Followers

Wednesday, December 19, 2012

கோச்சார பலன் ராகு பகுதி-1


வணக்கம் நண்பர்களே !
                                      கோச்சார பலனில் கடந்த கால பதிவில் ஒரு சில கிரகங்களின் பலன் இருக்கிறது மீதி உள்ள கிரகங்களின் கோச்சார பலனை எப்பொழுது தருகிறீர்கள் என்று நண்பர் ஒருவர் கேட்டார் அவரின் விருப்பம் மூலம் உங்களின் விருப்பம் நிறைவேறுகிறது.

ராகுவின் கோச்சார பலனை இப்பதிவில் பார்க்கலாம்

ராகு சந்திரன் நின்ற ராசிக்கு வரும்போது உங்களின் ராசியில் ராகு நிற்க்கும் போது நீங்கள் தொடங்கும் எந்த ஒரு சிறிய காரியமும் தடைபடும். கெட்ட பெயர் ஏற்படும். கவலை தரும் நிகழ்வுகள் ஏற்படும். 
உங்களின் உறவினர்களுடன் சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். உங்களின் பூர்வபுண்ணியத்தால் ஆதரவு வார்த்தை சொல்லுபவர்கள் இருப்பார்கள் அதனை வைத்து நீங்கள் முன்னேற்றம் அடையலாம்.

ராகு இரண்டாமிடத்திற்க்கு வரும்போது புகழ் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். தானம் செய்வதற்க்கு உங்களின் மனம் ஈடுபடும். சாப்பிடும் விசயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

ராகு மூன்றாம் இடத்திற்க்கு வரும்போது நல்ல தைரியம் ஏற்படும். அடிக்கடி அலைச்சலை ஏற்படுத்தும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். கமிஷன் தொழில் லாபம் ஏற்படாது. காதில் பிரச்சினை ஏற்படுத்தும். உங்களின் துணைவரின் உடல்நிலை பாதிக்கசெய்யும்.

ராகு நான்காமிடத்திற்க்கு வரும்போது வீட்டில் அடிக்கடி விஷஜந்துக்கள் வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் நல்லமுறையில் இருக்கும். பெரியோர்களின் ஆதரவு இருக்கும். வீட்டில் உள்ள கால்நடை ஜீவன்களுக்கு மருத்துவ செலவு ஏற்படும்.

ராகு ஐந்தாமிடத்திற்கு வரும்போது எதிர்பாராத பணவரவு வரும். நீங்கள் செய்கின்ற தொழிலில் நல்ல வருமானம் வரும். நுண்ணறிவை காட்டும் இடம் என்பதால் முடிவு எடுக்கமுடியாத நிலை ஏற்படும். வம்பு வழக்குகள் வரும். கணவன் மனைவி உறவுகள் நல்லவிதமாக இருக்காது.

ராகு ஆறாம் இடத்திற்க்கு வரும்போது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் எடுத்த அனைத்து காரியங்களும் வெற்றி வரும். உங்களின் எதிராளி அடங்கி போவார்கள். உங்களின் துணைவர் ஆதரவாக நடந்துக்கொள்வார். விழாக்கள் கொண்டாடங்களில் ஈடுபட மனம் துடிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


No comments: