Followers

Friday, November 16, 2012

ஆன்மீக அனுபவங்கள் 23



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் இப்பதிவில் சோதிடத்தை வைத்து ஒரு கருத்தை சொல்லுகிறேன் பாருங்கள்.

ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் உயரவேண்டும் என்றால் சோதிடத்தில் குரு கிரகம் நல்ல நிலையில் இருக்கவேண்டும். நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் ஞானத்திற்க்கு கேது தானே முக்கிய கிரகம் இவர் என்னடா என்றால் குரு கிரகத்தை சொல்லுகிறார் என்று நினைக்கலாம்.

கடைசி நேரத்தில் தான் ஞானம் கி்டைக்கும் முதல் நிலை பயிற்சிக்கு எல்லாம் குரு கிரகம் நன்றாக இருந்தால் தான் உங்களுக்கு ஆன்மீக விசயத்தில் ஈடுபட வாய்ப்பே கிடைக்கும். பொதுவாக குரு திசை ஆரம்பித்தால் நீங்கள் இதுவரை பார்க்க கோவில் எல்லாத்தையும் பார்த்துவிடலாம். 

ஆன்மீக வாழ்விற்க்கு அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதற்க்கு குரு கிரகம் மாதிரி வேறு எந்த கிரகமும் கிடையாது. ஒருவருக்கு குரு கிரகம் மட்டும் நன்றாக அமையும் பட்சத்தில் குருவே உங்களை தேடிவருவார். குரு கிரகம் பூர்வபுண்ணியம் என்ற ஐந்தாம் வீட்டிற்க்கும் பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாம் வீட்டிற்க்கும் காரகம் வகிக்கிறார்.மிக உயர்நத வீடுகளுக்கு காரகம் வகிக்கிறார்.

குரு கெட்டால் ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடுவதற்க்கு தடைகள் ஏற்படும். ஆன்மீக வாழ்க்கையில் அவரை இழுத்து அல்லல்படவைக்கும். ஏன் இவ்வாறு செய்கிறது என்றால் எதில் உங்களை கெடுக்கமுடியுமோ அதி்ல் கொண்டு வந்து ஈடுபடுத்தி அலைச்சலை கொடுக்கும்.

நான் யாராவது ஒருவரை கொண்டுவந்து ஆன்மீக விசயத்தில் ஈடுபட வைத்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று நினைப்பேன் அவ்வாறு நினைத்து அவர்களை தேர்ந்தெடுக்கும் போது குரு கெட்டவரை எடுப்பேன் ஏன் அவ்வாறு ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றால் இல்லாதவனுக்கு ஒன்றை கொடுக்கும் போது அவன் சந்தோஷத்துடன் அதனை எடுத்துக்கொண்டு வாழ்வான் என்று நினைப்பேன். யாருக்கும் கிடைக்காததை நமக்கு கொடுக்கிறார் இதனை நாம் நல்லமுறையில் பயன்படுத்தி வாழவேண்டும் என்று நினைப்பான்  என்று இந்த மாதிரி ஆட்களை தேர்ந்தெடுப்பேன்.

இதனை அவர்கள் ஒத்துக்கொள்ளுவார்கள் ஆனால் அவனை கூப்பிட்டால் ஆயிரம் கேள்வி என்னை கேட்பான் நீங்க எதற்கு இதனை என்னிடம் கொடுக்க வேண்டும் அப்ப என்னிடம் நீங்கள் ஏதோ எதிர்பார்க்கிறீர்கள் உங்களுக்கு நான் என்ன தரவேண்டும். நீங்கள் யார் உங்களின் குரு யார் எதற்கு அவ்வாறு நீங்கள் தரவேண்டும் என்று கேட்பார்கள். இந்த வார்த்தையை ஏன் அவ்வாறு அவர்கள் பேசுகிறார்கள் என்றால் குரு கிரகம் அவ்வாறு பேச வைக்கும்.

நீங்களே இதனை சோதனை செய்து பாருங்கள் யாருக்காவது குரு நீசமாக அல்லது குரு பகையாக இருப்பவர்களை தேர்ந்தெடுத்து உனக்கு ஆன்மீக விசயத்தை சொல்லிதருகிறேன் என்று கூப்பிட்டு பாருங்கள் அவர் உங்களிடம் பேசும் போதே நீங்கள் நினைப்பீர்கள் ஏன்டா இவனை போய் தேர்ந்தெடுத்தோம் என்று நினைக்க தோன்றும்.

குரு பகையாக இருப்பவரிடம் பேசி பாருங்கள் கோவிலாவது சாமியாவது கோவிலை இடிக்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.நீங்கள் இந்த மாதிரி சோதிடத்தை சோதனை செய்து பாருங்கள் அப்பொழுது அதன் உண்மை நிலை தெரியும் அதற்காக நாம் அவர்களிடம் கோபம் கொள்ளகூடாது சோதிடம் அவ்வாறு பேச சொல்லுகிறது என்று நினைத்துக்கொண்டு அவர்கள் பூர்வ புண்ணியத்திலாவது திருந்துவார்களா என்று பார்த்து இருக்க வேண்டியது தான்.

குரு நீசமாக இருப்பவர்கள் நல்ல குரு கிடைத்தாலும் அவரை அவர்களே நீ எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவார்கள். குரு பகையாக இருப்பவர்கள் குருவிடம் சண்டை போட்டு குருவை விட்டு பிரிவார்கள். குரு கெட்டால் குருவை எதாவது வம்பில் மாட்டிவிடுவார்கள். 

ஆன்மீக வாழ்க்கைக்கு குரு கிரகம் எவ்வளவு செயல் செய்கிறது என்று பார்த்தீர்கள். பொதுவாக சோதிடத்தை நன்றாக பார்க்க தெரிந்தவன் யார் மீதும் கோபம் கொள்ளமாட்டான் ஒவ்வொருவரும் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்று அவனுக்கு தெரியும் அதனால் நீங்களும் இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு மனிதன் மீது அன்பை செலுத்துங்கள் சோதிடத்தை புரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: