Followers

Tuesday, October 23, 2012

ஈசாவாஸ்ய உபநிஷதம்



வணக்கம் நண்பர்களே ஈசாவாஸ்ய உபநிஷதம் என்று ஒரு உபநிஷதம் இருக்கிறது. இந்த உபநிஷதம் யஜூர் வேதத்தில் உள்ளது. இந்த உபநிஷத்தின் தந்தை தத்யங் ஆதர்வணர். இவருக்கு ஒரு பையன் இருந்தான். அந்த காலத்தில் ரிஷிகள் எல்லாம் திருமணம் ஆனாவர்கள். அந்த பையன் இளமையில் அதிக ஆன்மிக அறிவு உள்ளவனாக இருந்தான். பின்ன இருக்காத என்ன ரிஷியின் பையனாசே ஜீன் வேலை செய்யாமல் இருக்குமா என்ன. இளம் வயதில் ஞானபால் குடித்தவன். இப்ப இருக்கும் பையன்களாக இருந்தால் ஞானபால்னா கே எப் சி யில் கிடைக்குமா அல்லது வெளிநாட்டு புராடைக்டா அல்லது எந்த டிமார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும் என்று கேட்பார்கள்.

இவர்களை சொல்லி குற்றமில்லை எந்த குழந்தைக்கும் பத்து வயதிற்க்குள் ஆன்மீகத்தைப் பற்றி சொல்லி தரவில்லை என்றால் அந்த குழந்தையால் எந்த வயதிலும் ஆனமீகத்தில் முழுமை பெற முடியாது. இது உண்மையான விசயம் அதனால் உங்கள் குழந்தைக்கு ஆன்மீக அறிவை பத்து வயதிற்க்குள் சொல்லி கொடுத்துவிடுங்கள்.

ஒரு பிராமணர் ஆசிரியர் எனக்கு தொடக்கபள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார் அவர் பெயர் சங்கரநாராயணன். அவர் என் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார் அவர் வீட்டிற்க்கு எல்லாம் என்னை கூட்டிக்கொண்டு செல்வார். அவர் அந்த வயதில் எனக்கு கற்பித்த ஆன்மீக விசயங்கள் தான் இன்று வரை சிந்தனையை தூண்டிய செயல்.

சரி விசயத்திற்க்கு வருகிறேன். இந்த உபநீஷதம் முழுவதும் பார்த்தால் இவருக்கும் அவரது பையனுக்கும் நடக்கும் உரையாடல் போலவே இருக்கும். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் விதமாக உள்ளன.

ஒரு நான் அந்த பையன் அவனின் தந்தையை அணுகி தந்தையே எனக்கு குரு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்கிறான். பார்த்தீர்களா தந்தையிடமே தீட்சை பெறுவது எவ்வளவு பெரிய விசயம் நாம் எல்லாம் இப்பொழுது குரு எங்கு கிடைப்பார் என்று தேடிக்கொண்டு இருக்கிறோம். அந்த காலத்தில் அவர்களின் தந்தை குருவாக இருந்து தனது குழந்தைகளுக்கு வழங்கி இருக்கிறார். இதை தான் நான் சொல்லுகிறேன். நீங்கள் கற்று உங்கள் குழந்தைக்கு கொடுங்கள் என்று ஆனால் நீங்கள் வாயை திறப்பதில்லை. அனைத்திற்க்கும் மௌனம் தான் பதிலாக தருகிறீர்கள்.

அவர் சொல்லுகிறார் ஓம் இது தான் பரிபூர்ணம். உலகம் உருவானது ஓம் என்ற பூர்ணத்தால் இந்த பூர்ணம் தான் என்னிடமும் உள்ளது உன்னிடம் உள்ளது. பூரணத்தினின்று பூரணத்தையெடுத்தும் பூரணமே எஞ்சி நிற்கின்றது.

உடனே அந்த பையன் கேட்கிறான். ஒரு பொருளில் இருந்து ஒரு பொருளை எடுத்தால் அந்த பொருளில் பாதி பொருள் போய்விடும் இது கணிதத்தின் நியதி ஆனால் நீங்கள் அதை எடுத்தாலும் பூர்ணமாக அதாவது முழுவதுமாக இருக்கின்றது என்கிறீர்களே எப்படி தந்தையை என கேட்கிறான். பாருங்கள் எப்படி கேள்வி கேட்கிறான்.

அதற்கு தந்தை அன்பு குழந்தையை கணித நியதி சாதாரணமாக உள்ள பொருளுக்கு வேண்டுமானால் உண்மையாக இருக்கும். எங்கும் நிறைந்திருக்கும் பரும்பொருளை கணித நியதிக்கொண்டு பார்க்ககூடாது. என்று சொல்லுகிறார்.

ஓம் தோன்றி மறையக்கூடிய இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் ஈசனால் உருவாக்கப்பட்டது அந்த ஈசுவரனின் குணத்தால் ஏற்படும் தியாகத்தால் உன்னை அறிந்துக்கொள் என்கிறார்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டும் அவசியமான பொருளை ஈசுவரன் கொடுத்துள்ளான் என ஏற்றுக்கொண்டு வாழ்வாயாக எவருடைய பொருளுக்கும் ஆசைப்படாதே.

இறந்து போனவனிடத்தில் உயிருக்கு அடையாளமான உணர்ச்சி ஏதேனும காணப்படுவதுண்டா அவ்வண்ணமே ஞானம் இல்லாதவனிடம் ஆத்மா இருக்கும் அடையாளமே செயலில் காணப்படாது.

இனி நமது டச்

அவர் சொல்லுவது உடம்பு வேறு ஆத்மா வேறு என்று பாவனை கொள்ள வேண்டும் என்கிறார். இது இந்த காலத்தில் இப்படி இருக்க முடியுமா. நமது காலில் ஒரு முள் குத்தினாலும் அய்யோ முள் குத்திவிட்டது என்று கத்தி ஊரை கூட்டிவிடுகிறோம். அனைவரும் நான் என்பது எனது உடம்பு தான் என்று வாழ்கிறோம் இந்த காலத்தில் இப்படி இருக்கலாம் ஆனால் கடைசி வரை அப்படி இருப்பது தவறு. 

அனைவரும் இல்லறத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் அவர்கள் நான் வேறு இந்த உடம்பு வேறு என்று வீட்டில் சொன்னால் வீட்டில் இருக்கும் மனைவி இவர் காலையில் நன்றாக தானே ஆபிஸ் சென்றார் மாலையில் வரும் போது ஏன் இப்படி பேசுகிறார் சென்னையில் வெயில் ஒவராக அடிப்பதால் இப்படி ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு வரும் விடுமுறை நாளில் உங்களுக்கு எலுமிச்சை பழத்தை பிழிந்து உங்கள் மனைவி தலையில் தேய்த்துவிடுவார். 

நாம் அனைவரும் இந்த உடம்புக்காக வாழ்பவர்கள் நமக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தால் நாம் நன்றாக சுகமாக வாழலாம். கார் வாங்கலாம். வீடு வாங்கலாம் A /c யில் வாழலாமா என்று நினைப்பில் தான் இருப்போம். உடம்பை விடுவது என்றால் அது முற்றிலும் துறந்தவர்களுக்கு தான் முடியுமே தவிர குடும்பத்தில் இருப்பவனுக்கு ஒத்துவராது.

எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து ஒரு வேலை கிடைக்க ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி கடைசியில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து வாழ்க்கைக்கு தேவையானதை அனைத்தும் போராடி வெற்றி பெற்று இருக்கிறேன் இவன் என்னடா என்றால் எல்லாத்தையும் விடவேண்டும் என்று சொன்னால் எப்படி இது நடைமுறையில் சாத்தியப்படும்.

இதுக்கு ஏதாவது வழி இருக்க என்று பார்க்க வேண்டும். இன்றைய நிலைப்படி பிரச்சினை எங்கு அதிகம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பிரச்சினை அதிகம் குடும்ப வாழ்க்கையில் தான் ஏற்படுகிறது. குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும் போது அங்கு தான் ஆன்மிகம் தேவைப்படுமே தவிர சந்நியாச வாழ்க்கைக்கு தேவைப்படாது. இன்று சந்நியாச வாழ்க்கை என்பது சொகுசு வாழ்க்கையாக மாறிவிட்டது. அங்கு எதற்கு ஆன்மீகம் குடும்பத்தில் இருப்பவனுக்கு தான் ஆன்மீகம் தேவைப்படும். 

ஆன்மீகத்தில் இருப்பவன் உடம்பை விடாமல் இல்லறத்தில் இருந்துக்கொண்டே அதற்கான வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதே நேரத்தில் மனிதன் கடைசி நேரத்தில் அவன் ஆன்மீக வாழ்க்கையில் மோட்சத்தை அடைய வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா சொல்லுங்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன். படித்துவிட்டு செல்ல கூடாது உங்களின் பதிலை அப்படியே பதிவில் போடுவேன். அதனால் உடனே எழுதுங்கள்.

E-mail: astrorajeshsubbu@gmail.com

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



3 comments:

R.Srishobana said...

ஆன்மிகத்தில் வெற்றி பெறுவதற்கு நல்ல வாழ்க்கை துணை அமைவது தான் முதலில் அவசியம் என்று நினைக்கின்றேன்...அதுவே பாதி வெற்றி தான்...ஆன்மிகத்தை நாம் தினசரி செய்ய வேண்டிய அத்தியாவசிய செயலாகக் கருதி வணங்க‌ வேண்டும்...கடமைக்காக மட்டும் நினைத்துக் கொண்டு வணங்கக் கூடாது...பின்பு நாம் ஆன்மிகத்தில் செல்வதன் நோக்கத்தையும் உணர்தல் அவசியமாகும்...

நாம் முடிந்தவரையில் நல்லவர்களாகவும்,தூய்மையானவர்களாகவும் வாழ்தல் தான் நமது ஆன்மீகத் தேடலுக்கான காரணமாக அமைய வேண்டும்,அப்படி எண்ணி வணங்கினால் தான் நமது தேடல் பூர்த்தியாகும் என்பது என்னுடைய கருத்து...நன்றி...

rajeshsubbu said...

R.Srishobana said...
//*ஆன்மிகத்தில் வெற்றி பெறுவதற்கு நல்ல வாழ்க்கை துணை அமைவது தான் முதலில் அவசியம் என்று நினைக்கின்றேன்...அதுவே பாதி வெற்றி தான்...ஆன்மிகத்தை நாம் தினசரி செய்ய வேண்டிய அத்தியாவசிய செயலாகக் கருதி வணங்க‌ வேண்டும்...கடமைக்காக மட்டும் நினைத்துக் கொண்டு வணங்கக் கூடாது...பின்பு நாம் ஆன்மிகத்தில் செல்வதன் நோக்கத்தையும் உணர்தல் அவசியமாகும்...

நாம் முடிந்தவரையில் நல்லவர்களாகவும்,தூய்மையானவர்களாகவும் வாழ்தல் தான் நமது ஆன்மீகத் தேடலுக்கான காரணமாக அமைய வேண்டும்,அப்படி எண்ணி வணங்கினால் தான் நமது தேடல் பூர்த்தியாகும் என்பது என்னுடைய கருத்து...நன்றி...*//

தங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்லுவது உண்மை தான் நல்ல கணவர் அமையும் பட்சத்தில் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடும்.

thamirabaranithenral said...

neengal solluvathai naanum sarithan enkiren.
aanaal, appadi vazhkaithunai amaiyavillai enral, athaiyum eartu kondu irai arulai theduvathe sirandhadhu. annmeegathil vetri or tholvi kidayathu. athu oru vunarvu..