Followers

Monday, January 28, 2013

பூர்வ புண்ணியம் 19


வணக்கம் நண்பர்களே!

  பூர்வ புண்ணிய பகுதியில் ஒரு தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

சோதிடத்தை பார்த்தாலே இப்பிறவி முற்பிறவி மற்றும் மறுபிறவி பற்றி சொல்லுகிறது. பொதுவாக சோதிட சாஸ்திரம் உருவானது தனிமனிதன் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவதற்க்கு தான் ஆனால் இன்று அது பலவித விஷயங்களுக்கும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 

ஒருவரின் முற்பிறவியைப்பற்றி அறிவதற்க்கு லக்கினாதிபதியை வைத்து பார்ப்பார்கள். லக்கினாதிபதி அமர்ந்த இடம். லக்கினாதிபதியை பார்க்கும் கிரகம் லக்கினாதிபதியின் தன்மை ஆகியவற்றை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். 

பூர்வபுண்ணியம் என்ற ஐந்தாவது இடத்தை வைத்து அவன் முற்பிறவியில் என்ன செய்தான் யாருக்கு நல்லது செய்தான் யாருக்கு கெடுதல் செய்தான் என்பதைப்பற்றி அறியலாம். பூர்வபுண்ணியாதிபதி நிலையை வைத்து இவனின் வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப்பற்றி அறியலாம். 

பூர்வபுண்ணியாதிபதி கெடுதல் சாரம் பெற்றுவிட்டால் முன்ஜென்மத்தில் அடுத்தவனுக்கு பாவம் செய்திருக்கிறான் என்று அர்த்தம். பூர்வபுண்ணியம் கெட்டுவிட்டால் உங்களின் வாழ்க்கை நன்றாக அமையாது தினமும் போராட்டம் தான். சில பேர் வாழ்க்கையில் நன்றாக பணவசதி இருக்கும் ஆனால் அவனால் நிம்மதியாக ஒரு நாள் தூங்கமுடியாது. முன்ஜென்மத்தில் இவன் செய்த வினை இவனை இந்தஜென்மத்தில் படுத்தி எடுத்துவிடும். நிம்மதியற்ற வாழ்க்கை வாழவேண்டிவரும். வெளி உலகத்திற்க்கு நன்றாக வாழ்வது போல் தோன்றும் உள்ளுக்குள் அழுதுக்கொண்டு இருப்பான். 

முன்ஜென்மத்தில் எப்படி இருந்தான் என்பதை பார்க்க ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் பின்னோக்கி பத்து மாதம் சென்று பார்ப்பார்கள். அப்பொழுது இவனின் நிலையை தெரிந்துக்கொள்ளலாம். இதனைப்பற்றி வெளியில் யாரும் சொல்லுவதில்லை ஏன் என்றால் பயப்படுவார்கள் என்பதால் சொல்லுவதில்லை.

ஒருவர் முன்ஜென்மத்தில் இறக்கும்போது என்ன தசாவில் இறந்தாரோ அந்த தசாவில் மீதி இருக்கும் தசாவில் தான் இந்த ஜென்மத்தில் ஒருவர் பிறப்பார். அதேபோல் ஒருவர் வாழ்ந்துக்கொண்டு இருக்கும்போது அவரின் இறப்பிற்க்கு பிறகு எந்த உடலை எடுக்கவேண்டும் என்பதும் முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் மறுபிறவியில் எப்படி எங்கு பிறக்கவேண்டும் என்பது தீர்மானித்துதான் இந்த பிறப்பை நீங்கள எடுக்கிறீர்கள்.

உங்களுடன் முன்ஜென்மத்தில் ஒருவர் தொடர்பு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவருடன் இந்த ஜென்மத்தில் தொடர்பு உங்களுடன் இருக்கும். உங்கள் அப்பா அம்மா இந்த ஜென்மத்திலும் அதே உறவுடன் தான் பிறக்கிறார்கள். உங்களின் துணைவரும் அப்படி தான் இருப்பார். இருவருக்கும் அதிகபட்சமாக வயது வித்தியாசம் எட்டு வயது இருக்கும். ஒரு சில நேரங்களில் இந்த உறவுமுறை மாறலாம்.


இன்னும் நிறைய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

KJ said...

Sir.. Lagnathypathy position in rasi or amsam.

rajeshsubbu said...

//*KJ said...
Sir.. Lagnathypathy position in rasi or amsam. *//
வணக்கம் நண்பரே ராசியில் தான்.