Followers

Friday, February 8, 2013

ஆன்மீக அனுபவங்கள் 64



வணக்கம் நண்பர்களே!
                     என்னிடம் பேசும்போது பல நண்பர்கள் சொல்லுவார்கள் நீங்கள் கர்மாவை குறைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். அதை குறைத்தால் தான் உங்களுக்கு நல்லது நடக்கும் என்றும் சொல்லியுள்ளீர்கள். இன்று ஆன்மீகம் நல்ல நிலைமையில் தானே உள்ளது ஏகாப்பட்ட கோவில்கள் வழிபாடுகள் என்று அனைத்து மக்களும் ஆன்மீக பக்கம் சென்றுவிட்டார்கள் என்று என்னிடம் விளக்கம் கேட்டார்கள்.

அனைத்து மக்களும் ஆன்மீகத்திற்க்கு சென்றுவிட்டார்கள் என்று சொல்லுவது தவறான ஒன்றாக தான் இருக்கும். ஆன்மீகபக்கம் சென்றாலும் அவர்கள் உண்மையான ஆன்மீகவாதியாக இருக்கிறார்களா என்று பார்த்தால் சந்தேகமே

இன்று பல கோவில்கள் புதுமையாக கட்டலாம். நிறைய கோவில் வந்திருக்கலாம். வழிபாடுகள் புதுமையாக முளைத்திருக்கலாம். கூட்டம் அதிகமாக கோவிலுக்கு செல்லலாம். மனிதன் அதிகமாக தவறு செய்ய ஆரம்பித்துவிட்டான். அந்த பயத்தால் கோவிலுக்கு செல்வான். பயம் தான் கோவிலுக்கு அவனை ஒரு அடி எடுத்து வைக்க தூண்டுகிறது. 

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இவ்வளவு கோவில்கள் இருந்ததா என்றால் சந்தேகமே எங்காவது ஒரு நாட்டில் ஒரு கோவில் இருந்திருக்கும். இவ்வளவு வழிபாட்டு கூடங்கள் இருந்தனவா என்றால் கண்டிப்பாக இருந்திருக்காது இன்று தெருவுக்கு பல வழிபாட்டு கூடங்கள் இருக்கின்றன. 

இன்று டிவியை திறந்தால் பல ஆன்மீகவாதிகள் ஆன்மீகத்தைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த காலத்தில் ஆன்மீகத்தை கற்பதற்க்கு ஒரு புத்தகம் கூட இருந்ததில்லை. இன்று மொபைல் போனில் கூட ஆன்மீகத்தைப்பற்றி படிப்பதற்க்கு வாய்ப்பு வந்துவிட்டது.

இவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தும் இன்று மக்களிடம் தெய்வசக்தி இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். நான் நமது மதத்தை மடடும் சொல்லவில்லை அனைத்திலும் இது தான் இன்றைய நிலைமை.

அந்த காலத்தில் இருந்த மக்களிடம் இருந்த தெய்வசக்தி இன்று மக்களிடம் இல்லை. ஆன்மீக உணர்வை பெறமுடியவில்லை. இன்று ஆன்மீகத்தை தேடிபோகிறான். எப்படி தேடிபோகிறான் என்றால் மனிதநேயத்தை தொலைத்துவிட்டு நடைபிணமாக உயிரற்ற தனமாக போகிறான் அப்படி போகும்போது எப்படி தெய்வசக்தி உங்கள் உள்ளத்தில் குடிக்கொள்ளும்.

தெய்வ சிலைகளுக்கு முன்னால் அவன் நின்று கடவுளை கும்பிட்டாலும் அவன் மனம் அங்கு இல்லை. பல பேரை இவன் கொன்றுவிட்டு தான் கோவிலுக்கு செல்லுகிறான், கொல்வது என்றால் என்ன? மனதால் கொன்றுவிடுகிறான். கடவுளிடம் போய் அதை கொடு இதை கொடு என்று கேட்டால் அந்த சிலை எதை கொடுக்கும். நீ இவ்வளவு திறமைசாலியாக இருந்தால் உன்னை படைத்த நான் எவ்வளவு திறமைசாலியாக இருப்பேன் என்று உன்னை கண்டுக்கொள்வே மாட்டார்.

இன்றைக்கு செய்யும் வழிபாடு மற்றும் பரிகாரம் யோகா தியானம் எல்லாம் உயிர் அற்ற தன்மையான வழிபாடாக தான் இருக்கின்றன. 

உங்களை சொல்லியும் குற்றமில்லை. கற்றுக்கொடுக்கும் ஆன்மீகவாதியும் குறையோடு தான் இருக்கிறார்கள். எப்பொழுது மனிதநேயத்தோடு வழிபாடு இருக்கிறதோ அன்று உங்களுக்கு தெய்வசக்தி கிடைக்கும். 

மனிதனை மனிதனாகவது நாம் பார்க்க வேண்டும். எந்த ஏற்றம் குறையோடு பார்க்காமல் அவனை மனிதாக பாருங்கள். உங்களின் அலுவலகத்தில் சுத்தம் செய்பவனையும் மனிதனாக பார்க்கவேண்டும். உங்களுக்கு சேவை செய்பவனையும் மனிதனாக பார்க்க வேண்டும். உங்களுக்கு சேவை செய்பவன் முன்ஜென்மத்தில் உங்களுக்கு தலைமை அலுவலராக கூட இருந்திருக்கலாம். இந்த ஜென்மத்தில் இந்த படைப்பில் இப்படி வந்திருக்கலாம். அடுத்த ஜென்மத்தில் நீங்கள் அவனுக்கு சேவை செய்பவனாக இருக்ககூடும்.

அனைவரையும் நீங்கள் உங்களின் உருவமாக பார்க்கும்போது உங்களை தேடி கடவுள் வருவார்.

இன்று ஆத்மாவை பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் சொல்லும் கருத்து ஒரே ஆத்மா பல உடல்கள் எடுக்கின்றன ஒரே நேரத்தில் எடுக்கின்றன என்று சொல்லுகிறார்கள். அப்படி பார்க்கும்போது உங்களின் ஆத்மா உங்களுக்கு சேவை செய்பவனின் ஆத்மாவும் ஒன்றாககூட இருக்கும். அவன் உங்களின் ஒரு பாதி என்பதை மனதில் நினைவில் வையுங்கள். 

ஒவ்வொரு வழியாக நீங்கள் கடைபிடிக்கும் போது உங்களின் தெய்வசக்தி உங்களை தேடி வரும்.நிறைய கருத்துகளை சொல்லவேண்டும் அப்பொழுது உங்களுக்கு எளிதில் புரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: