Followers

Tuesday, December 4, 2012

ராகு-கேது பெயர்ச்சி : சிம்மம்


வணக்கம் நண்பர்களே !
                           இப்பதிவில் சிம்மத்தை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்க்கலாம்.

ராகுவின் பலன்கள்

உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் இருந்த வந்த ராகுபகவான் தற்பொழுது மூன்றாம் வீட்டில் வநது இருக்கிறார். தைரியஸ்தானத்தில் ராகு பகவான் அமருவதால் எதிலும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி பெறலாம். அடிக்கடி பயணம் ஏற்பட்டு அதில் உங்களுக்கு நன்மை ஏற்படும் புதியதாக வீடு கட்டும் யோகம் வரும். இளைய சகோதர சகோதரிகள் வழியாக நன்மை ஏற்படும். கமிஷன் தொழில் லாபம் தரும். பழைய வீடுகளை விற்று புதிய வீடுகளை கட்ட வழி ஏற்படும். அயல்நாடுகளுக்கு செல்ல வழி ஏற்படும்.

கேதுவின் பலன்கள்

உங்களின் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமருந்திருந்த கேது பகவான் தற்பொழுது பெயர்ச்சியாகி ஒன்பதாவது வீட்டில் வந்து அமரந்திருக்கிறார். ஒன்பதாவது வீடு பாக்கியஸ்தானம் என்பதால்  ஞானகாரக கேது அமர்வதால் ஆன்மீக பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பல ஆன்மீகஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு உருவாகும்.தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவது மாதிரி தென்பட்டால் உடனே மருத்துவரை அனுகுவது நல்லது.

நண்பர்களே கோச்சார பலன் என்பது ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் ஜாதகத்தை பொருத்து பலன்களை தரும் அதனால் நான் சொன்ன பலன்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள் அது உங்களை காப்பாற்றும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: