Followers

Monday, January 28, 2013

பூர்வ புண்ணியம் 20


ணக்கம் ண்பர்களே !
                    பூர்வபுண்ணிய பகுதியில் தற்பொழுது சோதிடம் வழியாக பிரச்சினையை ஆராய்ந்து எழுதி வருகிறேன். அந்த பகுதியில் சில நண்பர்கள் சொன்னார்கள் சனிகிரகத்தோடு நிறுத்திவிடாமல் அனைத்து கிரகத்திற்க்கும் எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். கண்டிப்பாக அனைத்தையும் எழுதுகிறேன்.

பொதுவாக ஐந்தில் உள்ள சனியால் பாதிப்பு அதிகம் இருப்பதால் முதலில் அதனை எடுத்துக்கொண்டேன் பிறகு ஒவ்வொரு கிரகத்திறக்கும் எழுதுகிறேன். இதை படிப்பவர்களுக்கு ஐந்தில் சனி இருந்தால் உடனே பயந்துவிடாமல் அதற்கு தீர்வு என்ன என்று ஆராய்ந்து பாருங்கள்.

பூர்வபுண்ணியத்தை பற்றி எழுதும்போது முதலில் சனிப்பற்றி எழுதுவதால் ஒரு சிலர் என்னிடம் தொடர்புக்கொண்டு என்னைப்பற்றி எழுதியுள்ளீர்கள் என்று பேசினார்கள். யாரும் கோபம்கொள்ள தேவையில்லை. உங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு வழியை தான் ஜாதககதம்பம் வழி செய்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிலும் இல்லாத தனித்தன்மை சோதிடம் வழியாக நமது மனிதனுக்கு வழங்கியுள்ளார்கள் நமது முன்னோர்கள் அதனை நீங்கள் பார்த்து தெரிந்து அதற்குண்டான வழியை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த கர்மாவை தொலைப்பது மூலம் உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை நீங்கள் உணரலாம். அதற்கு சிறு முயற்சியாக தான் நான் பூர்வபுண்ணியத்தைப்பற்றி எழுதிவருகிறேன். இதனை நான் என்னுடைய சுயமுயற்சியால் இதனை எழுதுகிறேன். இன்னமும் நிறைய சிந்தித்து எழுதுகிறேன்.

மனிதனின் கர்மாவை தொலைக்காமால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு ஆன்மீக முயற்சியும் வெற்றி பெறாது என்பதை நீங்கள் முதலில் நினைத்துக்கொள்ளுங்கள். முதல் காரியமாக நாம் முதலில் முன்ஜென்மத்தில் என்ன தான் செய்திருக்கிறோம் அல்லது என்னவாக இருந்தோம் என்று சிறுமுயற்சியாவது நீங்கள் செய்வது முதல் கடமை .

அந்த சிறு முயற்சிக்கு நான் உதவுகிறேன். இதில் உனது பங்கு ஒரு சதவீதம் தான் கொடுக்கமுடியும். இந்து மதத்தின் ஆணிவேர் என்பதே பிறவிக்கர்மா தான். கர்மா இருக்கிறது என்பதைப்பற்றி இந்துமதம் எதை எடுத்தாலும் பேசும். இதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. 

கலியுகத்தில் நீங்கள் இதனை போல் பிளாக்கை படிப்பதே மிகப்பெரிய விஷயம். என்ன தான் நாம் பூர்வபுண்ணியத்தை எடுத்து பேசினாலும் அவனுக்கு பூர்வபுண்ணியத்தை காட்டினாலும் அவன் நடைமுறையில் இருக்கும் போகவாழ்க்கைக்கு தான் தள்ளப்படுவான்.

கலியுகத்தின் பிடியில் அப்படி தான் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இந்த கலியுக பிடியில் இருந்தாலும் நான் அதனைப்பற்றி கவலைக்கொள்ளாமல் நான் பிறவிக்கர்மாவை தீர்ப்பேன் என்று முடிவு எடுத்துக்கொண்டு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் உண்டு.

மனிதன் வந்து நோக்கத்தை விட்டுவிட்டு வேறு நோக்கத்தில் ஈடுபடும்போது பகவான் மறுபடியும் பிறந்து மனிதனுக்கு அறிவை புகட்ட அவதாரம் எடுப்பார் என்று பகவத்கீதை சொல்லுகிறது.

நண்பர்களே  நீங்கள் மட்டும் பூர்வபுண்ணியத்தை தெரிந்துக்கொண்டால் போதுமா உங்களின் குடும்பத்தினர் மற்றும் உங்களின் உறவினர்கள் உங்களின் நண்பர்களும் தெரிந்துக்கொள்ள ஒரு வழியை நீங்கள் ஏற்படுத்திக்கொடுங்கள்.

எப்படி ஏற்படுத்திக்கொடுப்பது?

இந்த பிளாக்கை பரிந்துரை செய்யுங்கள் அது போதும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



No comments: