Followers

Sunday, October 14, 2012

கும்பம் : ஏழாவது வீட்டு தசா



கும்ப ராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலன் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

கும்ப லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது சிம்மம் அதக் அதிபதி சூரியன். கும்ப லக்கனத்தின் அதிபதி சனி. ஏழாவது வீட்டு அதிபதி லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் சூரியனுக்கு இந்த வீடு பகை

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். திருமணம் நடைபெற்று இருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு இருக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கும்ப லக்கனத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு சூரியனுக்கு இந்த வீடு நட்பு 

திருமண பேச்சு எடுத்தால் உடனே திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் சந்தோஷம் இருக்கும். கூட்டு தொழில் ஆரம்பிக்க சரியான வாய்ப்பு வரும். துணைவரால் பணபுழக்கம் ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கும்ப லக்கனத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். சூரியனுக்கு இந்த வீடு உச்சம்.

திருமண ஏற்பாடு விரைவில் நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவு தருவார்கள். கணவன் மனைவி அடிக்கடி சுற்றுலா செல்லும் வாய்ப்பு உருவாகும். 

ஏழாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கும்ப லக்கனத்திற்கு நான்காவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன் சூரியனுக்கு இந்த வீடு பகை

திருமண ஏற்பாட்டில் தாமதம் ஏற்பட்டு அதன் பிறகு நடைபெறும். திருமண வாழ்வில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படும். கூட்டு தொழிலும் சிறக்காது உங்கள் துணைவர் உங்கள் தாயிடம் சண்டை போடுவார். வீட்டில் நிம்மதி குறைவாக இருக்கும்.

ஏழாம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கும்பத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். சூரியனுக்கு இந்த வீடு சமம்.

பெரும்பாலும் திருமணம் காதல் திருமணமாக அமைய வாய்ப்பு ஏற்படும் அதுவும் உங்களின் தந்தை வழி மாமவின் பெண்களாக இருக்க வாய்ப்பு அதிகம். திருமண வாழ்வில் சிறு சச்சரவு இருக்கும். கூட்டு தொழில் லாபம் வரும். குலதெய்வ வழிபாடு செய்ய போவீர்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கும்ப லக்கனத்திற்க்கு ஆறாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். சூரியனுக் இந்த வீடு நட்பு

திருமண ஏற்பாட்டில் சண்டையோடு முடியும் உங்களின் பகைவர் வீட்டு பெண்ணை திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். திருமண வாழ்வில் இருவரும் விட்டு கொடுத்து செல்வது நலம் இல்லை என்றால் இருவரும் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து பேச வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாம் வீட்டிலேயே சம்பந்தபட்டு தசா நடைபெற்றால் கும்ப லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன் சூரியனின் சொந்த வீடு

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமணம் நடைபெற்று இருந்ததால் துணைவர் வந்ததால் யோகம் வந்ததா அல்லது யோகம் வந்ததால் துணைவர் வந்ததா என்று நினைக்க தோன்றும் மொத்தத்தில் நல்ல பலனை கொடுக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கும்ப லக்கனத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன் சூரியனுக்கு இந்த வீடு சமம்.

திருமண ஏற்பாடு மாமன் வகையில் நடைபெறும். திருமண வாழ்வில் பிரச்சனை தான். துணைவர் குடும்பத்தை நடத்துவதில் ஈடுபாடு காட்டமாட்டார். அந்தளவுக்கு இந்த தசா நன்றாக இருக்காது.

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கும்ப லக்கனத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சூரியனுக்கு இந்த வீடு நீசம்.

திருமண நடைபெறவில்லை என்றால் திருமண ஏற்பாட்டில் தாமதம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது. கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்படும். பெரியோர்களிகன் தலையிட்டால் அமைதி குறையும்.

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கும்ப லக்கனத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய் சூரியனுக்கு இந்த வீடு நட்பு வீடு

திருமணம் நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உள்ளவர்கள் மூலம் நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். துணைவரால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் துணைவர் வீட்டிலிருந்து தொழிலுக்கு உதவி செய்வார்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி பதினோராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கும்ப லக்கனத்திற்க்கு பதினோராவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு. சூரியனுக்கு இந்த வீடு நட்பு.

திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி ததும்பும். துணைவரால் வருமானம் உண்டு. நண்பர்கள் வட்டம் உதவி செய்வார்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் கும்பத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி.சூரியனுக்கு இந்த வீடு பகை.

திருமண ஏற்பாடு நடைபெறாது பல தடங்கள் ஏற்படும். திருமண வாழ்வும் மகிழ்ச்சி இருக்காது. மொத்தத்தில் இந்த தசா கஷ்டத்தை மட்டுமே தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: