Followers

Monday, December 3, 2012

ராகு-கேது பெயர்ச்சி : துலாம்


வணக்கம் நண்பர்களே!
                               இப்பதிவில் துலாத்தை ராசியாக கொண்டவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலனை பார்க்கலாம்

ராகுவின் பலன்கள்

உங்களின் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்த ராகு பகவான் தற்பொழுது உங்களின் ராசியிலேயே அமருகிறார். உடல்நிலையில் கவனம் தேவை. உடல்நிலை கடுமையான பிரச்சினைகளை உருவாக்கும் இருந்தாலும் கடைசியில் காப்பாற்றபடுவீர்கள் ஏற்கனவே உங்கள் ராசியில் சனி பகவான் இருக்கிறார். வீண்பகை தேடிவரும்.

மனைவியின் உடல்நிலையிலும் பிரச்சினையை கொடுக்கும் எதற்க்கும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரம் செய்து கொண்டிருந்தால் அதிக முதலீடுகளை செய்யாதீர்கள். வியாபாரத்தில் நடைபெறும் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனியுங்கள். யாருக்கும் எதற்க்காவும்  கையொழுத்து போடாதீர்கள். புதிதாக வரும் நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.


கேதுவின் பலன்கள்

உங்களின் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்த கேது பகவான் தற்பொழுது பெயர்ச்சியாகி ஏழாம் இடத்திற்க்கு வருகிறார். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லுவது நல்லது வீணான சண்டை வேண்டாம். கூட்டுதொழில் செய்பவர்களிடம் அனுசரித்து செல்லவேண்டும். அடுத்தவர்களுக்காக காவல் நிலையம் செல்ல வேண்டாம் 2013 ஆண்டில் இறுதியில் நல்லது நடக்கும் அதுவரை பொறுமையாக இருப்பது நல்லது.


நண்பர்களே கோச்சார பலன் என்பது ஒரளவுக்கு தான் நடைபெறும் உங்களின் ஜாதகத்தை பொருத்து பலன்களை தரும் அதனால் நான் சொன்ன பலன்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள் அது உங்களை காப்பாற்றும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: