Followers

Monday, October 8, 2012

மகரம் : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே மகரராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலன் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

மகர லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். மகரம் சனியின் சொந்த வீடு சந்திரன் லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் சந்திரனுக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும். திருமண ஏற்பாட்டில் தடை ஏற்பட்டு பிறகு திருமணம் நடைபெறும. திருமணம் நடைபெற்று இருந்தால் துணைவர் உங்களின் பேச்சை கேட்டு நடப்பார் அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்துக்கொண்டு செல்வார்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மகர லக்கனத்திற்க்கு இரண்டாவது வீடாக கும்ப ராசி வருகிறது இதன் அதிபதி சனி சந்திரனுக்கு இந்த வீடு சமம்.

திருமண நடைபெறாமல் இருந்தால் திருமண ஏற்பாடு நடைபெறும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். துணைவர் மூலம் தனவரவு இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மகர ராசிக்கு மூன்றாவது வீடாக வருவது மீனம் அதன் அதிபதி குரு சந்திரனுக்கு இந்த வீடு சமம்.

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். கூட்டு தொழில் லாபம் தரும். இன்ப சுற்றுலா செல்லவார்கள். கமிஷன் தொழிலில் நல்ல வருமானம் வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மகரராசிக்கு நான்காவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். சந்திரனுக்கு இந்த வீடு சமம்.

திருமண ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டு இருந்தால் அது உங்களின் வீட்டிற்க்கு அருகில் உள்ளவர்களிடம் இருந்து விரைவில் நடைபெறும். உங்களின் மனைவி உங்கள் தாயார் மீது அன்பை பொழிவார்.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மகரராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன் சந்திரனுக்கு இந்த வீடு உச்சம்.

திருமணம் காதல் திருமணமாக இருக்கும். திருமண வாழ்வு நன்றாக இருக்கும். துணைவரால் உங்களின் புகழ் ஓங்கும். துணைவர் மூலம் வருமானம் இருக்கும். கூட்டு தொழில் லாபம் தரும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டு சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மகரராசிக்கு ஆறாவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன். சந்திரனுக்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமணம் அமைவது தாமதம் ஆகும். திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டு காவல் நிலையம் செல்ல நேரிடும். சில நேரங்களில் பிரிவும் ஏற்படும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மகரத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி ச்ந்திரன் சந்திரனின் சொந்த வீடு

திருமண ஏற்பாடு நடைபெறும். திருமண வாழ்வு மிகுந்த சந்தோஷத்தை தரும்.a கூட்டு தொழில் தொடங்க சரியான காலம் இது. பலவகையிலும் இந்த தசா நன்மையை தரும்.

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மகரத்திற்க்கு எட்டாவது வீடாக சிம்மம் வருகிறது அதன் அதிபதி சூரியன். சந்திரனுக்கு இந்த வீடு நட்பு வீடு

திருமண ஏற்பாட்டில் தடை ஏற்படும். திருமண வாழ்வில் சிறிய பிரச்சினை அவ்வப்போது வந்து போகும். கூட்டு தொழில் லாபம் வரும். 

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மகர ராசிக்கு ஒன்பதாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். சந்திரனுக்கு இந்த வீடு நட்பு வீடு.

திருமண ஏற்பாடு வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் நடைபெறும். பெரியவர்களை நீங்கள் மதிப்பீர்கள் அதனால் அவர்கள் உங்களுக்கு உதவிகரம் நீட்டுவார்கள். பெரியவர்களின் சொத்துக்கள் உங்களுக்கு தருவார்கள்.

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மகரத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சந்திரனுக்கு இந்த வீடு் சமம்.

திருமண பேச்சு நடைபெறும் திருமண பேச்சை உங்கள் அலுவலகத்தில் உள்ள பெண்கள் மூலம் நடைபெறும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். துணைவர் மூலம் உங்களின் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மகரத்திற்க்கு பதினொராவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். சந்திரன் இந்த வீட்டில் நீசம்.

திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமணம் செய்வதில் இரு மனதில் இருக்கும் திருமணம் செய்யலாமா அல்லது செய்ய வேண்டாமா என்று மனதில் போட்டு குழப்பிக்கொள்வார். திருமண வாழ்வில் மகிழ்ச்சி குறைவாகதான் இருக்கும். 

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மகரத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு சந்திரனுக்கு இந்த வீடு சமம்.

திருமண நடைபெறாமல் இருந்தால் திருமணம் நடைபெறும் திருமணம் நடைபெற்று இருந்தால் நல்ல மகிழ்ச்சியோடு திருமண வாழ்வு செல்லும். கூட்டு தொழில் நன்றாக செல்லாது. 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: