Followers

Wednesday, November 7, 2012

ஆன்மீக அனுபவங்கள் 18



வணக்கம் நண்பர்களே நமது நண்பர்கள் ஆன்மீக அனுபவங்கள் தொடரை படித்துவிட்டு நிறைய பேர் தாங்களே இதனை செய்துககொள்கிறோம் என்று என்னிடம் ஆலோசனை கேட்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. இந்த தொடர் இந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. 

நீங்களே இதனை செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்களை இப்பதிவில் பார்க்கபோகிறோம். நீங்கள் பூஜை அறையில் அமரும் போது வடக்கு நோக்கி அமருங்கள் முகம் வடக்கே பார்ப்பது போல் இருக்க வேண்டும். தரையில் விரிப்பு விரித்து அதன் மேல் அமர வேண்டும். 

காமாட்சி விளக்கை பயன்படுத்தலாம். விளக்குக்கு நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஊதுவத்தி சாம்பிராணி ஏற்ற வேண்டும். விநாயகனை வணங்கிவிட்டு உங்கள் குலதெய்வத்தை வணங்கவேண்டும் அதன் பிறகு உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உரு ஏற்ற வேண்டும். ஒரு நாள் ஒன்றுக்கு 108 முறை என்று உரு ஏற்ற வேண்டும். நைவேத்தியமாக அவல் பொரி வைக்கலாம். நீங்கள் 21 நாளுக்கு மட்டும் நைவேத்தியம் வைக்க வேண்டும். அதன் பிறகு தேவையில்லை.

நீங்கள் உரு ஏற்றிக்கொண்டு இருக்கும் போது அடிக்கடி கோவிலுக்கு சென்று வாருங்கள் எந்த கோவிலுக்கும் செல்லலாம். மலையில் உள்ள கோவிலாக இருந்தால் நல்லது. 

உரு ஏற்றும் போது  ருத்திராட்ச மாலை அல்லது துளசி மாலை பயன்படுத்தலாம் அந்த மாலையை நீங்கள் சட்டை பையில் எப்பொழுதும் வைத்துக்கொள்ளுவது நல்லது.

108 நாட்கள் வரை எந்த ஒரு வேண்டுதலும் இருக்ககூடாது அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று கேட்ககூடாது. 108 நாட்கள் என்பது கரு வயிற்றில் உள்ளது போன்றது 108 நாட்களுக்கு பிறகு வேண்டுதலை வைத்துக்கொள்ளுங்கள். 

முதல் 21 நாட்கள் வரை அசைவம் சாப்பிடகூடாது. தாம்பத்தியத்தில் ஈடுபடகூடாது. தாம்பத்திய உறவு என்பது 108 நாட்கள் வரை வைத்துக்கொள்ள கூடாது என்று தான் சொல்லுவார்கள் இந்த காலத்தில் இதனை யாரும் கடைபிடிப்பது இல்லை, 21 நாட்கள் மட்டும் தவிருங்கள்.

உங்கள் மனதில் தீய எண்ணங்கள் வரகூடாது. எந்த காரணம் கொண்டும் பகைமை இருக்ககூடாது. இதை கடைபிடித்து வாருங்கள். நீங்கள் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.

இது கடல் மாதிரி இந்த கடலை பற்றி இப்பொழுது தான் நீங்கள் கேள்வி பெற்று இருக்கலாம். இந்த கடலில் நீங்கள் இறங்கி உள்ளீர்கள் 108 நாட்களுக்கு பிறகு தான் ஆன்மீக மீனை பிடிக்கும் தகுதி உங்களுக்கு வரும் அது வரை தந்தளித்துக்கொண்டு இருக்க வேண்டும். பயப்படாமல் துணிவாக இறங்குங்கள் ஆன்மீக தேன் கடலில் கிடைக்கும். இந்த சிறியவனின் வேண்டுகோலை கேட்டு இதில் இறங்கி இருக்கிறீர்கள் கண்டிப்பாக ஆன்மீக தேன் குடிக்கும் காலம் கூடிய விரைவில் வரும். உங்களுக்காக இறைவனிடத்தில் நான் வேண்டுகோளை வைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


1 comment:

Unknown said...

Dear Sir,
Still confused about choosing Ishta Deivam. there are so many
1> Hanuman
2> Amman
3> Kali
4> Murugan
how do we choose. Would be grateful if you can guide more.
rgds/Surya