Followers

Monday, March 18, 2013

பங்குசந்தை சோதிடம் 3



வணக்கம் நண்பர்களே !
                      பங்குசந்தை சோதிடத்தைப்பற்றி எழுதியவுடன் நான் எங்கு சென்றாலும் ஒரு நபராவது இதனைப்பற்றி கேட்கிறார்கள். நேற்று தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு சென்று வந்தேன். ஒரு நண்பரின் அழைப்பின் பேரில் சென்று வந்தேன். அந்த நண்பரும் இதனைப்பற்றி தான் கேட்டார். பல நண்பர்களின் விருப்பத்திற்க்காக இதனைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

நீங்கள் ஒரு மனிதனின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் அந்த ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் அதாவது அந்த கிரகம் நல்ல நிலையில் இருக்கிறதா அல்லது கெடுதல் தரும் நிலையில் இருக்கிறாதா என்று பார்ப்போம் அல்லவா அதனைப்போல் தான் பங்குசந்தை சோதிடத்திலும் நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிரகமும் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் ஆராய்ச்சி செய்த பிறகு தான் நீங்கள் முடிவு எடுக்கவேண்டும். 

பங்குசந்தை சோதிடத்தை கணிப்பதற்க்கு நீங்கள் ஜாதகம் உருவாக்கும்போது ஒன்று பிரசன்ன முறையில் கணிக்கவேண்டும். நாளை எப்படி இருக்கின்றது என்பதைப்பற்றி இன்றைக்கு கூட கணித்துக்கொள்ளலாம். அல்லது பங்குசந்தை தொடங்குவதற்க்கு முன்னால் காலையில் கூட பிரசன்னம் போட்டுக்கொண்டு கணித்துக்கொள்ளலாம். உங்களின் வசதியை பொருத்து அதனை செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மனிதனின் ஜாதகத்தை நன்றாக கணிக்க கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது மட்டுமே பங்குசந்தை சோதிடமும் உங்களுக்கு கைகொடுக்கும். 

ஒரு சில நாட்களில் அனைத்து கிரகமும் வீக்காக இருக்கும். அந்த நேரத்தில் சந்தை கீழ்நோக்கி தான் செல்லும். அதனை போல் ஒரு சில நாட்களில் அனைத்து கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும்போது சந்தை மேல்நோக்கி சென்று கொண்டுருக்கும். 

ஒரு சில நாட்களில் ஒரு கிரகம் மட்டும் நல்ல நிலையில் இருக்கும். அப்பொழுது பார்த்தீர்கள் என்றால் அந்த கிரகம் எதற்க்கு காரகம் வகிக்கிறதோ அந்த பொருள் விலை உயரும் வாய்ப்பு உருவாகும். 

பங்குசந்தை சோதிடத்தை மட்டும் கணிக்க கற்றுக்கொண்டால் மட்டும் போதாது நீங்கள் ஒரு நல்ல ஆன்மீகவாதிகளாகவும் நீங்கள் இருக்கும்போது மட்டுமே நீங்கள் பங்குசந்தையில் சோதிடம் மூலம் கணிக்கமுடியும் ஏன் என்றால் முடிவு எடுக்கும் திறன் அப்பொழுது மட்டுமே வரும்.

நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: