Followers

Friday, March 22, 2013

பங்குச்சந்தை சோதிடம் 4



வணக்கம் நண்பர்களே !
                    பங்குச்சந்தை சோதிடத்தைப்பற்றி இப்பதிவில் கொஞ்சம் பார்க்கலாம். பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு என்னிடம் கேட்கும் கேள்வி பங்குச்சந்தை சோதிடத்தை வகுப்பு எடுங்கள். நாங்கள் கட்டணத்தை தருகிறோம் என்று சொன்னார்கள். நான் உங்களுக்கு ஏற்கனவே பதிவு மூலம் சொல்லியுள்ளேன். நான் சோதிடத்திற்க்கு என்று வகுப்பு எடுப்பது கிடையாது. 

பங்குச்சந்தையைப்பற்றி சிறிய தகவலை உங்களுக்கு தந்துக்கொண்டிருக்கிறேன். பங்குசந்தை சோதிடத்தை என்ன தான் நான் கற்றுக்கொடுத்தாலும் தீர்வு எடுப்பது என்பது உங்களிடம் மட்டுமே உள்ளது. பங்கு சந்தையில் பத்து நாட்கள் சம்பாதித்து ஒரு நாளில் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை உருவாகும் அதனால் தான் முடிவு எடுப்பது கடினம் என்று சொன்னேன். முடிவு எடுக்கும் சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

நாம் பங்குச்சந்தை சோதிடத்தில் எந்த மாதிரியான பஞ்சாங்கத்தை பயன்படுத்துவது என்ற கேள்வி நம் மனதில் எழும். இது மனிதனுக்கு பார்க்கும் சோதிடம் அல்ல இன்று நடக்கும் நாளை நடக்கும் என்று சொல்லமுடியாது. ஒரு நொடி மாறினாலும் நஷ்டம் நமக்கு தலைமீறி போய்விடும். 

நான் திருக்கணிதத்தை வைத்து பங்குசந்தையை கணிக்கிறேன். இது எனக்கு கை கொடுக்கிறது. நான் முதலில் வாக்கிய பஞ்சாங்கத்தை  வைத்து கணித்து பார்த்தேன். அதில் எனக்கு சரியாக வரவில்லை பிறகு தான் திருக்கணிதத்தை வைத்து கணித்துக்கொண்டேன். எனக்கு சரியாக வருகிறது என்பதால் நான் திருக்கணித்தை பயன்படுத்துகிறேன். உங்களுக்கு எது சரியாக வருகிறதோ அதனையோ நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பங்குசந்தை சோதிடம் என்பது மிகதுல்லியமான கணக்கு அதனை நீங்கள் கணிக்கும்போது நல்ல மனநிலையி்ல் இருக்கும்போது மட்டுமே சாத்தியப்படும். மனதில் கஷ்டத்தை வைத்துக்கொண்டு இதில் ஈடுபட கூடாது. பொதுவாகவே சோதிடம் பார்க்கின்றவர்களுக்கு கஷ்டம் இருக்ககூடாது அப்பொழுது மட்டுமே சொல்லும் சோதிடமும் பலிக்கும்.

ப்ரசன்ன சோதிடத்தில் அமையும் சூழ்நிலை மிக அவசியம். நல்ல சூழ்நிலையில் நீங்கள் இருக்கும் போது நடைபெறும் சூழ்நிலையும் நீங்கள் கவனிக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: