Followers

Thursday, January 31, 2013

பூர்வபுண்ணிய சனிக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே !
                     சனிக்கிரகம் ஐந்தில் நின்றால் பூர்வபுண்ணியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைப்பற்றி பார்த்து வந்தோம் ஒரு சில பேர் அதற்கு ஏதாவது கோவில் ஸ்தலங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டதால் அவர்களுக்காக ஒரு பரிகாரம் போல் இதனை தருகிறேன்.

ராமர் போரில் பல போரை கொண்டதால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது அதனை போக்குவதற்க்கு அவர் லிங்கபிரதிஸ்டை செய்து வழிபட்டு அந்த தோஷத்தை போக்கினார் என்றும் படித்திருப்பீர்கள். அந்த கோவில் ராமேஸ்வரம். 

ஒவ்வொரு இந்துவும் கண்டிப்பாக போகவேண்டிய ஸ்தலங்களில் ராமேஸ்வரமும் உண்டு. சனி ஐந்தில் நிற்க்கும்போது உடலால் நமக்கு பாவம் ஏற்பட்டு இருக்கும். அந்த பாவத்தை போக்குவதற்க்கு இராமேஸ்வரம் தான் சிறந்த ஒரு வழிபாட்டு ஸ்தலமாக இருக்கும். இராமேஸ்வரம் சென்று விடியற்காலையில் ஸ்படிகலிங்க பூஜையில் கலந்துக்கொண்டு பிறகு கடலில் நீராடிவிட்டு ஒவ்வொரு தீர்த்தமாக நீராடிவிட்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். உங்களின் கர்மாவின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும். 

இராமேஸ்வரத்தில் தரிசனம் செய்யும்போது சுவாமியையும் அம்பாளையும் நன்றாக கண்ணை திறந்து பாருங்கள் நீங்கள் எந்தளவுக்கு அவர்களை பார்க்கிறீர்களோ அவ்வளவு உங்களுக்கு நல்லது.

நான் பொதுவாக எந்த கோவிலுக்கும் செல்லுங்கள் என்று யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை ஆனால் ராமேஸ்வரம் மட்டும் சென்று வாருங்கள் என்று நான் அனைவருக்கும் சொல்லுவேன். ராமேஸ்வரம் ஒரு நல்ல சக்திவாய்ந்த ஸ்தலம் என்பதால் அங்கு சென்றுவிட்டு வாருங்கள் என்று சொல்லுவேன். 

உங்களுக்கு சனி ஐந்தில் நின்றால் இராமேஸ்வரம் சென்றுவிட்டு என்னை வந்து பாருங்கள் உங்களின் பூர்வபுண்ணியபலனை அதிகரிக்க என்ன வழி என்று சொல்லுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



No comments: