Followers

Friday, October 19, 2012

ஆன்மீக அனுபவங்கள் 4



வணக்கம் நண்பர்களே சென்ற பதிவில் ஊரேயே காப்பாற்றிய நிகழ்வை சொல்லுகிறேன் என்று சொன்னேன் அல்லவா அதனைப்பற்றி இப்பதிவில்  பார்க்கலாம். சில ஊர்களுக்கு நடந்து செல்வோம் பொதுவாக எமது பயணங்கள் அனைத்தும் நடை பயணமாக தான் இருக்கும்.

அப்படி ஒரு ஊருக்கு செல்லும்போது அந்த ஊரில் ஒரு வில்லங்கம் நடந்தது. அந்த ஊர் எது என்று சொல்லவில்லை அதனை சொல்லி பெயரை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதே நேரத்தில் அந்த ஊரில் நடந்த வில்லங்கத்தை தடுத்து நிறுத்தியது நாங்கள் தான் என்று சொல்லவும்  இல்லை.

இது மாதிரி செயல்கள் தான் எங்களை பொறுத்தவரை மக்கள் சேவை அதை அறிந்ததால் அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த ஊரில் ஒரு பெருமாள் கோவில் உள்ளது அந்த ஊரின் மக்களுக்கு அந்த கோவிலில் துளசி விற்பது தான் பிரதான தொழில்.

துளசியை பறித்து வந்து அதை மாலை கட்டி அந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு விற்பது வேலை இங்கு தான் பிரச்சினை ஆரம்பம். பொதுவாக துளசியை கையாள்வது கொஞ்சம் சுத்தமாக இருக்க வேண்டும்.

பாவம் ஏழை மக்களுக்கு தெரியவாய்ப்பிலை இவர்கள் சுத்தம் கொஞ்சம் குறைவு தான் என்று சொல்ல வேண்டும். இவர்கள் குறைந்த பட்சம் காலையில் எழுந்து குளித்துவிட்டு பறித்தாலும் ஒன்றும் நடந்து இருக்காது.

அந்த வீடுகளில் பார்த்தால் திடிர் திடிர் என்று இறப்பு நடக்க ஆரம்பித்து இருக்கிறது. வீட்டில் உள்ள இளைஞர்கள் கூட இறந்து இருக்கிறார்கள். சாவு விழாத வாரமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எந்த ஊராக இருந்தாலும் இந்த மாதிரி துர்சக்திகள் வருவது சுடுகாடுகளில் இருந்து தான் வரும். அதனை முதலில் கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்தி அதற்கு செய்ய வேண்டியது செய்தோம். அதன் பிறகு அந்த ஊரில் சாவு என்பது 2 வருடங்களுக்கு பிறகு ஒரு முதியவர் இறந்தார்.இன்று அந்த ஊர் மக்கள் நன்றாக வாழ்கிறார்கள்.

ஒரு ஊரில் உள்ள கோவில்களை ஒழுங்காக பராமரிக்கவில்லை என்றாலும் இதே மாதிரி நடைபெறும். நீங்கள் கண்டுக்கொள்ளவில்லை என்றாலும் இதே பிரச்சினை வரும்.

இதனை நீங்கள் படித்துவிட்டு நீங்கள் நினைக்கலாம் இது எல்லாம் உண்மையாக இருக்குமா என்று நினைக்க தோன்றும். இது அனைத்தும் உண்மை தான். உங்களுக்கு இது தெரியவாய்ப்பில்லை ஆனால் நீங்கள் இந்த மாதிரி பயிற்சி செய்யும் போது எங்கேடா அந்த ராஜேஷ் இருக்கிறான் என்று நினைக்க தோன்றும் இல்லை அவன் சொன்னான் டா அப்படியே நடக்கிறது என்று நினைக்க தோன்றும் இந்த நிலை வந்தாலே நான் எழுதியதில் வெற்றி பெற்றுவிட்டேன் என்று அர்த்தம்.

சும்மா ஏதோ படித்துவிட்டு போய் சுடுகாட்டில் போய் நிற்காதீர்கள் அதற்கு தகுந்த பயிற்சி செய்யாமல் செல்ல கூடாது. சும்மா போய் சுடுகாட்டை பார்க்கலாம்.அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று அங்கு போய் ஏதாவது வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

நிறைய அனுபவங்கள் இருக்கிறது அதனை எல்லாம் எழுதினால் இந்த பதிவு பக்கம் யாரும் பயந்து கொண்டு வரமாட்டார்கள். அப்புறம் என்னை பார்க்கவே பயப்படுவார்கள். அதனால் இந்த மாதிரி அனுபங்களை எழுதமாட்டேன் வேறுவிதமாக எழுதுகிறேன்.

நீங்கள் என்னை நேரில் பார்த்தால் நான் ஒரு சராசரி மனிதனாக தான் இருப்பேன். எல்லோரையும் எனக்கு பிடிக்கும். உங்களுக்கும் என்னை பிடிக்கும். அதை தான் விரும்புவேன். நீங்கள் இதனை பயின்றாலும் நீங்களும் வெளியில் காட்டிக்கொள்ள கூடாது.

நீங்கள் பயிற்சி செய்யும் போதும் நான் பயிற்சி செய்கிறேன் என்று வெளியில் சொல்லாதீர்கள் மக்கள் உங்களை கண்டு ஒட போகிறார்கள். ஒரு சராசரி மனிதன் போல வாழ கற்றுக்கொள்ள வேண்டும் கழுத்தில் கொட்டை நெற்றியில் பட்டை உடையில் காவி என்று காட்டாமல் சராசரியாக இருக்க வேண்டும். அனைத்தும் மனதில் தான் இருக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

தனி காட்டு ராஜா said...

///////ஒரு சராசரி மனிதன் போல வாழ கற்றுக்கொள்ள வேண்டும் கழுத்தில் கொட்டை நெற்றியில் பட்டை உடையில் காவி என்று காட்டாமல் சராசரியாக இருக்க வேண்டும். அனைத்தும் மனதில் தான் இருக்கிறது.//////


I LIKE YOUR APPROACH VERY MUCH :)