Followers

Monday, December 3, 2012

ராகு-கேது பெயர்ச்சி : விருச்சிகம்



வணக்கம் நண்பர்களே !
                                         இப்பதிவில் விருச்சகத்தை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்க்கலாம்.

ராகுவின் பலன்கள்

உங்கள் ராசியில் இருந்துக்கொண்டிருந்த ராகு பகவான் இப்பொழுது பெயர்ச்சியாகி பனிரெண்டாவது வீட்டிற்க்கு சென்றுள்ளார். உங்களின் பாதங்களில் பிரச்சினை உருவாகும். உடல் ஒவ்வாமை ஏற்படும். கனவில் பாம்பு தோன்றும். உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு அதாவது உங்களின் மகன் அல்லது மகளுக்கு திருமண ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும் ஒரு சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு உருவாகும். நீங்கள் திருமணம் செய்யாமல் இருந்தால் திருமணம் நடைபெறும்.

கேதுவின் பலன்கள்

உங்களின் ராசிக்கு ஏழில் நின்றுக்கொண்டிருந்த கேது பகவான் தற்பொழுது ஆறாவது வீட்டிற்க்கு வந்துள்ளார். உங்களுக்கு பிரச்சினைகள் எங்கு இருந்து வருகிறது என்பதை பார்த்து அவர்களை உங்களின் புத்திசாலிதனத்தால் வெல்வீர்கள். வழக்குகளில் வெற்றி அடையலாம். வெளிநாட்டு நபர்கள் மூலம் வருமானம் வரும். மதுவை தொடாதீர்கள்.  

நண்பர்களே கோச்சார பலன் என்பது ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் ஜாதகத்தை பொருத்து பலன்களை தரும் அதனால் நான் சொன்ன பலன்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள் அது உங்களை காப்பாற்றும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: