Followers

Saturday, December 8, 2012

பூர்வ புண்ணியம் 2


வணக்கம் நண்பர்களே !
                                 பூர்வ புண்ணிய பகுதி இப்பதிவில் ஒரு தகவலை பார்க்கலாம்.

" ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய அேஜா நித்ய ஸாஸ்வதோயம் புராணோ ற ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே"

என்று ஒரு சமஸ்கிரத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு இது பகவத்கீதையில் இருக்கிறது இதன் அர்த்தம் இந்த ஆத்மா ஒருபொழுதும் பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை.

ஆத்மா பிறப்பற்றவன் நித்யமானவன் எக்காலத்திலும் உள்ளவன் பழமையானவன் உடல் கொல்லப்படும்போது இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை.

எந்தப் பொருள்களுக்கும் ஆறு விகாரங்கள் உண்டு

1. உற்பத்தி / உண்டாவது
2. அஸ்தித்வ / உண்டான பிறகு இருப்பது
3. வ்ருத்தி / வளர்வது
4. விபரிணாமம்/ மாறுவது
5. அபக்ஷயம் / தேய்வது
6. விநாஸம்/அழிவது

இந்த ஆறு தன்மையும் ஆத்மாவிற்க்கு இல்லை என்று சொல்லுகிறார்.

1. உற்பத்தி
          பிறப்பற்றவன் என்பதால் உற்பத்தி விகாரம் இல்லை என்று சொல்லுகிறார்கள்.

2. உண்டான பிறகு இருப்பது இல்லை என்கிறார்கள் ஆதியில் இருந்து இருப்பதால் அதனை சொல்லிருக்கலாம்.

3. பழமையானவன் எப்பொழுதும் ஒரே விதமாக இருப்பவன் என்பதால் வளர்ச்சி என்ற மூன்றாவது விகாரம் இல்லை

4. எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பதால் மாறுவது இல்லை.

5. நித்ய இடையறாது இருப்பவன் என்பதால் அவனுக்குத் தேய்மானம் என்ற விகாரம் கிடையாது.

6. சரீரே ஹந்யமாநே ந ஹந்யதே. சரீரம் கொல்லப்பட்டாலும் அவன் கொல்லப்படுவதில்லை என்பதால் அழிவு என்ற ஆறாவது விகாரம் இல்லை.

சரீரத்தில் ஆத்மா இருப்பதால் பிறப்பு எடுக்கிறது என்று சொல்லுகிறோம். ஒரு தண்ணீர் குடத்தை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்க்கு எடுத்துச்சென்றாலும். குடத்தின் தன்மை அப்படியே இருக்கிறது ஆனால் இடம் மாறுகிறது. ஆத்மா ஒரே மாதிரி தான் இருக்கிறது என்று கிருஷ்ணர் சொல்லுகிறார். குடம் என்பது ஆத்மா இடம் என்பது சரீரம். சரீரம் பிறப்பு எடுப்பதை நாம் ஜென்மம் என்று சொல்லுகிறோம்.

ஆத்மாவை பற்றி நிறைய தகவல் உள்ளன. ஆத்மாவைப்பற்றி சரியாக சொல்லமுடியாது என்றும் சொல்லுகிறார் நீங்கள் எப்படி சொன்னாலும் அதன் முழுதன்மையை பற்றி சொல்லமுடியாது என்றும் சொல்லுகிறார். 

மேலே உள்ள தகவல் அனைத்தும் பகவத்கீதையில் இருந்து எடுக்கப்பட்ட தகவல். 

இதனைப்பற்றி தங்களின் கருத்தையும் சொல்லுங்கள் நண்பர்களே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: