Followers

Sunday, February 17, 2013

மகரம் : ஐந்தில் செவ்வாய்


வணக்கம் நண்பர்களே !
                     மகர ராசிக்கு ஐந்தில் செவ்வாய் நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

மகர ராசிக்கு ஐந்தாவது வீடு ரிஷபம். செவ்வாய்க்கு இந்த வீடு சமம்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

செவ்வாய் சகோதரனுக்கு காரகன் வகிக்கிறார். இவருடைய சகோதரிக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பார் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திருப்பார்.

மேலும் விளக்கம்

செவ்வாய்க்கு 7 ஆம் பார்வை நிரந்தரமாக இருந்தாலும். 4, 8 ஆம் பார்வை இருக்கிறதே மிக விசேஷ பார்வை. இவர் கண் வைக்கும் இடம் காலி அந்தளவுக்கு ருத்ர பார்வையை பார்ப்பார்.

5 ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பார்வையிலேயே நம்மை கொன்றுவிடும். முன்ஜென்மத்தின் வினையை கொடுப்பதில் சனி ராகுக்கு இணையானவர். சொல்லபோனால் அவர்களை விட இவர் அதிகமாகவே கொடுத்துவிடுவார். நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவம் கடவுள் ஐந்தாம் வீட்டில் நெருப்பை தூக்கி போட்டுவிடுவார். ஐந்தில் நெருப்பை தூக்கி போட்டால் அதன் தாக்கம் 8 ஆம் வீடடிற்க்கும் 12 ஆம் வீட்டிற்க்கும் கிடைத்துவிடும்.

8 ஆம் வீடு என்பது மரணத்தை காட்டக்கூடிய வீடு என்பதால் அதுவும் பிரச்சினை தான். இந்த ஜென்மத்தில் மரணம் மிக கொடியதாக அமையும் என்பதில் தெளிவாக சொல்லலாம். விபத்து மரணம் கூட ஏற்படும்.

அடையாளம்?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெள்ளை கலரில் இருந்திருக்கலாம். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். தெலுங்கு மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தெற்கு திசையில் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

சுக்கிரன் வீட்டில் செவ்வாய் அமர்வதால் இவரின் துணைவர் சண்டைபோட்டு அவருக்காக இவர் இவர்களை பலிவாங்கியிருப்பார்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொல்லபட்டுருப்பார்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

முகத்தில் அல்லது வயிற்றில் தாக்கி அதன் மூலம் நோய் ஏற்பட்டு இறந்திருப்பார்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

கை மற்றும் தோல் பகுதியில் தாக்கி இறந்திருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

ரிஷப ராசியில் கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்களில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் 1, 2 ம் பாதங்களில் செவ்வாய் பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை அன்று முருகபெருமானை வழிபட்டு வாருங்கள். சரியான நபரை அடையாளம் காணலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: