Followers

Thursday, February 7, 2013

பூர்வ புண்ணியம் 27



வணக்கம் நண்பர்களே !
                    பூர்வ புண்ணிய சோதிட தொடரை படித்துவிட்டு பல நண்பர்கள் பாராட்டுகிறார்கள். அவர்கள் அவர்களின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியத்தை ஆராய்ந்து சரியாக எங்களுக்கு பொருந்துகிறது என்றும் சொல்லியுள்ளார்கள். அனைத்து நண்பர்களும் இதனை நீங்களே சரிபார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு பூர்வபுண்ணியத்தைப் பற்றி மேலும் விளக்கவேண்டும் என்பதால் பூர்வபுண்ணயத்தொடரில் பல செய்திகளை தந்துக்கொண்டுருக்கிறேன். 

நாம் ஏன் பூர்வபுண்ணியத்தை பார்க்கவேண்டும் என்று கேட்கலாம். அதற்கான விடை நீங்கள் இந்த வாழ்க்கையை நன்றாக வாழவேண்டும் அடுத்த ஜென்மத்திற்க்கு உங்களை தயார்படுத்த வேண்டும் என்றால்  பூர்வ புண்ணியத்தை சரிசெய்ய வேண்டும்.

மனிதன் பிறந்தான் வாழ்ந்தான் செத்தான் என்று பெயரோடு போய் சேரக்கூடாது. ஒரு சிலர் படித்தவுடன் நல்ல வேலை கிடைக்கும் கிடைத்தவுடன் ஒரு திருமணம் அவன் குடும்பம் அத்துடன் சரி பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் போய்சேர்ந்துவிடுவது இப்படி பல பேர் இருக்கிறார்கள். 

நாற்புறத்திலும் என்ன நடக்கிறது என்று கூட உற்று நோக்கி தெரிந்துக்கொள்வது கூட இல்லை. நாற்புறத்திலும் என்ன நடக்கிறது என்று தெரிந்தால் தான் நாம் விழிப்புணர்வை பெறலாம்.

வாழ்நாட்கள் முழுவதும் நாம் செய்தவை நம்மை மூழ்கடித்துவிடும். வாழ்க்கை முழுவதும் அது நம்மை அழித்துவிடும். வாழ்க்கையில் நஷ்டம் அடையும்போது  மரணநேரத்தில் நம்மைபப் பற்றிக்கொள்ளும் வேதனை என்ன என்ன தெரியுமா?

மனிதனின் கடைசி காலத்தில் நம்மை வாட்டும் வேதனை வாழ்க்கையை இப்படி வீணடித்துவிட்டோமே என்கிற வேதனை தான். அதனால் இந்த வாழ்க்கையை சரியாக பயன்படுத்தி அடுத்த ஜென்மமா அல்லது கடவுளா என்ற முடிவு எடுக்க வேண்டியது நமது கடமை.

வாழ்க்கையைப்பற்றி சிந்தனை செய்யவேண்டும். அப்படி சிந்தனை செய்தால் நீங்கள் விழிப்படைந்து விடுவீர்கள். நாம் என்ன செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். ஒரு சிலர் வாழ்க்கை இழுத்த இழுப்புக்கு சென்றுக்கொண்டே இருக்கும். ஆற்றில் வெள்ளம் வந்ததால் மரத்துண்டை வெள்ளம் அடித்துச்செல்வதுபோல் சென்றுக்கொண்டே இருக்கும். யார் இயக்குகிறார்கள் என்ற எண்ணமும் இருக்காது ஒன்றும் இருக்காது இப்படி சென்றால் வாழ்க்கையின் இறுதியில் மரணத்தின் வாசலில் நிற்கும்போது வாழ்க்கை போய்விட்டதே என்று எண்ணத்தான் தோன்றும்.

மனிதன் என்பவன் தானே சுயமாக நிற்கவேண்டும். தானே அனைத்திலும் முடிவு எடுக்கவேண்டும். இதில் பெண்கள் நாங்கள் பெண்கள் எங்களால் முடிவு எடுக்கமுடியாது என்று சொல்லிவிடுவார்கள்.அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. பெண்களால் உயர்ந்த நிலைக்கு போகமுடியாது என்று எதிலும் எழுதிவைத்துள்ளார்களா என்ன அனைவருக்கும் மரணம் என்பது வரும். மரணம் சொல்லிக்கொண்டு வராது. 

நீங்கள் பிறந்தவுடனே மரணத்தை நோக்கி முதல் அடியை வைக்கிறீர்கள் என்று தான் அர்த்தம். ஒவ்வொருவருக்கும் இந்த நாட்களில் தான் வித்தியாசம் வருமே தவிர மரணம் வராமல் இருக்காது. இந்த விசயத்தில் கடவுள் பாரபட்சம் காட்டுவதில்லை.

நான் சொல்லுவது உங்களின் பார்வையில் நான் ஒரு பைத்தியகாரன் போல் தோன்றலாம் ஆனால் மரணத்தின் முன்னால் ராஜேஷ் சொன்னது சரிதான் என்று உங்களுக்கு தோன்றும். பிறப்பின் போதும் இறப்பின் போதும் உங்களின் அனைத்து ஜென்மங்களும் உங்களுக்கு தெரியும்.

மரணம் வருவதற்க்குள் உங்களின் கர்மாவை தொலைக்க பாருங்கள். அதற்கான வழி என்ன என்று ஒரு சிந்தனை செய்தாலே போதும். வெற்றி நிச்சயம்.

பூர்வ புண்ணியத்தைப்பற்றி மேலும் தகவலுக்கு என்னை தொடர்புக்கொண்டு தெரிந்துக்கொள்ளுங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: