Followers

Sunday, December 2, 2012

ராகு-கேது பெயர்ச்சி: மீனம்



வணக்கம் நண்பர்களே !
                                    இப்பதிவில் மீன ராசியை கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்த்துவிடலாம்.

ராகுவின் பலன்கள்  

ராகு உங்களின் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் இதுவரை இருந்து வந்தார் அவர் பெயர்ச்சியாகி எட்டாம் வீட்டில் அமருகிறார். அவர் எட்டாம் வீட்டில் தனியாக அமரவில்லை சனியோடு சேர்ந்து அமருகிறார் ஏற்கனவே சனி உங்களை உண்டு இல்லை என்று செய்து வருகிறார் இதில் இவரும் சேர்ந்து அமர்ந்தால் என்ன செய்வார் என்ற மனநிலை உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும்.  அவர் என்ன செய்வார் என்று பார்த்துவிடலாம். 

இதுவரை தந்தையின் உடல்நிலை கவலையை கொடுத்து இருக்கும் அந்த பிரச்சினை இப்பொழுது சரியாகிவிடும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் கமிஷன் தொழில் சிறக்கும். திடிர் பணவரவு ஏற்படும் சொத்துக்கள் வாங்குவது விற்பது நடைபெறும்.

உங்களின் உடல்நிலையில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும். ஏற்கனவே சனியின் தொந்தரவால் உடல்நிலை மோசமாக இருக்கும் இதில் இவரும் சேர்ந்துக்கொள்வதால் உங்களின் உடல்நிலையில் கவனமாக இருக்கவேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் இருங்கள். அவசர முடிவு எடுப்பதை தவிருங்கள். நண்பர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும்.


கேதுவின் பலன்கள் 

உங்களின் ராசிக்கு மூன்றாவது வீட்டில் இருந்த கேது பகவான் உங்களின் ராசிக்கு இரண்டாவது வீட்டிற்க்கு வருகிறார். குடும்ப ஸ்தானத்தில் வந்து அமருவதால் குடும்பத்தில் சச்சரவு குறைய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால் அந்த கடனை பாதியாவது திருப்பி கொடுக்க உங்களுக்கு பணவரவு வரும்.

பிற்பாதியில் பணத்திற்க்கு தட்டுபாடு ஏற்படலாம். வேற்று மதத்தினர் உதவ முன்வருவார்கள். தேவையற்ற பேச்சை குறைத்துக்கொள்ளுங்கள் அப்படி குறைக்கவில்லை என்றால் ஏதாவது வம்பில் மாட்டிக்கொள்வீர்கள்.வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் வாடிக்கையாளர்களை அறிந்து சந்தையின் தேவைகளையும் அறிந்து வியாபாரம் செய்வது நல்லது.

நண்பர்களே கோச்சார பலன்கள் ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் சுயஜாதகங்களின் நிலையை அறிந்து தான் நடைபெறும் நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள் கிரகங்களுக்கு மேலை ஒருவன் இருக்கிறான் அவனை நம்புங்கள் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் விலகிவிடும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: