Followers

Wednesday, January 2, 2013

பூர்வ புண்ணியம் 11



ணக்கம் ண்பர்களே !
                         பூர்வபுண்ணிய பாவத்திற்க்கு வழி சொல்லுங்கள் என்று பல நண்பர்கள் தொடர்ந்து போன் செய்து கேட்பதால் அதற்கான வழியை இப்பதிவில் சொல்லுகிறேன்.

என்னுடைய தம்பி ஒருவன் இருந்தான். தம்பி என்றால் பெரியப்பாவின் மகன். அவனுக்கு பூர்வபுண்ணியம் கெட்டுவிட்டது. அவன் நல்ல சம்பாதித்தான். பூர்வபுண்ணியம் கெடுபவர்கள் நல்ல சம்பாதிப்பார்கள். ஒரு சிலருக்கு இப்படி நடந்திருக்கிறது. பணத்தை வைத்து எவ்வளவு நாள்கள் தான் அனுபவி்ப்பது அடுத்து வாழ்க்கையில் என்ன என்ற கேள்வி எழுமே அப்படி தான் அவனுக்கு ஏற்பட்டது. 

ஆன்மீகத்தின் தாகம் அவனை விடவில்லை. எதில் கெடுமோ அங்கு தானே மனம் போகும். பூர்வபுண்ணியம் கெட்டஆட்கள் என்ன சொல்வார்கள் என்றால் அடுத்தவன் துணை எனக்கு வேண்டாம் நானே அனைத்தும் பார்த்துக்கொள்கிறேன் என்பான். இவன் கடைசியில் ஒன்றும் நடைபெறாமல் போனவுடன் என்னிடம் கேட்டான். 

அதன் பிறகு நான் அவனை அழைத்துக்கொண்டு பல கோவிலுக்கு செல்வேன். என்னுடைய நிழலில் அவன் பக்தியை வளர்ப்பதற்க்காக இந்த ஏற்பாடு செய்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பல முறை திருவண்ணாமலையில் கிரிவலம் செய்திருக்கிறோம். இப்பொழுது அவன் ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருக்கிறான். இது உண்மை நிகழ்வு. 

உங்களுக்கு பூர்வபுண்ணியம் கெட்டால் நல்ல ஆன்மீகத்தில் இருப்பவர்களின் துணையோடு கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். அப்பொழுது மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் பூர்வபுண்ணியத்தை சரிசெய்துக்கொள்ளலாம். வீண்வாதங்கள் பேசிக்கொண்டு இருந்தால் உங்களால் பூர்வபுண்ணிய பாதிப்பை சரிசெய்யமுடியாது.

உங்களுக்கு ஆன்மீகவாதியின் துணைக்கொண்டு நீங்கள் பூர்வபுண்ணியத்தை சரிசெய்துக்கொள்ள வேண்டும். ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றாலும் அடுத்தவர்களின் துணையோடு கோவிலுக்கு செல்லுங்கள் அப்பொழுது மட்டுமே கோவிலுக்கு போன புண்ணியம் சேரும். அப்படி இல்லாமல் தனியாக கோவிலுக்கு சென்றால் சாமியை பார்த்தவுடனே தூக்கம் வரும். அட போடா கடவுளாவது கோவிலாவது என்று மனது நினைக்கும். பல பேர்களின் வாழ்வில் நான் பார்த்த உண்மை நிகழ்வு இது.

பூர்வபுண்ணியத்தை சரிசெய்துக்கொள்ள இது தான் சரியான வழியாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். உங்களின் மனது நினைக்கும் அடுத்தவர்களை நம்பி நாம முன்னேறுவதா என்று கேள்வி கேட்கும். இல்லாதவன் இருப்பவனை வைத்து தான் முன்னேறமுடியும். கொடுத்தவன் ஒருபோதும் அதனை சொல்லிக்காட்டகூடாது இது எழுதபடாத நியதி.

இன்று காலையில் ஒரு பக்தி பாடலை கேட்டேன் இது உங்களுக்கு தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு அம்மன் கோவிலில் நின்று கொண்டு கர்ப்பகிரகத்தில் இருக்கும் அம்மனை பார்த்து இந்த பாடலை நினைத்து பாருங்கள் உங்களுக்கு ஒரு அழுகையுடன் ஒரு நிம்மதி பிறக்கும்.

ஆறுதலா யாரும் இல்லை 
ஆசை வைக்கும் எண்ணம் இல்லை 
ஆணவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை 

ஆறுதலா யாரும் இல்லை 
ஆசை வைக்கும் எண்ணம் இல்லை 
ஆணவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை 

சொந்த பந்தம் யாரும் இல்லை 
சூழும் ஜனம் நல்லதில்லை 
உன்னையின்றி இவ்வுலகில் வல்லதொரு தெய்வம் இல்லை
தடுமாறிதிருக்கோவில் வந்தேனம்மா

அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனைஆதரி
அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனைஆதரி

நீ வந்து தாயாக எனை தாங்கனும்
உன் மடிமீது தலைவைத்து நான் ஏங்கனும் 
சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்,

மனம் தூங்கனும்

மனம் தூங்கனும்

எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லமா 
என் தாய் நீ இருக்க உந்தன் செல்லமகன் வாடலாம. 

இந்த பாடலின் அர்த்தத்தை பாருங்கள் பூர்வபுண்ணியம் கெட்டவர்களுக்காகவே எழுதியது போல் இருக்கிறது அல்லவா. என்ன நண்பர்களே சொல்லிவிட்டு செல்லுங்கள்

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




2 comments:

Unknown said...

பாடல் நன்றாக உள்ளது...ச்சே இவ்ளோ நாலா பெரும்பாலம்..நான்..கோவிலுக்கு தனியாதான் போவேன்...இனிமே யார்னா கூட்டிட்டு போறேன்...நீங்க போகும் போதும் சொல்லுங்க .....

rajeshsubbu said...

கண்டிப்பாக செய்யலாம் நண்பரே நீங்கள் தான் என்னுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தீர்களே அதுவே மிகப்பெரிய செயல்