Followers

Monday, December 3, 2012

ராகு-கேது பெயர்ச்சி : தனுசு



வணக்கம் நண்பர்களே !

                                          இப்பதிவில் தனுசுயை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்க்கலாம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் நின்ற ராகு பகவான் இப்பொழுது பதினோராம் இடத்திற்க்கு வந்துள்ளார். இது லாபஸ்தானம் என்பதால் நல்ல லாபத்தையும் அதே நேரத்தில் திடீர பணவரவையும் தருவார். மூத்த சகோதர்கள் மூலம் உங்களுக்கு உதவியும் கிடைக்கும். தொட்டது அனைத்தும் துலங்கும். 

உடல்நிலையில் நல்ல ஆரோக்கியம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளுக்கு திருமண ஏற்பாடு நடைபெறும். கணிணி துறையில் இருந்தால் அயல்நாடு செல்ல வாய்ப்பு உருவாகும். புதிதாக வீடு கட்டுவீர்கள் மொத்தத்தில் ராகு உங்களு்க்கு நல்லது செய்ய காத்துள்ளார்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருந்த கேது பகவான் பெயர்ச்சியாகி ஐந்தாம் வீட்டிற்க்கு வந்துள்ளார். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களை கண்காணியுங்கள். 

குழந்தைகள் படிப்பிலும் பிரச்சினை செய்வார்கள் அதே போல் நீங்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் காதல் செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக பிரச்சினையில் சிக்கி கொள்வீர்கள். பணப்பற்றாக்குறை ஏற்படும். உங்கள் ஊரில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் தலையிடாதீர்கள். தெளிவான முடிவு எடுக்கமுடியாமல் திணறுவீர்கள்.

நண்பர்களே கோச்சார பலன் என்பது ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் ஜாதகத்தை பொருத்து பலன்களை தரும் அதனால் நான் சொன்ன பலன்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள் அது உங்களை காப்பாற்றும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: