Followers

Saturday, October 27, 2012

திருமணமும் அடிப்படையான செயல்பாடும்



வணக்கம் நண்பர்களே நாம் ஏழாம் வீட்டு தசாவை பார்த்து வருகிறோம் அதனால் அந்த தசாவை சார்ந்த திருமணத்தையும் சேர்த்து பார்த்து வருகிறோம்.  கூடிய விரைவில் ஏழாவது வீட்டு தசாவை முடித்து அடுத்து ஒரு தசாவை எடுப்போம். ஏழாம் வீட்டு தசா நீண்ட நாட்களாக செல்கிறது. அடுத்து எந்த தசாவை எடுக்கலாம் என்பதை தெரிவியுங்கள்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று வசனம் என்று பேசுவதோடு சரி. அதற்கான ஏற்பாட்டை ஒரு வருட காலத்திற்க்கு முன்பே எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவசர கல்யாணம் என்று அடுத்த மாதம் திருமணம் என்று ஏதோ ஒரு நாளை எடுத்து அந்த நாளில் திருமணத்தை முடிப்பது. ஒரு தவறான நாளில் திருமணம் நடந்தாலும் அந்த நாளின் கெட்ட நேரம் இந்த மணமக்களை பிரிக்கும்.

திருமண நாள் குறிப்பது திருமண நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணம் நடத்தும் தேதி கண்டிப்பாக வளர்பிறையில் குறிக்க வேண்டும். சந்திரனின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

நாள் செய்வதை நல்லோர் செய்யமாட்டார்கள் என்பது எதற்கு பொருந்துதோ இல்லையோ திருமண நிகழ்ச்சிக்கு பொருந்தும். இருவருக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டம தினத்தில் மனது கவலை கொள்ளும் அந்த நேரத்தில் திருமணத்தை நடத்தினால் வீண் பிரச்சினை உருவாகும்.

ஜாதகங்களை இணைக்கும் போது அந்த ஜாதகங்களின் பொருளாதார நிலையை கவனிக்க வேண்டும். ஜாதகங்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

இருவரின் ஜாதகத்தில் ஒருவருக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் அவரின் ஜாதகங்களை இணைக்கலாம். ஒரு வறுமையோடு இன்னொரு வறுமையை சேர்த்தால் இரண்டுமே வறுமை தான்.

திருமணத்திற்க்கு லட்சக்கணக்கில் செய்கிற செலவில் சோதிடர்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகப் போவதில்லை. இதில் கஞ்சனம் தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

நல்ல வரனை தேர்ந்தெடுப்பது போல நல்ல சோதிடரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

திருமணத்திற்க்கு முன் நேரம் ஒதுக்கி நிறைய நேரம் எடுத்துக்கொண்டு ஆர அமர யோசித்துத் திருமணம் செய்யுங்கள். உங்களின் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக ஒரு வருட காலம் எடுத்துக் கொள்ளுங்கள். வரனைப்பற்றி அனைத்து தகவல்களையும் பார்த்து நன்றாக ஆலோசித்துவிட்டு திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ளுங்கள்.

சில பிள்ளைகள் திருமணத்திற்க்கு முன்பு யாராவது காதலித்து இருப்பார்கள் அவர்களுக்கு நீங்கள் பார்க்கும் வரன் பிடிக்காது உங்களுக்காக ஒத்துக்கொள்வார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மனசுஅந்த காதலை நினைத்து அப்பொழுது பிரச்சினையை ஏற்படுத்துவார்கள் எத்தனை பொருத்தம் இருந்தாலும் மனப்பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து திருமணத்தை செய்யுங்கள்.

திருமணங்களில் ஏதாவது தவறு செய்து விட்டு அப்புறம் கையை பிசைந்து கொண்டு இருப்பது முட்டாள் தனமான ஒன்று. ஆபத்து வரும்முன் காப்பவன் தான் அறிவாளி வந்த பின் தவிப்பவர் ஏமாளி. நீங்கள் அறிவாளியாக இருந்து உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் சிற்பிகளாக இருக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: