Followers

Tuesday, January 1, 2013

ஆன்மீக அனுபவங்கள் 44



வணக்கம் நண்பர்களே !

என்னை நேரில் வந்து சந்திப்பவர்கள் என்னை பார்த்தவுடன் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்படுகிறது இது எதனால் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

என்னை வந்து சந்திப்பவர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்வி நீங்கள் சோதிடரா என்று கேட்பது தான் முதல் கேள்வியாக இருக்கிறது. இப்பொழுது ஆன்மீக அனுபவங்களை எழுத ஆரம்பித்தவுடன் இந்த சந்தேகம் அதிகமாக மாறிவிட்டது. ஏன் என்றால் ஆன்மீகவாதி என்றால் அவர்கள் முகத்தில் அமைதியாக இருக்கவேண்டும் தாடி வைத்துக்கொண்டு இருக்கவேண்டும் ருத்ராசம் தொங்கவேண்டும். காவி உடையில் இருக்கவேண்டும் என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டார்கள். 

நான் பல பதிவுகளில் சொல்லுவது ஆன்மீகம் என்பது உள்மாற்றம் வெளிமாற்றம் கிடையாது. வெளிமாற்றத்தில் இருப்பது என்பது வேஷம் கட்டுவது போல் தான் என்பதை முதலில் நினைவில் வையுங்கள். நான் பல சாமியார்களிடம் தொடர்பு வைத்திருப்பது உண்மை அதற்காக நான் சாமியார் கிடையாது. நான் உங்களைப்போல் ஒருவன் தான். என்னுடைய குருநாதரும் இப்படி தான் இருப்பார். நீங்கள் பார்ப்பது எல்லாம் வெளிவேஷத்தை மட்டுமே பார்க்கிறீர்கள் உள்வேஷத்தை பாருங்கள் அப்பொழுது மட்டுமே உங்களுக்கு தெரியவரும்.

நண்பர்கள் அனைவரும் என்னிடம் பேசும் போது கூட கேட்பார்கள் நீங்கள் போலி சாமியார் வரிசையில் வருபவரா என்று கேட்பார்கள் நான் சொல்லுவேன் நான் போலியாக இருந்துவிட்டு போகிறேன். நீங்கள் சொல்லும் கருவியை பார்க்கிறீர்கள் சொல்லும் கருத்தை மட்டும் பாருங்கள். அது உங்கள் மனதிற்க்கு பிடித்தால் போதும்.   நான் சொல்லும் கருத்து உங்களுக்கு பிடித்து அதை உள்வாங்கிக்கொண்டு நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்தால் போதும். என்னைப்பற்றி பார்க்க தேவையில்லை.

திருவான்மியூர் மருந்தீஷ்வரர் கோவிலில் நான் சிலபேர்களை பார்த்து இருக்கிறேன் இவர்கள் எல்லாம் உடம்பு மீது திருநீர் பூசிக்கொண்டு ருத்ராட்சம் அணிந்துக்கொண்டு செல்வார்கள் அவர்களை பார்த்தால் சின்ன குழந்தை அருகில் சென்றால் பயந்துவிடும். அந்தளவுக்கு சிவனின் அடியார்கள் போல் காட்டுவார்கள். இவர்கள் அங்கு இருந்துக்கொண்டு ஒரே சத்தம் போட்டு ஏதோ சிவனின் பாட்டை பாடிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் கோவிலுக்கு சென்றால் அமைதியாக சாமியை கும்பிடமுடியாது.  இப்படி பல சிவன் கோவிலில் காணமுடியும். எந்த கோவிலுக்கு சென்றாலும் அமைதியாக அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு சாமியை கும்பிடுங்கள்.

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் சிவனை கண்டுகிறதுக்கு ஆள் இல்லை. இப்பொழுது என்னடா என்றால் சிவனை தூங்கவிடுவதில்லை. அனைவரும் சிவனின் அடிமைபோல் மாறிவிட்டார்கள் ஏன் இந்த மாற்றம் என்ன செய்தார் சிவன் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

அடுத்த பதிவு மந்திர அனுபவங்களை பெறுபவர்களுக்காக எழுதியை பதிவை உங்களுக்கு தருகிறேன் அதில் சிவனை நீங்கள் தரிசிக்கலாம்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Raja said...

1, பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் சிவனை கண்டுகிறதுக்கு ஆள் இல்லைனு சொல்ரீங்களே உங்களுக்கு எப்படி தெரியும். ஏதேனும் ஆதாரம் இருந்தால் கொடுங்கள் பார்ப்போம்.

2, இப்பொழுது என்னடா என்றால் சிவனை தூங்கவிடுவதில்லை என்கிறீர்களே, சிவன் வந்து உங்களிடம் சொன்னாரா?

3, அனைவரும் சிவனின் அடிமைபோல் மாறிவிட்டார்கள் ஏன் இந்த மாற்றம் என்ன செய்தார் சிவன் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

எங்களுக்கு சொல்ல தெரியும் ஆனால் உங்களுக்கு புரியாது.

எல்லாம் சிவ மயம்
ஓம் சிவாய நம