Followers

Monday, March 11, 2013

பங்குசந்தை சோதிடம் 2



வணக்கம் நண்பர்களே!
                     நேற்று பங்குசந்தை சோதிடத்தைப்பற்றி ஒரு பதிவு வெளியிட்டேன். அதற்கு ஏகாப்பட்ட வரவேற்று இருக்கிறது. உலகத்தில் மனிதனுக்கு பணத்தின் மீது எவ்வளவு காதல் என்ன செய்வது உலகம் அதனை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும்போது நான் பணம் வேண்டாம் என்று சொன்னால் என்னை பைத்தியகாரனாகதான் பார்ப்பார்கள்.

இன்று ஆன்மீகவாதிகளிடம் தான் அதிக பணம் உள்ளது. அதற்க்கு காரணம் நமது மதத்தின் உள்ள அனைத்து வழிகளையும் அவர்கள் பின்பற்றுகிறார்கள். நாம் அதனை பின்பற்றுவதில்லை. நீங்கள் நினைக்கலாம் மக்கள் கொண்டுபோய் கொட்டுகிறார்கள் அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கேட்கலாம். மக்களை பணத்தை கொட்டும்படி செய்கிறார்கள். உள்ளுக்குள் பல வேலை நடக்கிறது. 

நீங்கள் சோதிடத்தை நன்றாக படித்தவர்கள் தான் ஏன் என்றால் எனக்கு முன்பே எத்தனையோ பேர் சோதி்டத்தைப்பற்றி எழுதிவருகிறார்கள் அவர்களின் பிளாக்கை படித்துவிட்டு தான் இங்கு வருகிறீர்கள். உங்களுக்கு ஒரு தனிமனிதனின் ஜாதகத்தை கணிக்க எளிதாக தெரியும்.

ஒரு மனிதனுக்கு நீங்கள் ஜாதகம் கணிக்கும்போது எதிர்காலத்தில் இப்படி நடக்கபோகிறது என்று சொல்லுவீர்கள் அல்லவா அதனை அப்படியே பங்குவர்த்தகத்தில் பயன்படுத்தி பாருங்கள். தனிமனிதனுக்கு எதிர்காலத்தில் இத்தனை நாளில் இது நடக்கும் என்று சொல்வீர்கள் அல்லவா அதனை அப்படியே இத்தனை நிமிடத்தில் இது நடக்கும் என்று சொல்லிபாருங்கள் அப்பொழுது எளிதில் உங்களுக்கு பங்குவர்த்தகத்தை கணிக்கமுடியும்.

நீங்கள் அனைவரும் சோதிடத்தை புத்தகத்தில் படிப்பது பிளாக்கில் படிப்பது அதனை அப்படியே மனதில் பதியவைத்து ஜாதகத்தை எடுத்தவுடன் உங்களின் மனதில் இருக்கும் ரெக்கார்டை அப்படியே எடுத்துவிடுவது இப்படி சோதிடத்தை சொன்னால் நீங்கள் ஒரு ஜாதகத்திற்க்கும் சரியான பலனை உங்களால் சொல்லமுடியாது. ஐம்பது சதவீதம் கணக்கு ஐம்பது சதவீதம் சூச்சகமான விசயம் ஜாதகத்தில் இருக்கிறது. 

ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் பல விசயங்கள் அவனுக்குள்ளே அவனுக்கு வெளியே நடைபெறும். இந்த விசயங்கள் ஏன் நடைபெறுகிறது? எதனால் நடந்தது? நடத்திய கிரகம் எது? என்று பார்க்க வேண்டும். அப்படி நீங்கள் பார்க்க கற்றுக்கொண்டால் பங்குசந்தை சோதிடம் எளிதில் கணிக்கலாம். வேறு மனிதனை நீங்கள் பார்க்க வேண்டியதில்லை ஏன் என்றால் அவனுக்குள்ளே நடந்தது என்ன என்று நம்மால் கண்டுக்கொள்ளமுடியாது. 

உங்களின் ஜாதகத்தையே எடுத்துக்கொண்டு உங்களுக்குள் நடந்தது என்ன உங்களுக்கு வெளியே நடந்தது என்ன என்று பாருங்கள்.உங்களுக்குள் நடந்ததை கண்டுபிடித்தாலே அப்பொழுது எளிதில் உங்களால் பங்குசந்தையை கணிக்கமுடியும்.

இப்படி என்னபா சுற்றிவிடுகிறாய் என்று உங்களின் மனதில் நினைக்கிறீர்களா? நான் புள்ளியை வைத்துவிட்டேன் நீங்கள் கோடு போட்டுக்கொள்ளுங்கள். வாழ்க்கையை இதற்கு என்றே அர்ப்பணித்து கண்டுபிடித்த விசயங்கள் ஆயிற்றே.  

அப்புறம் எதற்கு இதனை எழுதுகிறாய் என்று நினைக்கதோன்றும். இப்படி ஒரு விசயங்கள் இருப்பதை உங்களிடம் நான் சொல்லிவிட்டால் உங்களி்ன் மனம் அதற்கு என்ன வழி என்று தேடும் உங்களால் எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்.

ஒருவன் பங்குசந்தை சோதிடத்தை நன்றாக கணித்துதெரிந்துவிட்டால் அந்த நபருக்கு நஷ்டம் என்பதே கிடையாது. அவர் செய்யும் அத்தனை வணிகமும் லாபத்தை மட்டுமே தரும். டெக்னிக்கலில் நஷ்டம் ஏற்படும். சோதிடத்தின் மூலம் நடக்கும் வணிகத்தில் நஷ்டம் ஏற்படாது. பங்குவர்த்தகத்தில் நஷ்டம் ஏற்படவில்லை என்றால் அது எப்படிபட்ட விசயம்.

சோதிடத்தை மட்டும் பல பிளாக்கில் படித்துவிட்டு அப்படியே உட்கார்ந்துக்கொண்டால் மட்டும் போதாது. சோதிடத்தை செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தும்போது மட்டுமே பல விசயங்களுக்கு அர்த்தம் புரியும். பங்குவர்த்தகத்தில் செயல்படுத்திபாருங்கள் கோடிகளை அள்ள முடியும்.

இப்பொழுது நான் சோதிடத்தை குதிரை ரேஸ்ஸில் எப்படி பயன்படுத்துவது என்பதைப்பற்றி ஆராய்ந்து வருகிறேன். எனக்கு குதிரை ரேஸ் பார்த்தது கிடையாது. இப்பொழுது பல வீடியோ கிளிப்புகளை பார்த்துவருகிறேன். பல வெளிநாட்டு கம்பெனிகள் தொடர்புக்கொண்டு கேட்கிறார்கள். அவர்கள் தான் வீடியோ கிளிப்பை அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்காக இப்பொழுது பார்த்து வருகிறேன்.

நண்பர்களே இது அனைத்தும் உண்மை தான். நமது சோதிடத்தை வெளிநாட்டில் உள்ளவன் எப்படி நம்புகிறான் பார்த்தீர்களா. நம்ம ஆளுங்க எதிலும் சந்தேகத்திலேயே பார்ப்பது. கண்டுபிடித்தவன் அனைவரும் நம்ம ஆளுங்க பயன்படுத்துவது அயல்நாட்டுக்காரன்.

**********************************************************************************************************************

மேலும் ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லுகிறேன். ஜாதககதம்பத்திற்க்கு நிதியுதவி செய்வது ஒரு முஸ்லீம், ஒரு கிருஸ்துவர். அவர்கள் பேர்களை சொல்லவேண்டாம் என்று சொல்லியுள்ளார். என்னை சந்திக்க வரும் நபர்கள் இவர்களின் அலுவலகத்தில் வைத்து தான் பார்க்கிறேன். உங்களுக்கு பதிவுகளை தருவதும் இவர்களின் அலுவலகத்தில் இருந்து தான் வருகிறது. அடையாரில் இருப்பது முஸ்லீம் நண்பரின் அலுவலகம் கொட்டிவாக்கத்தில் இருப்பது கிருஸ்துவ நண்பரின் அலுவலகம். அவர்கள் என்னிடம் இருந்து ஒரு உதவிகூட எதிர்பார்ப்பது கிடையாது.

இதனை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களிடம் நான் நிதியுதவியை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் செய்யும் செயலுக்கு நன்றியை செலுத்துவதற்க்காக சொல்லுகிறேன். நான் செய்வது இந்து மதத்திற்க்கு சேவை. அவர்கள் நினைப்பது ஒரு நல்ல கருத்தை வெளிப்படுத்துவதற்க்கு உதவி செய்கிறேன் என்று சொல்லுகிறார்கள்.

அவர்களை நான் பார்ப்பது மதத்தை தாண்டிய ஒரு நல்ல மனம். என்னுடன் ஒரு நாளில் அதிகமாக இருப்பது இருவரில் ஒருவர் இருப்பார். நம்ம மதத்தில் இருக்கும் விசயங்களை நம்ம ஆள்களை விட அவர்கள் நன்றாக புரிந்திருக்கிறார்கள்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

தனி காட்டு ராஜா said...

// நான் செய்வது இந்து மதத்திற்கு சேவை ///
மதத்திற்கும் ஆன்மிகத்துக்கும் என்ன சம்பந்தம் சுப்பு ?
நான் இந்து நீ கிரிஸ்து என்னும் போதே அங்கே ஆன்மா செத்து விடுகிறதே ? மனம் வாழ ஆரம்பித்து விடுகிறதே ?
மதம் என்பது வெறும் ஈகோ ...

இந்தியாவிற்கு என்று ஒரு கடல் உள்ளதா என்ன ? இருப்பது ஒரே கடல் .....அதை இந்திய கடல் என்பவன் மதவாதி ...... அப்புறம் உன் எல்லை என் எல்லை என்று வரும் ... மத சண்டை இப்படி தான் ஆரம்பம் ஆகிறது :)

rajeshsubbu said...

ஒவ்வொரு கடலும் தனித்தனியாக தான் இருக்கிறது என்பதை அனைத்து மதங்களும் சொல்லுகின்றன். இன்றைய அறிவியலும் ஏற்றுக்கொண்டுள்ளது. தண்ணீர் ஒன்றாக கலப்பது போல் தெரியும் ஆனால் இரண்டு கடலும் இணைவதில்லை. இந்து மதத்தில் இருந்து தான் அனைத்தும் எடுத்து தருகிறேன். ஒரு நன்றிக்காக இந்து மதம் என்று சொல்லுகிறேன்.