Followers

Thursday, December 6, 2012

ராகு-கேது பெயர்ச்சி : மிதுனம்



வணக்கம் நண்பர்களே !
                                      இப்பதிவில் மிதுனத்தை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனங்களை பார்க்கலாம்.

ராகுவின் பலன்கள்

உங்களின் ராசிக்கு ஆறாவது வீட்டில் இருந்த ராகு பகவான் ஐந்தாம் வீட்டிற்க்கு வந்து இருக்கிறார். புத்தியை காட்டும் இடத்தில் ராகு அமருவதால் முடிவுகளை எடுக்கும் போது அவசரபடாமல் முடிவுகளை எடுங்கள். உங்களின் குழந்தைகள் வழியாக பிரச்சினைகள் வரும். சிலருக்கு திருமண யோகமும் வரும். பிள்ளைகளி்ன் திருமணத்தை முடித்து வைக்கும் வாய்ப்பு வரும். நீங்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்களின் துணைவர் இடத்தில் பிரச்சினைகள் உருவாகலாம். உங்களின் பிள்ளைகளின் கல்வி அல்லது குடும்பத்திற்க்காக செலவு செய்ய நேரிடும்.

கேதுவின் பலன்கள்

உங்களின் ராசிக்கு பனிரெண்டாவது வீட்டில் நின்றுக்கொண்டிருந்த கேது பகவான் தற்பொழுது பெயர்ச்சியாகி பதினோராவாது வீட்டில் வந்து இருக்கிறார். லாபஸ்தானத்தில் கேது பகவான் இருப்பதால் உங்களுக்கு லாபவரவுகள் உண்டு, தொழிலில் புதுமையை ஏற்படுத்த விரும்புவீர்கள். திருமணம் நடைபெறாமல் இருந்தால் திருமண ஏற்பாடு நடைபெறும். உங்களின் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.கேதுபகவானால் உங்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கபோகிறார்.

நண்பர்களே கோச்சார பலன் என்பது ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் ஜாதகத்தை பொருத்து பலன்களை தரும் அதனால் நான் சொன்ன பலன்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள் அது உங்களை காப்பாற்றும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: