Followers

Thursday, February 21, 2013

ஆன்மீக அனுபவங்கள் 71


வணக்கம் நண்பர்களே!
                     ஆன்மீக அனுபவங்கள் மற்றும் பூர்வபுண்ணியத்தை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு நான் சாமியார் என்று நினைத்துவிட்டார்கள். நான் உங்களைப்போல் ஒருவன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

என்னுள் நடப்பதை அப்படியே எழுதுகிறேன். உங்களைப்போல் நான் ஒரு சராசரி மனிதன். நான் எழுதுவதை படித்துவிட்டு உங்களுக்குள் தேடுங்கள் கண்டிப்பாக அனைத்திற்க்கும் விடை கிடைக்கும். நான் சோதிடம் மட்டும் எழுதிக்கொண்டு இருக்கலாம் அப்படி நான் எழுதினால் ஆயிரத்தோடு இதும் ஒன்று என்று நீங்கள் படித்துவிட்டு சென்றுவிடுவீர்கள் என்பதால் கொஞ்சம் மாறுதலாக ஆன்மீகத்தை கலந்து தருகிறேன். நான் எழுதும் ஆன்மீகம் உங்களின் ஆத்மாவிற்க்கு மறுமலர்ச்சி அளிக்கும். நீங்கள் படிப்பது போல் தோன்றும் ஆனால் படிப்பது உங்களின் ஆத்மா என்பதை போக போக உணர்வீர்கள். உங்களின் ஆத்மாவை திருப்திபடுத்துவதற்க்காக தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்

பல நண்பர்கள் நான் வீட்டை விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லுகிறார்கள் அப்படி எல்லாம் யாரும் வரவேண்டாம் ஏன் என்றால் அந்த பாவத்தை நான் ஏன் சுமக்கவேண்டும். உங்களின் குடும்பத்தோடு நீங்கள் சந்தோஷமாக இருங்கள். எதையும் விட்டுவிட்டு ஒடவேண்டாம். எதை விட்டு நீங்கள் ஒடுகிறீர்களோ அப்பொழுதே சம்பந்தப்பட்ட நபரின் பாவம் உங்களை துரத்தும்.

பூர்வபுண்ணியத்தை படித்துவிட்டு பல நண்பர்கள் நாங்கள் எங்குபோய் அந்த நபரை தேடுவது. இது எல்லாம் நடக்ககூடிய விசயமா? எங்களுக்கு எங்கள் குடும்பம் தான் முக்கியம். எங்கள் குடும்பத்தின் நபரை கவனிக்கவே எங்களுக்கு நேரம் இல்லை இது சாத்தியப்படாது என்றும் பல நண்பர்கள் சொல்லுகிறார்கள்.

உங்களின் குடும்பத்தினரை கவனிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை நன்றாக கவனியுங்கள். உங்கள் ஆத்மாவிற்க்கு தேடுதல் இருக்கின்றதா என்று கவனியுங்கள் உண்மையான தேடுதல் இருந்தால் அந்த தேடுதலுக்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் குடும்பத்தில் இருந்தே தேடுதலை தொடங்கவேண்டியது உங்களின் கடமை. குடும்பத்தில் இருந்து தேடும்போது இடையில் குறிக்கீடு அதிகமாக இருக்கும். அனைத்தையும் சமாளித்துக்கொண்டு தான் முன்னேற்றம் அடையவேண்டும். 

உங்கள் மனைவியாக இருந்தாலும் அவர்களை அடக்ககூடாது. ஒரு எல்லை தாண்டி அவர்களின் சொந்த விசயத்தில் தலையிடகூடாது. அவர்களும் மனிதர்கள் அவர்களுக்கும் தேடுதல் இருக்கும் என்று நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இப்படி நான் சொல்லுவதால் என்னை தவறாக நினைக்கலாம். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களும் அடிமை வாழ்க்கையை தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் அடிமை படுத்துவது. இந்தியாவில் பாசத்தை வைத்து அதிக அடிமைகளை உருவாக்குகிறார்கள். 

இந்தியாவில் இருக்கும் பாசஅடிமைகளை மீட்பது முடியாத காரியம் அதனால் நீங்கள் குடும்பத்தில் இருந்து கொண்டே ஆன்மீக தேடுதலை நடத்தவேண்டியது தான் வேறு ஒன்றும் செய்யமுடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனையறியாமலே ஆத்மா தேடுதல் இருக்கும். அதில் தலையிட எந்த மனிதனுக்கும் உரிமையில்லை.

உங்களோடு சம்பந்தப்பட்ட நபரை உங்களுக்குள்ளே தேடிபாருங்கள் கண்டிப்பாக அதற்கான விடை கிடைக்கும். நான் அந்த நபரை தேடாமல் இப்படி தான் இருப்பேன் என்றால கர்மாவின் பாவத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது உங்களின் தலைவிதி.  குடும்பத்தோடு நான் ஆன்மீகத்தை தேடுகிறேன் என்றால் அது ஏமாற்றுவேலை கூட்டமாக வேலை செய்யலாம் ஆன்மீகததை தேடுதல் செய்யமுடியாது. கூட்டுபிராத்தனை எல்லாம் ஏமாற்றுவேலை. கூட்டத்தில் கோவிந்தா போடலாம். நீங்கள் தனியாக தேடுங்கள் அனைத்தும் கிடைக்கும்

நான் சொல்லுவது போல் ஆன்மீகவாதிகள் சொன்னால் அவர்களுக்கு கூட்டம் கூடாது அவர்களின் பிழைப்பு கேள்விகுறியாக மாறிவிடும் அதனால் இந்த பார்ட்டை எல்லாம் கழட்டிவிட்டு விட்டு உங்களை அடிமை படுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள். பல தியான கூடத்திற்க்கு நீங்கள செல்லலாம் அந்த தியான கூடத்தில் கர்மாவை பற்றி புரிந்துக்கொள்ள அதாவது முன்ஜென்மத்தை பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் எப்பொழுது என்றால் சரியாக இரண்டு வருடங்கள் நீங்கள் அந்த பயிற்சியை செய்ய வேண்டும் அதன் பிறகு சொல்லிதருவார்கள். இதனை இப்பொழுது இருக்கும் தியான கூடங்கள் தவிர்க்கிறார்கள். ஏன் என்றால் சம்பந்தப்பட்ட நபரை இவன் தேடிச்சென்றுவிடுவான் அப்புறம் நாம் யாருக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருப்பது என்று அதனை எல்லாம் மறைத்துவிடுவார்கள்.

இப்பொழுது இருக்கும் ஆன்மீகவாதிகள் மனிதர்களை அடிமைபோல் தான் மாற்ற நினைக்கிறார்கள். இது ஆரோக்கியமான விசயம் கிடையாது. அனைவரையும் திசை திருப்பிக்கிறார்கள். 

எனக்கு கூட்டம் தேவையில்லை அதனால் நான் உண்மையை சொல்லுகிறேன். ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை நான் அடிமாடாக தான் இருப்பேன் என்றால் இருந்துக்கொள்ளுங்கள். ஜாதக கதம்பத்தின் ஆன்மீகம் சுதந்திர மனிதனை உருவாக்குவதில் அக்கறை காட்டுகிறது. தனிமனிதனின் சுதந்திரத்தில் என்று ஆன்மீகம் தலையிடுகிறதோ அன்று ஆன்மீகம் மேல்நோக்கி செல்லாமல் கீழ்நோக்கி செல்லும். ஆன்மீகம் என்பது சுதந்திரம். சுதந்திரம் என்பது ஆன்மீகம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

3 comments:

தனி காட்டு ராஜா said...

///இந்தியாவில் பாசத்தை வைத்து அதிக அடிமைகளை உருவாக்குகிறார்கள்.


இந்தியாவில் இருக்கும் பாசஅடிமைகளை மீட்பது முடியாத காரியம் ////


:)

rajeshsubbu said...

//* கிருஷ்ணா said...
///இந்தியாவில் பாசத்தை வைத்து அதிக அடிமைகளை உருவாக்குகிறார்கள்.


இந்தியாவில் இருக்கும் பாசஅடிமைகளை மீட்பது முடியாத காரியம் ////


:) *//
வருக வணக்கம்

KJ said...

Hello Krishna...this is for your previous post question.... "Kolai pana kadavul nenape varathu"... Apdi ellam solla mudiyathu...... Rajapakshe thirupathi pogalaya....