Followers

Friday, October 26, 2012

சனிப்பிரதோஷ ஸ்பெஷல்



வணக்கம் நண்பர்களே நாளை சனிப்பிரதோஷம் அதனால் நம்மால் முடிந்த உதவியை சனிபிரதோஷத்திற்க்கு செய்வோம். 

பட்டினத்தார் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவரைப்பற்றி ஒரு செய்தியை சொல்லி சனிப்பிரதோஷ ஸ்பெஷலை ஆரம்பித்து வைக்கிறேன். உங்களால் முடிந்த சிவனைப்பற்றிய செய்திகளை அனுப்புங்கள்.பதிவில் போடலாம். 

சிதம்பர கோவில் வாசலில் பட்டினத்தார் அமர்ந்து இருக்கிறார். அவருடன் அவரின் சீடர் பத்திரகிரியாரும் அமர்ந்து இருக்கிறார். பட்டினத்தார் சீடரை பார்த்து சாப்பிடுவதற்க்கு வாங்கிவர சொல்லுகிறார் சீடர் போய் சாப்பாட்டை வாங்கி வருகிறார். 

சீடர் வாங்கிவந்த சாப்பாட்டை சாப்பிட்ட பட்டினத்தார் சீடரின் முகத்தில் அதை திப்பிகிறார் இது எல்லாம் சாப்பாடா என்று சொல்லுகிறார். சீடர் அந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கோவிலின் தெற்கு கோபுரத்திற்க்கு செல்லுகிறார் அந்த சாப்பாட்டை சாப்பிடுகிறார். அப்பொழுது ஒரு நாய் ஒன்று வருகிறது அதற்க்கும் அந்த சாப்பாட்டை கொடுக்கிறார். அந்த நாய் சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக்கொள்கிறது.

பத்திரகிரியார் அந்த நாயை விரட்டினாலும் செல்லாமல் அங்கேயே படுத்துக்கொள்கிறது. அப்பொழுது கிழக்கு கோபுர வாயில் இருக்கும் பட்டினத்தாரிடம் சிவன் பிச்சைகார வேடத்தை போட்டுக்கொண்டு வருகிறார் வந்தவர் பட்டினத்தாரிடம் எனக்கு சாப்பிட சாப்பாடு கொடு என்கிறார்.

அப்பொழுது பட்டினத்தார் அவரிடம் நானே கோவணத்துடன் அமர்ந்து கொண்டு இருக்கிறேன் இந்த கோவனத்தை விடலாமா அல்லது இப்படியே இருக்கலாமா என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன் நீ தெற்கு கோபுரத்தின் வாசலுக்கு போ அங்கு ஒருத்தன் குடு்ம்பத்தோடு அமர்ந்து இருக்கிறான் அவனிடம் போய் கேள் என்கிறார்.. சிவனும் நேராக தெற்கு கோபுர வாசலுக்கு செல்லுகிறார். அதை தன் ஞானத்தால் அறிந்த பத்திரகிரியார் நம்மை போய் நமது குரு குடும்பத்தோடு இருக்கிறேனே என்று சொல்லிவிட்டாரே எல்லாம் இந்த நாயால் தானே வந்தது என்று நினைத்து தன் கையில் இருக்கும் திருவோட்டால் அந்த நாயின் கழுத்தை அறுக்கிறார். 

அப்பொழுது சிவன் அதனை பார்த்து அவருக்கும் அந்த நாய்க்கும் மோட்சத்திர்க்கான வழி சொல்லுகிறார். இதனை அறிந்த பட்டினத்தார் சிவனிடம் கேட்கிறார். எனக்கு தானே முதலில் மோட்சத்தை தரவேண்டும். அதற்கு சிவன் உன்னால் இன்னும் விடமுடியாத ஒன்று இருக்கிறது உனக்கு இது நேரம் இல்லை நுனி கரும்பு இனிக்கும் போது உனக்கு மோட்சம் கிடைக்கும் என்று சொல்லுகிறார் நுனி கரும்பு என்பது பேரானந்தம். 

பட்டினத்தார் தன் சீடனிடம் நடந்து கொண்டது சீடனை சோதனை செய்வதற்க்காக ஆனால் சீடனுக்கு முதலில் மோட்சம் கிடைத்தது அதன் பிறகு தான் பட்டினத்தாருக்கு மோட்சம் கிடைத்தது.

நண்பர்களே பட்டினத்தார் பாடல்கள் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மோடசத்திற்க்கான வழியை எளிதில் புரியும்படி பாடி வைத்துள்ளார் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அதனை படித்து பாருங்கள்.

சனிபிரதோஷத்திற்க்கு உங்களுக்கு தெரிந்த சிவனின் பெருமையை உங்களின் ரசணையோடு எழுதி அனுப்புங்கள். சனி பிரதோஷ நாளில் இவ்வழியிலும் நாம் புண்ணியம் தேடலாம். உங்களுக்கு இப்பொழுதே நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

E-mail: astrorajeshsubbu@gmail.com

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



No comments: