Followers

Friday, February 1, 2013

பூர்வபுண்ணியம் ராகு



வணக்கம் நண்பர்களே!
                     பூர்வ புண்ணியத்தில் இப்பதிவில் இருந்து ராகுவினால் ஏற்பட்ட முன்ஜென்ம பிரச்சினை என்ன என்று வரும் பதிவுகளில் நாம் பார்க்கலாம்.

சனியை போல ராகுவும் அதிகமான பிரச்சினையை ஏற்படுத்துவார் இன்னும் சொல்லபோனால் சனியை விட அதிகமான பிரச்சினை தான் இவர் ஏற்படுத்துவார். இதனை நாம் பல ஜாதகங்களில் இருந்தே தெரிந்து இருக்கும். நமக்கு குழந்தை பாக்கியம் என்பது முன்ஜென்மத்தில் செய்த கர்மாவில் நல்லது செய்திருந்தால் தான் நமக்கு குழந்தை பாக்கியம் இருக்கும்.

பூர்வபுண்ணியம் அடிவாங்கியது என்றால் குழந்தை பாக்கியம் நமக்கு கிடைக்காது. இந்த காலத்தில் ஒருவன் திருமணம் செய்யாமல் இருந்தால் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். திருமணம் முடிவடைந்தால் குழந்தை இல்லையா என்று கேட்டுக்கொண்டே அவர்களை நிம்மதியை இழக்கவைத்துவிடுவார்கள் நம் மக்கள். குழந்தை பாக்கியம் என்பது நமக்கு கிடைப்பது நாம் வாங்கி வந்த வரம் என்பார்கள். நீங்கள் என்ன தான் செய்தாலும் முன்ஜென்மத்தில் நல்லது செய்திருந்தால் மட்டுமே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பூர்வபுண்ணியத்தில் ஒருவருக்கு கெடுதல் கிரகம் அமரும் போது அவர்களுக்கு குழந்தைபாக்கியம் தாமதப்படும் அப்படி இல்லை என்றால் குழந்தை பாக்கியம் இருக்காது. பூர்வபுண்ணியம் கெடுதல் அடைந்தும் ஒரு சிலருக்கு குழந்தைபாக்கியம் இருக்கும் அப்படி குழந்தை பாக்கியம் இருந்தால் அந்த குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்காது. அவர்களுக்கு ஆயுள் மிககுறைந்த நாட்கள் தான் இருக்கும். நீங்களே பார்த்து இருக்கலாம் ஒரு சிலர் தன் குழந்தைகளை அவர்கள் காலத்திலேயே இழந்துவிடுவார்கள்.

அவர்களுக்கு எல்லாம் பூர்வபுண்ணிய வீட்டில் கெடுதல் கிரகங்கள் இருப்பதால் தான் அப்படி நடைபெறுகிறது. பூர்வபுண்ணிய வீட்டில் ஒருவருக்கு கெடுதல் கிரகங்கள் அமர்ந்து அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு அவர்களே கொள்ளிபோடவேண்டிய நிலை ஏற்படும். உங்களுக்கு பூர்வபுண்ணியம் கெடுதல் அடைந்து குழந்தை பாக்கியம் இருந்தால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தான் சாவுவதற்க்கு முன்னே தன் குழந்தைகள் இறப்பது மிகப்பெரிய கொடுமை. நான் இதனை வெட்டவெளிச்சமாக சொன்னதற்க்கு காரணம் உங்களுக்கு இப்படிபட்ட கிரகநிலைகள் இருந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பொதுவாக பூர்வபுண்ணியம் கெட்டவர்களை ஆன்மீகவழியில் இழுப்பது மிககடினமான ஒன்று தான். இவர்கள் ஆன்மீகவாதிகளை கடுமையாக பகைத்துக்கொள்வார்கள். இவர்கள் ஆன்மீகவாதிபோல் காட்டிக்கொள்வார்கள் ஆனால் ஆன்மீகவாதிகள் கிடையாது.

நான் சொல்லுவதை நீங்களே சோதனை செய்து பாருங்கள் உங்களுக்கு தெரியும். ஒரு பூர்வபுண்ணியம் கெட்ட நபர்களை நீங்கள் ஆன்மீகவாதிகளாக கொண்டுவந்துவிட்டால் நீங்கள் இமயமலையை ஏறிகடந்துவிட்டது போல் உணர்வீர்கள்.அவ்வளவு கடினமான ஒன்று.

பொதுவாக ராகு என்ற கிரகம் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பிரச்சினை காட்டுவதில் அனைத்து கிரகத்திலும் முன் நிற்பவர் கடுமையான பித்ரு தோஷத்தை ஏற்படுத்துவதில் இவருக்கு நிகர் இவர் தான். 

வரும்பதிவுகளில் ராகுவினால் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பிரச்சினை என்ன என்று பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: