Followers

Saturday, February 9, 2013

பாலாரிஷ்ட தோஷம்



வணக்கம் நண்பர்களே!
                    பாலாரிஷ்ட தோஷத்தைப்பற்றி ஒரு நண்பர் என்னிடம் இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் வழியாக உங்களுக்கும் ஒரு தகவலை சொல்லலாம் என்று இந்த பதிவு.

பாலாரிஷ்ட தோஷம் ஒரு குழந்தைக்கு பத்து வயது வரை சொல்லுவார்கள். ஒரு சிலர் மூன்று வயது வரை சொல்லுவார்கள். அதற்கான கிரகநிலைகளும் ஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் மாறும். இதனை அந்த குழந்தைகளின் ஜாதகத்தைப் பார்ப்பதை விட உங்களின் ஜாதகத்தை பாருங்கள். உங்களின் பூர்வபுண்ணியம் அதிகம் கெடும்போது உங்களின் குழந்தைகளின் ஆயுள்காலம் கேள்விகுறியாக மாறிவிடும்.

பூர்வபுண்ணியம் கடுமையாக பாதிக்கும்போது குழந்தை பாக்கியம் இருக்காது. அப்படியே ஏதோ ஒரு விதத்தில் குழந்தை இருந்தால் அந்த குழந்தையின் ஆயுள்பாலம் பாதிக்கப்பட செய்யும். நாமே பல இடங்களில் பார்த்து இருக்கலாம். வரம் வாங்கி தவம் வாங்கி பெற்றபிள்ளை இப்படி பாதியிலேயே போய்விட்டதே சொல்லுவார்கள் அதாவது அந்த குழந்தை இறந்துவிட்டது என்று சொல்லுவார்கள். 

அதிகபட்சமாக பூர்வபுண்ணியம் கெடும்போது உங்களுக்கு தத்துபிள்ளை யோகம் வந்துவிடும். ஏதாவது ஒரு குழந்தையை நீங்கள் தத்து எடுத்துக்கொள்வது நலம். பலபேர்களுக்கு நான் இதனை பரிந்துரைத்திருக்கிறேன்.

இதற்கு பரிகாரமாக நான் சொல்லுவது வருடத்திற்க்கு ஒருமுறை இராமேஷ்வரம் சென்று காலையில் நடைபெறும் ஸ்படிகலிங்க பூஜையில் கலந்துக்கொண்டு பிறகு கடலில் தீர்த்தம் ஆடிவிட்டு பிறகு கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்களில் நீராடிவிட்டு சுவாமியையும் அம்மனையும் தரிசித்துவிட்டு வாருங்கள்.

வருடத்திற்க்கு ஒருமுறை கண்டிப்பாக செல்லவேண்டும். இப்படி சென்றுவிட்டு வந்தால் உங்களின் குழந்தைகளின் ஆயுள் மற்றும் எதிர்காலம் நன்றாக இருக்கும்.


பூர்வபுண்ணியம் இருக்கிறதே அது ஒரு மிகப்பெரிய வில்லங்கம் பிடிச்ச ஒரு மேட்டர் ஏன் என்றால் நாம் முன்ஜென்மத்தில் அந்தளவுக்கு வில்லங்கத்தை செய்துள்ளோம் என்று அர்த்தம். சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் தேடுவது மிகப்பெரிய பரிகாரமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  பூர்வபுண்ணியத்தைப்பற்றி பல பதிவுகள் எழுதஉள்ளேன் படித்து பாருங்கள் அதன் முக்கியம் என்ன என்று உங்களுக்கு தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


2 comments:

KJ said...

Sir, if same planet becomes owner for both kendra and trikona house, wat would be the effect. Is it like any yogam?

rajeshsubbu said...

//* KJ said...
Sir, if same planet becomes owner for both kendra and trikona house, wat would be the effect. Is it like any yogam? *//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எழுதுகிறேன் சார் பொறுமையா இருங்கள்.