Followers

Thursday, January 24, 2013

பூஜைக்குத் தேவையான பொருட்களை தட்டில் வைப்பது எப்படி?



வணக்கம் நண்பர்களே!

ஜனகல்யாண் செய்தி மடலில் படித்த செய்தியை அப்படியே தருகிறேன்.

பூஜை தொடங்கும் முன் அதற்குரிய பொருட்களை சரியான முறையில் வைப்பது அவசியம் ஆன்மீக விஞ்ஞானத்தின்படி பஞ்ச தத்துவங்களின் சமமான அடிப்படையில் பொருட்களை வைக்க வேண்டும் இவ்வாறு வைப்பதால் பிரபஞ்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்குமு் பஞ்ச பூதங்களோடு ஒரினப்படுத்த முடியும், இதனால் பூஜை செய்யும் ஜீவன் வழிபடும் தெய்வத்திடம் இருந்து வெளிப்படும் சகுண[திரி குண ரூபம் உள்ள] நிர்குண [ரூபம் அற்ற] தத்துவங்களை அதிகம் கிரகிக்க உதவுகிறது


பூஜை பொருட்களை எப்படி வைப்பது என்பது பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம்.

1.பூஜை தட்டில் மஞ்சள் குங்குமம் முதலியவை ஜீவனின் வலுது பக்கத்திலும் விபூதி செந்தூரம் முதலியவை இடது பக்கத்திலும் வைக்கப்படவேண்டும்.

2 வாசனைத் திரவியங்களும் வாசனைப் பொருட்களும் [சந்தனம் முதலியவை] புஷ்பம் அருகம்புல் மற்றும் இலைகள் தட்டின் முன் பகுதியில் வைக்க வேண்டும் வாசனைத் திரவியங்களிலும் அருகம்புல் மற்றும் இலைகளின் நிறத்திலும் உள்ள நுண்ணிய பகுதிகளில் தெய்வங்களின் சூட்சம அதிர்வலைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

3.பாக்கு வெற்றிலை மற்றும் தக்ஷணையாக கொடுக்க உள்ள பணம் தட்டின் கீழ் பகுதியில் வைக்கப்பட வேண்டும் ஏனென்றால் தெய்வங்களின் அதிவலைகளை செலுத்துவதற்னு இவை ஒரு சிறந்த கருவியாக அமைகின்றன.

4.நடுப்பகுதியில் அருள் நிறைந்த முனை முறியாத அரிசி[அட்சதை] வைக்கப்பட வேண்டும் இந்த முனை முறியாத அரிசி நடுவில் வைக்கப்படுவதால் உயர்நிலைத் தெய்வங்களான சிவன் துர்கை கிருஷ்ணர் இராமர் விநாயகர் ஆகிய ஐந்து தெய்வங்களின் தத்துவங்களும் ஈர்க்கப்படுகின்றன பின் தேவைக்கேற்ப மற்ற பொருட்களுக்கும் ஒரு வட்டச்சுழற்சி முறையில் அவை செலுத்தப்படுகின்றன.

இப்படி பூஜை பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கும் முறையினால் ஆத்மா பூமி தத்துவத்திலிருந்து ஆகாய தத்துவத்தை அடைந்து மாய உலகின் பிடியில் இருந்து விலகி பிரம்ம்தை அடைய உதவுகின்றது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: