கேயே இருக்கும். அதை வெளியில் எடுக்கலாம் ஆனால் அது விருப்பபடவேண்டும். அந்த நேரத்தில் அது சாத்தியம். 

இன்றைக்கு நாம் எத்தனையோ மந்திரங்களை வைத்துக்கொண்டு எதாவது வருமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம் உண்மையில் இந்த மந்திரங்கள் வேலை செய்வது ஒரு சக்தி நம்மிடம் வரும்போது மட்டுமே சாத்தியம். இந்த சக்தியை நமக்கு தருவது மந்திரங்கள் மட்டும் கிடையாது. குருவின் மூலம் மட்டுமே நமக்கு கிடைக்கும். குரு மனது வைத்தால் மட்டுமே அது நமக்கு வரும். 

அந்த குருவிற்க்கு அவரின் குருவின் மூலம் அது கிடைக்கும். வழி வழியாக இது வரும். சக்தி என்பது ஒரு மரம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த மரத்தின் கிளைகளை மட்டும் நமக்கு குரு கொடுப்பார். அந்த கிளைகளை வைத்துக்கொண்டு நாம் நடக்கவேண்டும். 

ஒரு கிளை மட்டும் நமக்கு கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு தான் நமது வழியை தேடவேண்டும். இதை படிக்கும் நீங்களே எத்தனையோ பேர் என்னிடம் கேட்டார்கள். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் எங்கே தேடுவது என்று எனக்கும் ஆசை தான் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று எண்ணம் தான் ஆனால் என்னிடம் இருப்பதை மரமாக அதை மாற்றி அந்த மரத்தில் இருந்து ஒவ்வொரு கிளைகளாக அதனை கொடுக்க வேண்டும். 

என் வாழ்நாட்கள் முழுவதும் கஷ்டபட்டு அந்த மரத்தை வளர்த்தால் அந்த மரத்தின் கிளைகள் மொத்தம் 18 மட்டுமே கிடைக்கும். ஒரு கிளையை வளர்ப்பதற்க்கு எனக்கு பல வருடங்கள் ஆகும் என் சக்தியை முழுவதும் செலுத்தி அதனை வளர்க்க வேண்டும்.

எனது கிளையின் ஆணிவேர் எங்கு இருக்கின்றது என்றே தெரியவில்லை எனக்கு கொடுத்த குரு அவருக்கும் தெரியவில்லை. ஒரு கிளையை அடுத்தவருக்கு கொடுப்பது என்பது எனது கையை வெட்டிக்கொடுப்பதற்க்கு சமம். 

இன்று அனைவரும் மந்திரங்களை பயில்கிறார்கள் ஆனால் அதற்கு சக்தி இல்லாமல் போனதற்க்கு காரணம் இந்த தெய்வசக்தியை எடுக்காமல் செய்வதால் அதற்கு பயன் இல்லை.

ஒரு தெய்வத்தை மட்டுமே எடுக்க வேண்டும் அதன் மூலம் பல கிளைகளை நீங்கள் உருவாக்க வேண்டும். கிளைகள் உருவாக்குவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக தான் இருக்கும்.

இன்று அனைவரும் மந்திர பயிற்சி செய்கிறேன் என்று சொல்லுகிறார்கள். 108 நாட்கள் செய்வார்கள் அதன் பிறகு அடுத்த மந்திரத்தை எடுப்பார்கள் இதற்கு காரணம் அந்த மந்திரங்கள் வேலை செய்யவில்லை என்று தான் அர்த்தம். 

குரு இல்லை என்றால் நீங்கள் வாழ்நாட்கள் முழுவதும் மந்திரங்களை படித்துக்கொண்டே இருக்கலாம் அதனால் எதுவும் நடைபெறாது. நீங்களே உங்கள் மனதை ஏமாற்றிக்கொள்ளலாம் நான் மந்திரங்கள் பயிலுவதால் அமைதியாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வீர்கள். அது உண்மையான அமைதி கிடையாது.

உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். ஒரு குரு உங்களுக்கு மந்திரங்களை சொல்லி தருகிறேன் என்று ஒப்புக்கொண்டுவிட்டார் என்றால் அவரை விட்டு விடாதீர்கள் அவரை அப்படியே பிடித்துக்கொள்ளுங்கள். அவர் தான் உங்களுக்கு உலகம் ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் நான் குரு கிடைப்பதற்க்கு அவ்வளவு கஷ்டப்பட்டேன்.

இன்றும் என்னுடைய குருநாதரை விட்டு எனக்கு பிரியமனம் வராது. அவரிடம் இருக்கும் போது எனக்கு உலகம் வேறு கிடையாது எனது உலகமே அவர் தான் என்று என் மனம் நினைக்கும். 

அவரின் கிளையை கொடுத்தவராயிற்றே அவரின் கையை கொடுத்து என்னை வளர்த்தவரை பிரிய எப்படி மனம் வரும். இந்த மனநிலை இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு குரு நாதர் கண்டிப்பாக கிடைப்பார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: