Followers

Thursday, November 29, 2012

பூர்வ புண்ணியம் 1



வணக்கம் நண்பர்களே !

மனிதன் முற்பிறவியில் செய்த நல்வினை தீயவினைகளின் தன்மைகளைப் பார்த்து அதற்கு தக்கப்படி ஒவ்வொரு பிறப்பும் ஏற்படுகிறது என்பது ஜாதகத்தின் அடிப்படை விதி ஒவ்வொரு ஜாதகத்திலும் முதலில் எழுதப்படும் வாசகம் கீழே உள்ளது

ஜெனனீ ஜென்ம ஸெளக்யானாம் வர்த்தனி குலசம்பதாம் பத்வீபூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா.

இதன் பொருள் பிறப்பின் மகிழ்ச்சியை உண்டாகுவதும் குலச்செல்வத்தை விருத்தி செய்வதும் முன் நல்வினையின் வழியாக ஜெனன பத்திரிக்கை எழுதப்படுகிறது என்பது இதன் பொருள்.

சோதிடமே முன்பிறவியில் ஏற்பட்ட பாவத்திற்க்கும் நல்ல செயலுக்கும் ஏற்பட்ட பிறப்பு என்று கூறுகிறது அதனால் முற்பிறவி உண்டு என்று தீர்மானிக்கலாம். இந்து மதம் முற்பிறவி உண்டு என்று சொல்லுகிறது.

மனிதன் மூன்று நிலைகளில் வாழ்பவன்.

நனவுலக வாழ்க்கை,கனவுலக வாழ்க்கை, நனவுலக கனவுலக இல்லாத வாழ்க்கை இந்த மூன்று நிலையில் மனிதனின் வாழ்க்கை இருக்கிறது.

நனவுலக வாழ்க்கை என்பது முழுவதும் விழித்திருக்கும் நிலை இந்த உடல் என்னுடையது நான் என்பது எனது உடல் தான் என்று எண்ணிக்கொண்டு இந்த உடலுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொண்டு வாழ்கிறான்.

கனவுலக வாழ்க்கை என்பது நாம் உறங்கும் போது இந்த உடலை சார்ந்து மற்றும் பிறவி வாசனையுடன் ஏதாவது கனவு கண்டுக்கொண்டு வாழ்கிறான்.

நனவுலக கனவுலக அற்ற வாழ்க்கை என்பது இந்த உடம்பு அல்லாத புத்திகள் அற்ற வாழ்க்கையில் வாழ்வது   ஆழ்ந்த உறக்கம்.

இந்த மூன்று நிலையிலும் யாரோ ஒருவர் மட்டும் இருக்கிறார் அது நான் என்று கூட இருக்கலாம். நாம் விழித்திருக்கும் போது நனவுலக அனுபவங்களையும் கனவு கானும் போது கனவுலக அனுபவங்களையும் ஆழ்ந்து உறங்கும் போது அனுபவங்கள் அற்ற நிலையிலும் மனிதன் வாழ்கிறான்.

நனவுலக வாழ்க்கை

நான் ராஜேஷ் நான் பிளாக் எழுதுகிறேன் நான் படிக்கிறேன் நான் பேசுகிறேன் என்று நானை மட்டும் சார்ந்து விழித்துக்கொண்டிருக்கும் போது செய்யும் அனைத்து செயலையும் செய்கின்ற செயல் நனவுலக வாழ்க்கை இதில் உங்கள் உடலை மற்றும் மனதை வைத்து அனைத்து செயலிலும் ஈடுபடுவது நனவுலக வாழ்க்கை

கனவுலக வாழ்க்கை

நாம் படுத்து துங்குகிறோம் கனவு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த கனவில் என்ன நடைபெறுகிறது இதுவரை நாம் கண்களால் பார்க்காத இடங்களையும் கேள்விபடாத இடங்களையும் மற்றும் உருவங்களையும் பார்க்கிறோம். பல சுகதுக்க அனுபவங்களையும் அனுபவிக்கிறோம். நாம் உறங்கிகொண்டு இருக்கிறோம் ஆனால் நாம் கனவு காணும் போது ஏதோ ஒரு இடத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அந்த இடத்தை நமது உடலில் இருக்கும் கண்கள் வழியாக நாம் பார்க்கவில்லை. நாம் படுக்கையில் இருந்தாலும் நாம் அந்த இடத்தைவிட்டு அசைவது கூட இல்லை ஆனால் நாம் ஓடுகிறோம் நடக்கிறோம் பல இடங்களுக்கு பயணம் செய்கிறோம்.

நாம் உறங்கும் போது நமது உடல் உறுப்புகள் ஓய்ந்து இருக்கிறது ஆனால் நாம் கேட்கிறோம் பார்க்கிறோம் நடக்கிறோம். வாசனையை உணர்கிறோம். நண்பர்களே இந்த இடத்தில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.

நமது உடல் உறுப்புகள் ஓய்ந்து இருக்கிறது ஆனால் அதன் வழியாக நடைபெறும் செயல்களை நாம் அனுபவிக்கிறோம் அப்பொழுது அதனை செய்கின்ற ஒரு சக்தி மட்டும் எந்த நிலையிலும் விழிப்புடன் இருக்கிறது. உள்ளில் யாரோ ஒருவர் இதனை கவனித்துக்கொண்டு இருக்கிறார். சில நேரங்களில் உள்ளே நடைபெறும் இந்த செயல் வெளியில் உள்ள புலன்களையும் இயக்கிவிடுகிறது. தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது வாயால் பாட்டு பாடுவது மற்றும் நடப்பது கூட நடைபெறுகிறது.

நமது உடலில் உள்ள உறுப்புகள் வழியாக வெளியில் இருக்கும் விசங்களை உள்வாங்கிறது. உள்வாங்கும் செய்திகள் மற்றும் சூட்சமாக உடலில் இருக்கும் செய்திகளையும் கலந்து கனவாக வருகிறது, நாம் பார்த்திராத கேள்விபடாத இடங்கள் செய்திகள் வருவது நமது சூட்சம உடலில் உள்ள செய்திகள் தான். இந்த சூட்சம உடல் என்பது ஆத்மா தான். இந்த ஆத்மா பல பிறவி வாசனையை அப்படியே உள்ளே வைத்திருக்கிறது என்று தான் அர்த்தம் கொள்ளவேண்டும்.

நமது மனது இருக்கிறதே அது மிகப்பெரியது எப்படி சொல்லுகிறேன் என்றால் நாம் கண்களால் பார்க்கமுடிகிற இந்த உடம்பை கண்களால் பார்க்கமுடியாத இந்த மனது எப்படி ஆட்டி படைக்கிறது.

நமது மனதில் எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருந்தால் சும்மா அப்படி இருந்துவிடுவீர்களா அதற்கு தகுந்தவாறு நாம் செயல்பட நினைப்போம். இந்த எண்ணங்கள் எப்படி தோன்றுகின்றன என்றால் முற்பிறவியில் நாம் செய்த கர்மங்களால் தோன்றுகின்றன. நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கான பலனை நாம் அனுபவிக்க வேண்டும். அதற்கு வகை செய்யும் வண்ணமே எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த எண்ணங்களில், இப்பிறவியில் நாம் தேடிக் கொண்ட அனுபவங்கள், வளர்த்துக் கொண்ட குணங்களின் பாதிப்பும் இருக்கும். ஆனாலும், பழைய வாசனைகளை அனுசரித்தே மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. ஆக, நம்மை, புதிதாய் காரியங்கள் செய்யத் தூண்டும் எண்ணங்களுக்கு ஆதாரமான வாசனைகளின் தொகுப்பு நமது முற்பிறவி.

இந்த எண்ணங்களை தூண்டசெய்வது நமது கிரகங்களாக கூட இருக்கலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும் இந்த எண்ணங்களை தூண்டசெய்யாமல் இருந்தால் என்ன நடக்கும் என்று கேள்வியை கேட்கலாம்.

அப்பொழுது நீங்கள் புரிந்துகொள்வீர்கள் சோதிடம் என்பது மாயை என்று தெரியவரும்.என்ன ராஜேஷ் நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள் நீங்கள் சோதிடர் தானே என்று கேள்வி கேட்க தோன்றும் என்ன செய்வது நான் காட்டு கத்து கத்தி ஆன்மீக அனுபவங்களை எழுதினாலும் ஒரு ஆட்கள் கூட தேறவில்லை அதில் நீங்கள் தேறிவிட்டால் எனக்கு வேலை இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



1 comment:

daran said...

மிகச் சூட்சுமமான பதிவு.
எனக்கு கோட்சாரத்தில் ராசியில் சனி பகவான் வந்து அமர்ந்த போது எனது குடும்பத்தில் உறவினரால் பிரச்னையை ஆரம்பித்து வைத்தார். அதை நான் எதிர் கொள்ள எனக்குள் கோபம், ஆத்திரம் , வேதனை -எல்லா மோசமான உணர்வுகளும் என் மனதில் பதிந்தன. பிறகு என்னை நானே சுய சிந்தனை செய்து வெளியில் வர நினைத்த போது ஒன்றை கண்டு கொண்டேன்.

எனது அறிவு மறக்க மன்னிக்க நினைத்தாலும் எனது மனம் விடாது. இரண்டு நாட்கள் அமைதியாக இருக்கும். மூன்றாம் நாள் தானாகவே உணர்வு மேல் எழும்பும். ஜோதிட அறிமுகம் பெற்ற பிறகு இது கிரகங்களின் வேலை என்று அறிவுக்கு எட்டினாலும் உணர்வை அடக்க முடியவில்லை. காரணம், அது தூண்டப்பட்டு கொண்டு இருக்கிறது. சுமார் 2 வருடத்திற்கு பிறகு தூண்டல் குறைந்து உள்ளது. எது , எப்படி தூண்டுகிறது என அறிய முயன்று தேடிக் கொண்டு இருக்கிறேன்.

நன்றியுடன்
தரன்