Followers

Saturday, February 9, 2013

ஆன்மீக அனுபவங்கள் 65



வணக்கம் நண்பர்களே !
                    பல நண்பர்கள் மனித உடலைப்பற்றி எழுதுங்கள் அது எவ்வாறு ஆன்மீகத்திற்க்கு பயன்படுகிறது என்று சொல்லுங்கள் என்று கேட்டுருந்தார்கள் அவர்களின் விருப்பத்தை போக்குவதற்க்காக இந்த பதிவு.

ஒருவர் என்னிடம் சொன்னார் எது நடந்தாலும் என் உடலுக்கு தான் நடைபெறும். ஆத்மாவிற்க்கு ஒன்றும் நடைபெறபோவதில்லை என்று சொன்னார். இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு ஆன்மீகத்திற்க்கு செல்லலாம் என்று நினைத்தால் நீங்கள் தான் முட்டாள். நீங்கள் ஆன்மீகத்திற்க்கு செல்வதாக இருந்தால் முதலில் நீங்கள் தயார்படுத்தவேண்டியது உங்களின் உடலை தான். உங்கள் உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறதோ அந்தளவுக்கு உங்களின் ஆன்மீகபயணம் வெற்றியடையும். சில பேர் காலம் கடந்து ஆன்மீகத்திற்க்கு போகலாம் என்று நினைப்பார்கள். காலம் கடந்து போவது உங்களின் ஆன்மீகம் வெற்றி பெறாது.

ஆன்மீக பயணத்தின் முதல் அடி உங்களின் உடல் தான். உடலை நன்றாக பயன்படுத்த தெரியவேண்டும். அது இஷ்டத்திற்க்கு விட்டுவிட கூடாது. அதற்காக அதனை வருத்தவேண்டியதில்லை. உடல் கெட்டதும் இல்லை நல்லதும் இல்லை. நாம் எவ்வாறு உபயோகப்படுத்துகிறோமோ அவ்வாறு அது மாறிவிடும். உடலை வைத்து கொலையும் செய்யலாம். நல்லதும் செய்யலாம். 

உலகத்தில் நடைபெற்ற கெடுதல் அனைத்தும் உடலால் தான் ஏற்பட்டது. நல்லதும் உடலால் தான் ஏற்பட்டது. நீங்கள் நல்லது செய்யும்போது ஒரு சில நாட்களிலேயே இந்த உடல் இவ்வளவு அற்புதமானதா என்று கேட்கதோன்றும். இந்த உடல் ஆத்மா வசிக்கிற ஆலயம்போல் உணர்வீர்கள்.

உடல் ஆன்மீகபயணத்திற்க்கு ஏன் தயார் செய்யவேண்டும் என்றால் நமது உடல் பலதடைகளை உள்ளே சேமித்து வைத்திருக்கிறது. அந்த தடைகளை எடுத்துவிட்டால் அது அருமையாக உங்களுக்கு உதவும்.

நாம் சிறுவயதில் இருந்து அடக்கப்பட்டு வளர்ந்து வருகிறோம். நாம் எதை செய்தாலும் அதை செய்யாதே இதை செய்யாதே என்று சொல்லிவருவதால் நாம் சக்தியை உள்ளுக்குள்ளேயே தேக்கி வைத்து அது விஷமாக மாறிவிட்டது. அந்த விஷத்தை வெளியில் எடுத்துவிட்டால் ஆன்மீக பயணம் இனிதாக நடைபெறஆரம்பிக்கும்.

மனது வேறு உடல் வேறு என்று பலபேர் கருத்துக்கொண்டுள்ளார்கள். உங்களின் மனதில் ஒரு நடுக்கம் ஏற்பட்டால் அது உங்களின் உடலில் காட்டிக்கொடுத்துவிடும். உங்கள் உடலும் சேர்ந்து நடுங்கி ஆடும். உங்களின் உடலில் ஒரு செயல் நடைபெற்றால் அது உங்களின் மனதிலும் ஏற்பட்டுவிடும். 

உங்கள் உடல் எப்பவோ ஒரு தீயை தொட்டு இருக்கும் அது உங்களின் மனதில் அப்பொழுதே பட்டுவிடும். உடனே எங்கு தீ இருந்தாலும் அது எச்சரிக்கை செய்தியை உங்களின் உடலுக்கு அனுப்பும். உடலும் மனமும் சேர்ந்த ஒரு கலவை. அதனை தனியாக பிரிப்பது என்பது கடினம். உடலில் சக்தி மட்டும் இருக்கும் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் எனபதை பொருத்து அது உங்களுக்கு உதவும்.

நீங்கள் செய்யும் அனைத்து செயலும் நீங்கள் கவனிக்காமல் இருந்தால் கூட உங்களின் மனதில் போய் படிகிறது. நல்லது படியும்போது உங்களுக்கு நல்லது நடைபெறும். கெட்டது நடைபெறும்போது உங்களின் மனம் மற்றும் உடல் கெடும் என்பதை முதலி்ல் நினைவில் வையுங்கள்.

உடலால் நீங்கள் செய்யும் அனைத்தும் மனதில் படியும். ஆன்மீகவாழ்விற்க்கு உடலை தயார்படுத்தவேண்டியது உங்களின் பொறுப்பு. நான் பல பதிவுகள் சொல்லியுள்ளேன் நீங்கள் எவ்வளவு தவறு செய்தாலும் ஆன்மீக வாழ்விற்க்கு வரலாம் என்று சொல்லியுள்ளேன். ஆன்மீகத்திற்க்கு வந்தபிறகும் அதனை தொடர்ந்து செய்வது என்பது உங்களுக்கு ஆன்மீகத்தில் உள்ளே நுழையமுடியவில்லை என்று தான் அர்த்தம்.

நமது உடலும் மனம் இணைந்த ஒன்று தான். தனித்தனி கிடையாது. உடலின் அதிசூட்சுமமான பகுதி மனம். மனதின் அதிஸ்தூலமான பகுதி உடல்.நான் எதை வேண்டுமானலும் செய்துக்கொண்டு ஆன்மீகத்தில் இருப்பேன் என்று சொன்னால் உங்களை நீங்களே ஏமாற்றுகிறீர்கள் என்று அர்த்தம்.

அதற்கு ஆன்மீகத்தில் செல்லாமல் சும்மா இருப்பது நல்லது. ஆற்றில் ஒரு கால். சேற்றில் ஒரு கால் என்று எப்பொழுதும் வைக்காதீர்கள். இப்படி வைத்தால் ஆன்மீக வழியில் ஒரு வில்லங்கதனத்தை செய்துக்கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம். இன்றைய தேதியில் நல்லவனை விட கெட்டவன் தான் அதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபடுகிறான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: